என் மலர்
நீங்கள் தேடியது "Centre"
- சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறது
- இந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். காவலில் இருக்கும் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாங்சுக்கின் உடல்நிலை அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும், உடல்நலக் காரணங்களுக்காக அவரை விடுவிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும் "உடல்நலக் காரணங்களுக்காக வாங்சுக்கை விடுவிப்பது என்பது ஒரு 'சமூக ஊடக நாடகம்' என்று தெரிவித்தார்.
அதற்கு, பதிலளித்த நீதிமன்றம், 'ஏன் ஒரு சிறிய விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்த முயல்கிறீர்கள்? நாங்கள் கேள்விகள் கேட்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா?' எனக் கேட்டது. இதற்கு மேத்தா, 'நான் அதைச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்.
மேலும் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடாதீர்கள் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது சோனம் வாங்சுக்கின் உரைகளை மத்திய அரசு "மிக அதிகமாக" ஆய்வு செய்கிறது என்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி. வராலே அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது. மேலும் வாங்சுக்கின் அறிக்கைகள் மற்றும் போராட்ட முறைகள் குறித்து அரசு முன்வைத்த வாதங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, மகாத்மா காந்தியின் கடைசி உண்ணாவிரத உரையை மேற்கோள் காட்டியது. வாங்சுக் தனது உரையில் "காந்திய வழியில் இருந்து மக்கள் விலகிச் செல்வது கவலை அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதற்கு, முற்றிலும் இந்தியாவிற்கு எதிரான ஒன்றை நாம் மகிமைப்படுத்த வேண்டாம். அவரை தேசப்பிதாவுடன் ஒப்பிட வேண்டாம்'. 'இந்த நீதிமன்றம் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டது என்பது நாளைய தலைப்புச் செய்தியாக மாறிவிட வேண்டாம்' என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.
- பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது
- தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆளாத மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடவும், தொந்தரவு அளிக்கவும் ஆளுநர்களை "கைப்பாவைகளாக" பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கார்கே, பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும், குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரைகளை வாசிக்க வேண்டாம் என்று அவர்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
"இது கர்நாடகாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது," என்று அவர் கூறினார். தொடர்ந்து கர்நாடக அரசுக்கும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்ட கார்கே, ஆளுநர்கள் வேண்டுமென்றே மசோதாக்களைத் தாமதப்படுத்துவதாகவும், திருப்பி அனுப்புவதாகவும், மேலும் ஆட்சி நிர்வாகத்தை முடக்குவதற்காக ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாகவும் கூறினார்.
"தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அரசு நாட்டை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது," என்று அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மாற்றம் குறித்து பேசிய கார்கே, மக்களின் நலன் சார்ந்த சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் காங்கிரஸ் எதிர்க்கும் என்று கூறினார்.
"எந்தவொரு கட்சியும் எப்போதும் ஆட்சியில் இருப்பதில்லை, ஆனால் நாடு நிலையானது," என்று கூறிய அவர், பாஜக அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் விட ஆர்எஸ்எஸ் மற்றும் தனது கட்சிக்கே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
- கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
- ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்
தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. கேரள அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையைத் தொடங்கி வாசித்தார். அப்போது, கேரளாவிற்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் 2025-26 நிதியாண்டில் சுமார் ரூ.17,000 கோடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேரளா குறிப்பிடத்தக்க சமூக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகப் பாராட்டினார். வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். கேரள மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், பத்து ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் மலையாளத்தை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் உரையில் விளக்கினார். அதே வேளையில், சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் கேரளாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜனவரி 29 அன்று அவையில் தாக்கல் செய்வார்.
- நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான்.
- போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி, தென்னூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் அதிகரிப்பு குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க். அதை ஒழிக்க மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான்.
அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் மத்திய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது.
அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். மத்திய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள்.
அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை, சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். என்று தெரிவித்தார்.
- இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்
இந்தியாவின் அனைத்து மொபைல் உற்பத்தி நிறுவனங்களும் புதிய சாதனங்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சார் செயலியை கட்டாயம் பதிவிறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் செயலிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே "கட்டாயம்" என்ற முடிவை திரும்ப பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
"அனைத்து குடிமக்களுக்கும் இணைய பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மக்கள் பங்கேற்புடன் அனைத்து பயனர்களையும் பாதுகாப்பதோடு, சைபர் மோசடி பற்றிய புகார் அளிக்க உதவுகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த செயலியை நீக்கலாம் என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் ஒரு நாளைக்கு 2,000 மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த ஒருநாளில் 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்த செயலியில் குடிமக்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
சஞ்சார் சாத்தி செயலிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், செல்போன் உற்பத்தியாளர்களுக்கு முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி என்றால் என்ன?
கடந்த 2023ஆம் சஞ்சார் சாத்தி என்ற வெப் போர்ட்டலை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது அதே பெயரில் செயலியில் தொடங்கப்பட்டுள்ளது. சஞ்சார் செயலி டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு கருவி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொலைபேசியின் ஐஎம்இஐ எண், மொபைல் எண் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தகவல்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது. சஞ்சார் சாத்தி இணையதளத்தின் தகவல்படி, இந்த செயலி நமக்கு தெரியாமல் நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது.
- அதை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.
ஜெய்ப்பூர்:
சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது. அதை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
1952, 1957, 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
இந்த முயற்சி தேசிய நலனுக்கானது. தேர்தல் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை தங்கள் ஒப்புதலை அளித்தன. அதன்பிறகு அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஒரே நேரத்தில் தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்ற குழுவால் பரிசீலிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
- மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
- தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் -2 பொதுத்தோ்வு இன்று தொடங்கியது.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 225 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ- மாணவிகளுக்கு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.
இவா்களில் 14 ஆயிரத்து 641 மாணவா்களும், 15 ஆயிரத்து 247 மாணவிகளும் அடங்கும்.
281 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கு தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இன்று காலை மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
முன்னதாக மாணவ- மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், கால்கு லேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இது தவிர உடல் ஊனமுற்றோர், கண் பார்வை யற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவர்த்திக்கொன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
இத்தோ்வில் முறைகே டுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்ப ட்டுள்ளன.
இப்பணிகளில் பறக்கும் படையினா், கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியா்களும், ஆசிரியா் அல்லாத கல்வித் துறைப் பணியாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் தேர்வு மையங்களில் சென்று ஆய்வு செய்தனர்.
தேர்வை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மையங்களில் குடிநீா் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும்.
- அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி யில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் அது அகற்றிவிட்டு புதியதாக கட்டுவதற்காக சுமார் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிட்டு என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மேலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டுவின் தந்தை முத்து என்பவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த போது அரசு ராணுவ வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் என கூறப்படுகிறது. அரசு ஆவ ணங்களில் இது புறம்போக்கு நிலம் என உள்ளது.
மேலும் அதே பகுதியில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு இழப்பவர்களுக்கு புதிய இடத்தில் அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இதனால் காமலாபுரம் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
- லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது.
நாகப்பட்டினம்:
தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சார்பில் நாகப்பட்டினத்தில் கலங்கரை ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., நீட் தேர்வு, டிஎன்பிசி, காவலர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 பின் மேற்பட்ட மாணவர்களுக்கு உண்டு உறைவிட இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், முன்னாள் அமைச்சர் ஜெயபால், கலங்கரை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-
லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது எனவும், சேவை மனப்பா ன்மை உள்ளவர்கள் மட்டுமே அரசு பணிக்கு வர வேண்டும் என்றார்.
- உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
- மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கு பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த மையம் இன்று (8-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ. 2 பதிவு கட்டணமாக செலுத்தி 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
இந்த வாய்ப்பை வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார்.
- முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ் அகாடமி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்னை அடைக்கல அன்னை சபையின் தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.
- வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடித்து வருகிறது.
- டெல்லியில் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மே 27-ம் தேதி முதல் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். இதில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 9 பேரும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் 9 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 20 பேர் பலியாகினர்.
வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






