search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.27 கோடி மதிப்பில் பல்வேறு துறை சார்ந்த கட்டிடங்கள்- அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    மேலதிருப்பந்துருத்தி ஊராட்சியில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில்மேகஸ்பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.27 கோடி மதிப்பில் பல்வேறு துறை சார்ந்த கட்டிடங்கள்- அமைச்சர் திறந்து வைத்தார்

    • ரூ. 34.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடம்.
    • ரூ. 19 லட்சம் மதிப்பில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 9 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூ. 17.26 லட்சம் மதிப்பீட்டில் குரு வட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலக கட்டிடமும், பூதலூர் வட்டம் அகரப்பேட்டை ஊராட்சி, திருவையாறு வட்டம் மன்னார் சமுத்திரம் ஊராட்சி மற்றும் மேலதிருப்பந்துருத்தி ஊராட்சியிலும் தலா ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இதேப்போல் திருவையாறு வட்டம் கண்டியூர் ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தக புதிய கட்டிடமும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இலுப்பைக்கோரை ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், சக்கராப்பள்ளி ஊராட்சியில் ரூ. 10.93 லட்சம் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், திருப்பனந்தாள் வட்டம் அணைக்கரை ஒன்றியத்தில் ரூ. 19.00 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடமும், திருவிடைமருதூர் வட்டம் முருக்கங்குடி ஊராட்சியில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ. 2 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சாவூர்), பூர்ணிமா (கும்பகோணம்), கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர்தமிழ்ச்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பொதுப்பணித்துறை நாகவேலு, வேளாண்மை துறை இணை இயக்குனர்ஈஸ்வர் (பொ), நிலஅளவைத்துறை உதவி இயக்குனர்தேவராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்முத்து, ஒன்றிய குழுத் தலைவர்கள்அரங்கநாதன் (பூதலூர்), அரசாபகரன் (திருவையாறு), சுபா திருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×