கேரளாவில் அங்கன்வாடியில் மாணவர்களுக்கு முட்டை பிரியாணி

அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வைத்தார்.
கேரளாவில் அங்கன்வாடியில் மாணவர்களுக்கு முட்டை பிரியாணி
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.

இந்த வீடியோ காட்சியை கண்டு ரசித்த கேரள பொது கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, சிறுவனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி மையங்களில் வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி மாநில அளவிலான அங்கன்வாடி வகுப்புகள் தொடக்க விழா நேற்று பத்தனம்திட்டாவில் சுகாதாரத்துறை மந்திரி வீணாஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார். அதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி வழக்கமாக வழங்கப்படும் இட்லி- சாம்பார், பால், கொழுக்கட்டை, இலையடை, கஞ்சி-பயிறு, பாயாசம், அவித்த தானிய வகைகளுடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் மதிய உணவாக முட்டை பிரியாணி அல்லது முட்டை புலாவ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், சிறுவன் சங்குவின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மந்திரி வீணாஜார்ஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com