நாங்க தான் ஒரிஜினல்.. கட்சியை கைப்பற்ற துடிக்கும் அதிருப்தியாளர்கள் - தேர்தல் ஆணையத்திடம் மம்தா தரப்பு விளக்கம்

அனைத்து தகவல்களும் ஆணையத்திடம் ஏற்கனவே உள்ளதாக மம்தா தரப்பு கூறுகிறது.
ரிதர்பா, மம்தா
ரிதர்பா, மம்தா
Published on

மேற்கு வங்கத்தில் தேர்தல் தோல்விக்கு பின் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டுபட்டது.

உடைப்பு

திரிணாமுல் காங்கிரஸின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாகி தனித்து செயல்படுகின்றனர்.

அதிக எம்எல்ஏக்கள் உள்ளதால் அவர்களுக்கே எதிர்க்கட்சி அந்தஸ்தை அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் வழங்கியுள்ளார். அதிருப்தியாளர்களின் தலைவர் ரிதர்பா எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துடன் உள்ளார்.

இதனிடையே இவர்கள் திரிணாமுல் காங்கிரசை அதை உருவாக்கி சக்திவாய்ந்த கட்சியாக கட்டியெழுப்பிய மம்தா பானர்ஜியிடம் இருந்து முழுமையாக பிடுங்கிக்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது மறைமுகமாக பாஜக செய்யும் சதி என சாடும் மம்தா, தைரியம் இருந்தால் அதிருப்தியாளர்கள் பாஜகவில் சேர்ந்து தன்னை நேரடியாக எதிர்க்க வேண்டும் என சவால் விடுத்தார்.

ஆனால் அதை காதில் வாங்காத அதிருப்தியாளர்கள் திரிணாமுல் காங்கிரசை வளைத்துப்போடும் தீவிரத்தில் முதலில் கட்சி தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர்.

கட்சியின் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கட்சியின் தலைவர், நிர்வாகிகளை உள்ளடக்கிய அமைப்பின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக அவர்கள் வாதிட்டுருந்தனர்.

இதை பாஜகவின் கைக்கூலி என மம்தாவால் விமர்சிக்கப்படும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

விளக்கம்

கட்சி தங்களுக்கே சொந்தம் என மம்தா தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கம் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளது.

அதில் கட்சியின் தற்போதைய தலைவர், நிர்வாகிகளை உள்ளடக்கிய அமைப்பு முழுமையாக செல்லுபடியாகும் என்றும் அது 2027 வரை தொடரும் என்றும் மம்தா தரப்பு கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு அளித்த பதிலில், திரிணாமூல் காங்கிரஸ், கட்சியின் அரசியலமைப்பின்படி அமைப்பு குழுக்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்று கூறியுள்ளது.

கட்சியின் கூற்றுப்படி, 2022ல் நடைபெறும் அமைப்புத் தேர்தல்களுக்குப் பிறகு, தற்போதைய குழுவின் பதவிக்காலம் 2027 வரை அமலில் இருக்கும்.

கேள்வி

கிளர்ச்சி தரப்பின் கூற்று உண்மையாக இருந்தால், கட்சியின் தேர்தல் சின்னத்தையும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களையும் பயன்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் எவ்வாறு போட்டியிட்டார்கள் என்று மம்தா தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கேள்வி எழுப்பியது.

மேலும் ஜூன் 22 ஆம் தேதி கிளர்ச்சிக் குழுவால் நடத்தப்பட்ட சிறப்பு மாநாடு அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் மம்தா தரப்பு தெரிவித்துள்ளது. எனவே, இந்தக் கூட்டத்தின் முடிவுகளுக்கு சட்டப்பூர்வ செல்லுபடி இல்லை.

தேர்தல் ஆணையத்தின் ஓரவஞ்சனை?

அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி அமைப்புத் தேர்தல்கள் தொடர்பான ஆவணங்களை இரு அணிகளிடம் இருந்தும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

ஆனால் அனைத்து தகவல்களும் ஆணையத்திடம் ஏற்கனவே உள்ளதாக மம்தா தரப்பு கூறுகிறது. இரு கட்சிகளிடமிருந்தும் பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆணையம் முடிவு செய்யும்.

X

Maalai Malar
www.maalaimalar.com