வாசுதேவநல்லூர் அருகே அங்கன்வாடியில் யூனியன் சேர்மன் ஆய்வு

திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. அங்கன்வாடியை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கன்வாடியில்  பொன் முத்தையா பாண்டியன் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
அங்கன்வாடியில் பொன் முத்தையா பாண்டியன் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதி வேண்டுமென அங்கன்வாடி அமைப்பாளர் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதனையேற்று அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அங்கன்வாடியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை செய்து தந்த யூனியன் சேர்மனுக்கு அங்கன்வாடி அமைப்பாளர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com