என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganwadi"

    • காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த கால தாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.
    • மூடப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த கால தாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மூடப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது.
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இச்செயல், திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது.

    திமுக அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில் (NEP), அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாமல் அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

    2021 தேர்தலின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு திமுக வழங்கிய வாக்குறுதியான (வாக்குறுதி எண் 313) "சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்" என்பது நான்காண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்துகிறேன்.

    • அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார்.
    • குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.

    இந்த வீடியோ காட்சியை கண்டு ரசித்த கேரள பொது கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, சிறுவனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி மையங்களில் வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி மாநில அளவிலான அங்கன்வாடி வகுப்புகள் தொடக்க விழா நேற்று பத்தனம்திட்டாவில் சுகாதாரத்துறை மந்திரி வீணாஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார். அதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்படி வழக்கமாக வழங்கப்படும் இட்லி- சாம்பார், பால், கொழுக்கட்டை, இலையடை, கஞ்சி-பயிறு, பாயாசம், அவித்த தானிய வகைகளுடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் மதிய உணவாக முட்டை பிரியாணி அல்லது முட்டை புலாவ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், சிறுவன் சங்குவின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மந்திரி வீணாஜார்ஜ் தெரிவித்தார்.

    • சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது
    • பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

    * அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்

    * அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    * 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    என்று தெரிவித்துள்ளார்.

    • சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
    • பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    திருவையாறு:

    திருவையாறு ஒன்றியம் மருவூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.6.5 லட்சத்தில் நெல் உளர்த்தும் களம், ரூ.11 லட்சத்தில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள்
    கழிப்பறை 4.9 லட்சம், தொகுப்பு வீடுகள் மற்றும் தனிநபர் உறுஞ்சிகுழி அமைத்தல் பணி ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த்
    பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதை தொடர்ந்து வடுகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
    ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணி, ரூ.25.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்,

    ரூ.13.65 லட்சத்தில் கனிம மற்றும் சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், மணி கண்டன்,
    ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணச் செல்வன், ஊராட்சிமன்ற த்தலைவர்கள் மணிகண்டன், விஜயபாஸ்கர்,
    ஊராட்சி செயலர்கள் பரிமேலழகன், நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ரூ. 34.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம்.
    • ரூ. 19 லட்சம் மதிப்பில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 9 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூ. 17.26 லட்சம் மதிப்பீட்டில் குரு வட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலக கட்டிடமும், பூதலூர் வட்டம் அகரப்பேட்டை ஊராட்சி, திருவையாறு வட்டம் மன்னார் சமுத்திரம் ஊராட்சி மற்றும் மேலதிருப்பந்துருத்தி ஊராட்சியிலும் தலா ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இதேப்போல் திருவையாறு வட்டம் கண்டியூர் ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடமும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இலுப்பைக்கோரை ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், சக்கராப்பள்ளி ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், திருப்பனந்தாள் வட்டம் அணைக்கரை ஒன்றியத்தில் ரூ. 19.00 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், திருவிடைமருதூர் வட்டம் முருக்கங்குடி ஊராட்சியில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ. 2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சாவூர்), பூர்ணிமா (கும்பகோணம்), கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர்தமிழ்ச்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை நாகவேலு, வேளாண்மை துறை இணை இயக்குனர்ஈஸ்வர் (பொ), நிலஅளவைத்துறை உதவி இயக்குனர்தேவராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்முத்து, ஒன்றிய குழுத் தலைவர்கள்அரங்கநாதன் (பூதலூர்), அரசாபகரன் (திருவையாறு), சுபா திருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.
    • அங்கன்வாடியை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதி வேண்டுமென அங்கன்வாடி அமைப்பாளர் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதனையேற்று அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அங்கன்வாடியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை செய்து தந்த யூனியன் சேர்மனுக்கு அங்கன்வாடி அமைப்பாளர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தினார்.
    • பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    அப்போது, வாழ்குடி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் அந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ராஜபாளையம் அருகே நடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமிபூஜையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சேத்தூர் பேரூராட்சி, வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையம் அமைக்க தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    அதன்பின்னர் ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில், வார்டு 4 போலீஸ் ஸ்டேஷன் தெரு மற்றும் வார்டு 12 அய்யனார் கோவில் தெரு ஆகிய 3 பகுதியிலும் தாமிர பரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி தலைவர் பாலசுப்பிர மணியன், துணை தலைவர் காளீஸ்வரி மாரிச்செல்வம், ஒன்றியதுணை செயலாளர் குமார், பேருராட்சி செயல் அலுவலர் வெங்கட் கோபு மற்றும் கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.
    • பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஊட்டி,

    தேவா்சோலை பேரூராட்சி 3-வது டிவிசனில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து வாா்டு கவுன்சிலா் ரசீனா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் கீா்த்தனாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட 16-வது வாா்டில் உள்ள 3-வது டிவிஷனில் உள்ள எஸ்டேட் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். அங்கன்வாடிக்கு என தனிக் கட்டிடம் இல்லை. மேலும், எவ்வித பராமரிப்பு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோா் தயங்குகின்றனா்.

    இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி இருந்தார்.

    தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். 

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும்.
    • அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி யில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் அது அகற்றிவிட்டு புதியதாக கட்டுவதற்காக சுமார் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிட்டு என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மேலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டுவின் தந்தை முத்து என்பவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த போது அரசு ராணுவ வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் என கூறப்படுகிறது. அரசு ஆவ ணங்களில் இது புறம்போக்கு நிலம் என உள்ளது.

    மேலும் அதே பகுதியில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு இழப்பவர்களுக்கு புதிய இடத்தில் அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இதனால் காமலாபுரம் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதர் பேசினார். இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ×