என் மலர்tooltip icon

    இந்தியா

    வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்கிறார்  கெஜ்ரிவால்
    X

    வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்

    • இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது.
    • வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்,

    புதுடெல்லி:

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே விதித்த 25 சதவீதம் வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீதம் வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா வரி விதிப்பால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று வழியை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக கூறியதாவது:

    வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பொருட்களுக்கான 11 சதவீதம் வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது உள்ளூர் வணிகத்தை கடுமையாக பாதிக்கும். பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணியவில்லை; அவர்கள் கூடுதல் வரியை விதித்துள்ளனர். எனவே நாமும் கூடுதல் வரியை விதிக்க வேண்டும்.

    அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தால், இந்தியா 100 சதவீத வரியை அமெரிக்காவிற்கு விதிக்க வேண்டும். மொத்த நாடும் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும். எந்தவொரு நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. 140 கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா என தெரிவித்தார்.

    Next Story
    ×