என் மலர்

  நீங்கள் தேடியது "Mamata Banerjee"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு நல்ல ஜாக்கிங் உங்களுக்கு ஒரு நாளுக்கான ஆற்றலை வழங்கும்.
  • ஜாக்கிங் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். அங்குள்ள மாட்ரிட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அவர் ஜாக்கிங் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  அதில் மம்தா பானர்ஜி சேலை அணிந்து கொண்டு ஜாக்கிங் மற்றும் வாக்கிங் செல்கிறார். இது தொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புத்துணர்ச்சியூட்டும் காலை. ஒரு நல்ல ஜாக்கிங் உங்களுக்கு ஒரு நாளுக்கான ஆற்றலை வழங்கும். ஆரோக்கியமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

  அவரது கை மணிக்கட்டில் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து கொண்டு வெள்ளை நிற பருத்தி சேலை மற்றும் சாதாரண செருப்புடன் ஜாக்கிங் செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. அவருடன் அதிகாரிகள் சிலரும் ஜாக்கிங் சென்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாயில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
  • அப்போது, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியை வழி நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

  துபாய்:

  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வழியில் நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்தார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவரை சந்தித்தார்.

  அப்போது, ரணில் விக்ரமசிங்கே மம்தாவிடம், உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

  அதற்கு சிரித்தவாறே பதிலளித்த மம்தா பானர்ஜி, அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் எங்களை ஆதரித்தால், நாங்கள் நாளை ஆட்சியில் இருப்போம் என தெரிவித்தார்.

  இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாய் விமான நிலைய ஓய்வறையில் என்னை சந்தித்தார். கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். பணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். அப்போது, கொல்கத்தாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவரை அழைத்தேன். இலங்கை வருமாறு எனக்கு அவரும் அழைப்பு விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.
  • மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்காள எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் குறைவாக இருந்தது.

  மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

  எனினும், முதலமைச்சரின் வருவாயில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்து இருந்தார்.

  "மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்று உயர்த்தப்படுகிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார்
  • பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம்

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்து வரும் நிலையில், பல்வேறு செயல்களில் தொடர்ந்து குறுக்கிட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

  மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் போன்ற விவகாரங்களிலும் தலையிடுகிறார். பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம். மாநில அரசின் நிர்வாகத்தை முடக்க நினைக்கும்ஆளுநருக்கு எதிராக, ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்.

  இங்கே ஒரு கவுரவ கவர்னர் உட்கார்ந்து இருக்கிறார். அவர் கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியாக பார்ப்பேன் என்கிறார். நடுராத்திரியில் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்படுவதை எங்கேயாவது கேட்டிருப்பீர்களா?. ஒரேநாள் இரவில் முன்னாள் ஐ.பி.எஸ், முன்னாள் நீதிபதியை கொண்டு வந்துள்ளார். தன்னை ஜமீன்தார் என்று நினைத்து எல்லாவற்றையும் செய்கிறார்.

  உங்களுடைய கட்டளைக்கு ஏதாவது கல்லூரி, பல்கலைக்கழகங்கள் கீழ் படிந்தால், நிதி வழங்குவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்துவேன். அதன்பின் துணை வேந்தருக்கு எப்படி சம்பளம் வழங்குகிறீர்கள் என்று பார்ப்போம். பேராசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பீர்கள் என்று பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி உண்டு. இதில் சமரசம் கிடையாது'' எனத் தெரிவித்துள்ளார்.

  சமீபத்தில் ஏழு பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை மாநில அரசின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் நியமித்தார். இதில் இருந்து மோதல் போக்கு அதிகமாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் அதை பின்பற்றும் மக்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது.
  • நான் அமைச்சர் உதயநிதி மீதும் தமிழக மக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்து உள்ளேன்.

  சென்னை:

  சனாதன தர்மத்தை கொரோனா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அதே போல் சனாதன தர்மத்தையும் அழிக்க வேண்டும் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவரது பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்டுத்தி இருக்கிறது.

  பா.ஜனதா இந்த விவகாரத்தை கையில் எடுத்து உள்ளது. சனாதன தர்மம் தொடர்பாக இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என்ன? சோனியா, ராகுல் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி கணைகளை வீசி அரசியல் களத்தில் புயலை கிளப்பி உள்ளது.

  மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பகல் முழுவதும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்த ஒரு மணிநேரத்தில் மம்தா பானர்ஜி தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

  இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. ஏராளமான ஜாதிகளுக்கும், மதங்களுக்கும் இந்தியாவில் இடம் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது அடிப்படை. இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் அதை பின்பற்றும் மக்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது.

  அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். சனாதனத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் எத்தனையோ புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ யாராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

  சித்திவிநாயகர் கோயில் மகாராஷ்டிராவிலும், நாடு முழுவதும் மிகவும் பிரபலமானது. இதேபோல், துர்கா பூஜையும் பிரபலமானது. நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது. நாம் கோவிலுக்கும், மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறோம். எனவே எந்தப் பிரிவினரையும் புண்படுத்தும் விதமாக நடக்ககூடாது.

  நான் அமைச்சர் உதயநிதி மீதும் தமிழக மக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்து உள்ளேன்.

  உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அது போன்று அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மௌனம் காத்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, காங்கிரஸ் கருத்து தெரிவித்த பிறகு பேசினார்.
  • தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன்.

  வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்மம்" கருத்துக்கு தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும் காங்கிரஸ் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காங்கிரஸின் இளம் தலைவர்களான பிரியங்க் கார்கே, கார்த்தி சிதம்பரம் போன்றோர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, காங்கிரஸ் கருத்து தெரிவித்த பிறகு பேசினார்.

  அப்போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதான தர்மம் தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெவித்தார்.

  இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-

  உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்த வரையில், அவர் ஒரு இளையவர். என் தரப்பில் இருந்து, அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

  தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

  நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம். எங்களிடம் பல புரோகிதர்கள் உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நாடு முழுவதும் எங்களிடம் பல கோவில்கள் உள்ளன. நாங்கள் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான்
  • ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை எனப்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது

  இந்தியாவில் பா.ஜனதா ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களுக்கும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் கவர்னர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது.

  மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கும் முன்னாள் கவர்னர் ஜெக்தீப் தன்கர் இடையே கடும் மோதல் இருந்தது. பின்னர் ஒரு வழியாக ஜெக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு மாற்றலாகி சென்றார்.

  தற்போது சி.வி. ஆனந்தா போஸ் மேற்கு வங்காள மாநில கவர்னராக இருந்து வருகிறார். இவருக்கும் மம்தாவுக்கும் இடையிலும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

  ஆளுநருக்கு அதிகாரம் அதிகமா? முதல்வருக்கு அதிகமா? என்ற விவாதம் மேலோங்கி நிற்கும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனம் சி.வி. ஆனந்தா போஸிடம் பேட்டி கண்டது.

  அப்போது சி.வி. ஆனந்தா போஸ் கூறியதாவது:-

  கவர்னரின் மதிப்பிற்குரிய அரசியல் சாசனத்தின்படி முதலமைச்சர், கவர்னரின் சகா. ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் முன்முகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிதான். நியமனம் செய்யப்பட்ட கவர்னர் அல்ல.

  ஒரு கவர்னராக, நான் மாநில அரசு என்ன செய்கிறதோ, அதற்கு ஒத்துழைப்பேன், ஆனால், என்ன செய்தாலும் அதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுடைய களத்தில் பணியாற்ற வேண்டும்.

  ஒவ்வொருவருக்கும் லட்சுமணன் ரேகை என்படும் எல்லை உள்ளது. அதை தாண்டக்கூடாது. மேலும், முக்கியமானது. மற்றவர்களுக்காக லட்சுமணன் ரேகை தீட்டக்கூடாது. அதுதான் கூட்டாட்சி தத்துவம்'' என்றார்.

  முன்னதாக, மம்தா பானர்ஜி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியலமைப்பு அல்லாத செயலுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.ஜனதாவால் டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் நடத்தக்கூடும்
  • காவி கட்சி ஏற்கனவே சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் நாடாக மாற்றிவிட்டது

  மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதேச்சதிகார ஆட்சியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுவது உறுதி. பா.ஜனதா டிசம்பர் அல்லது ஜனவரிலேயே தேர்தலை நடத்தும் வாய்ப்பு உள்ளது. காவி கட்சி ஏற்கனவே சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் நாடாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வெறுப்பு நாடாக மாற்றிவிடுவார்கள்.

  அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துவிட்டனர். ஆகவே, மற்ற கட்சிகள் பிரசாரத்திற்காக அவற்றை பயன்படுத்த முடியாது.

  இவ்வாறு தெரிவித்தார்.

  மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 9 பேர் பலியானார்கள். இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, "சிலர் சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கின்றனர். சில போலீஸ் அதிகாரிகள் அதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

  பெரும்பாலான போலீசார் தங்களை பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். ஆனால் சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். மாநிலத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்
  • உங்களுடைய ஊழல் பற்றி மேற்கு வங்காள மக்களுக்கு தெரியும்

  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. இதற்காக I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற இருக்கிறது. மோடியை எதிர்க்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மம்தா பானர்ஜி உள்ளார்.

  இன்னும் ஆறு மாதத்திற்குதான் மோடி பிரதமர் பதவியில் இருப்பார். அதன்பின் மக்களால் தோற்கடிக்கப்படுவார் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார்.

  இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா முஜும்தார், I.N.D.I.A. கூட்டணியில் நீங்கள் உள்ளீர்கள், ஆனால், இந்தியா உங்களுடன் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து சுகந்தா மஜும்தார் கூறுகையில் ''நீங்கள் (மம்தா பானர்ஜி) I.N.D.I.A. கூட்டணியில் உள்ளீர்கள். ஆனால், இந்தியா உங்களோடு இல்லை. இந்தியா மோடியுடன் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். அதை மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த இயலாது. உங்களுடைய ஊழல் பற்றி மேற்கு வங்காள மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நேரம் வரும்போது அவர்கள் உங்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள்'' என்றார்.

  முன்னதாக, இமாம்களுடன் நடந்த கூட்டத்தின்போது, மதம் அரசியலுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. பா.ஜனதா தன்னைப் பற்றி என்னக் கூறினாலும் பரவாயில்லை. ஆனால், யாருடன் மதம் தொடர்பான மோதல் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூட்டணியில் உள்ளதால் டெல்லியில் உள்ள அனைத்து ஊழலுக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம்- அமித் ஷா
  • புதிய கூட்டணியான INDIA ஆட்சி அமைக்கும் என்றார் மம்தா பானர்ஜி

  டெல்லி அவசர சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றம் செய்வதற்கு முன் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ''உங்கள் கூட்டணியில் உள்ளதால், டெல்லியில் நடைபெறும் அனைத்து ஊழல்களையும் ஆதரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். ஏனெனில், கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி தேர்தலில் மெஜாரிட்டியுடன் பிரதமர் மோடி வெற்றி பெறுவார்'' எனத் தெரிவித்திருந்தார்.

  இதற்கு பதில் அளித்து மம்தா பானார்ஜி கூறியதாவது:-

  எங்களுடைய கூட்டணி புதியது. நாடு முழுவதும் எங்கள் கூட்டணி உள்ளது. உண்மையிலேயே INDIA அரசு தலைநகர் டெல்லியில் கூட்டணி அமைக்கும். டெல்லியில் நம்முடைய பாராளுமன்றம் உள்ளது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ சரியான விசயத்தை சொன்னரா என்று எனக்குத் தெரியவில்லை.

  நாடு முழுவதும் INDIA கூட்டணி உள்ள நிலையில் பேரழிவு, வகுப்புவாத பதற்றம், வேலையின்மை ஆகியவற்றில் இருந்து நாட்டை காப்பாற்ற, இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

  இந்தியா நம்முடைய தாய்நாடு. இந்த INDIA கூட்டணி, நம்முடைய தாய்நாட்டிற்காக. அதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மதிப்பு இல்லை. அவர்கள் பல வருடங்களாக கூட்டம் நடத்தியது இல்லை. முன்னதாக அவர்களுடன் யாரெல்லாம் இருந்தார்களோ? அவர்கள் தற்போது வெளியேறிவிட்டார்கள்.

  பயங்கரவாதத்தை உருவாக்குவதுதான் அவர்களுடைய பாரம்பரியம். அரசியலைப்பை உருவாக்குவது அல்ல. சில நேரங்களில் நான் அவமானப்படுகிறேன். தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள். வன்முறையை தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

  அவர்கள் வன்முறையை தேர்வு செய்து எல்லாவற்றையும் காவியாக்குவார்கள். காவி நிறத்தை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த நாடும் காவி நிறமாக்கப்பட்டால், மற்ற நிறங்கள் எங்கே போவது? நம்முடைய கடவுள், தியாகத்துடன் தொடர்புடைய தெய்வீக நிறம். அவர்கள் துன்புறுத்தலுக்காக அதை பயன்படுத்தினால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo