search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Geetha Jeevan"

    • மாணவ- மாணவிகளுக்கு திறன்மேம்பாடு குறைவாகவுள்ளது என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஏ.வி. பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் பயிலும் 427 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    தரமான கல்வி

    மக்களின் எதிர்காலத்தையும் எதிர்கால தலைவர்களாக உருவாகவுள்ள மாணவிகளுக்கு நல்ல முறையில் தரமான கல்வி வழங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

    அந்த வகையில் ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்து என்ற படிப்பு, அதனைத் தொடர்ந்து பல்வேறு படிப்புக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்கள் படிப்புக்கு பின்பு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது எதற்கு என்றால் பல நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் போது நம்முடைய மாணவ- மாணவி களுக்கு திறன்மேம்பாடு குறைவாகவுள்ளது என்பதால் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நமது பெற்றோர்களை போல் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். இந்த படிப்பு காலம் தான் முக்கியமான காலம். இதை கடந்து விட்டால் திரும்பவும் இதுபோன்ற மாணவ பருவம் வராது. இதை நல்லமுறையில் படிக்கின்ற காலத்தை விரையம் செய்யாமல் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்து தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு உங்களது திறமையை வளர்த்து கொண்டால் வெற்றி அடைய முடியும்.

    எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளித்து சாதனையாக்கி வீர நடைபோட வேண்டும். இந்த பள்ளியில் நான் படித்தேன் என்று சொல்லிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எஸ்.ஏ.வி. பள்ளி தலைமை ஆசிரியர் கிருபை வேல்முருகன், உதவி தலைமை ஆசிரியர் ஞானதுரை, பள்ளியின் செயலாளர் வக்கீல் சொர்ணலதா, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி சைமன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா பரிபூரணம், தாளாளர் ராஜாசிங், கவுன்சிலர் ராமுத்தம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, மீனாட்சி சுந்தரம் மற்றும் மணி, அல்பட் உள்பட ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பட்டினி போராட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
    • சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    சென்னை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணி நேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்தது.

    காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும், 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 72 மணி நேர போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சியில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ள 500 நல வாழ்வு மையங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .

    இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி தெற்கு பகுதி முத்தையாபுரத்தில் உள்ள நகர்புற நல வாழ்வு மைய திறப்பு விழாவில் தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, அரசு மருத்துவர் டாக்டர் சூரிய பிரகாஷ், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி, 54-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் முத்துவேல், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், தூத்துக்குடி மாநகர தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகனி விஜயகுமார் மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகி கள், சுகாதாரத்துறையினர், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி 40-வது வார்டுக்குட்பட்ட மரக்குடித்தெரு பகுதியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
    • பின்னர் கழிவுநீர் வடிகால் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 52 வார்டு பகுதி பொது மக்களிடம் டூவிபுரத்தி லுள்ள சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் தொ டர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

    அதிலுள்ள கோரிக்கை களை சம்பந்தப் பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப் பட்டு மக்கள் குறை தீர்க்கப் படுகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு வார்டாக நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் அவற் றையும் பொது மக்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

    இந்நிலையில் 40-வது வார்டுக்குட்பட்ட மரக்குடித்தெரு பகுதியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் கழிவுநீர் வடிகால் சீரமைப் பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாநக ராட்சி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, கவுன்சிலர் ரிக்டா மற்றும் பெல்லா, மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணை சங்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்ல இருப்பதால் தூரம் அதிகமாக இருக்கிறது பொதுமக்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
    • இதனையடுத்து தனது சொந்த செலவில் அப்பகுதி மக்களுக்காக தற்காலிக ரேஷன் கடை அமைக்கப்பட்டு அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டாக சென்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

    அதை குறிப்பெடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது புதிய துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு தீர்த்து வைக்கப்படுகின்றன.

    அதன்படி 30-வது வார்டு, 32-வது வார்டு பகுதி மக்களிடம் குறைகளை கேட்க சென்ற போது டூவிபுரம், மணிநகர், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணை சங்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்ல இருப்பதால் தூரம் அதிகமாக இருக்கிறது.

    பாலம் ஏறி, இறங்குவதால் பல முதியவர்களால் முடியாத நிலை வருகிறது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் தனது சொந்த செலவில் அப்பகுதி மக்களுக்காக தற்காலிக ரேஷன் கடை அமைக்கப்பட்டு ரிப்பன் வெட்டி அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, கந்தசாமி, கனகராஜ், ஜெயசீலி, பவாணி மார்ஷல், சந்திர போஸ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், மீனாட்சி சுந்தரம், செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவன்யாதவ், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், முத்துராஜா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, ம.தி.மு.க. மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் மகாராஜன், முன்னாள் கவுன்சிலர் அந்தோணிராஜ், நிர்வாகிகள் கிளிப்ராஜன், சுப்பையா, மணி, அல்பட், அற்புதராஜ், உணவு பொருள் வழங்கல் தாசில்தார் ஜஸ்டிஸ் செல்லத்துரை, பசுமை பண்ணை காய்கறி அங்காடி மேலாளர் ராஜதுரை, கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அந்தோணி பட்டுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பால சுப்பிரமணியன் என்பவர் தனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார்
    • ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர சைக்கிள் அவருக்கு வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், அமைச்சருமான கீதாஜீவனிடம் கேட்டு வருகிறார்.

    அந்த வகையில் தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பால சுப்பிரமணியன் என்பவர் தனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனு வழங்கிய அவரை, அங்கேயே அமர வைத்து ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர சைக்கிள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளரும் கவுன்சிலரு மான கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயசீலி, வட்டச் செயலாளர்கள் சுப்பையா, டென்சிங், செந்தில்குமார், முன்னாள் வட்டச் செயலாளர் மாரியப்பன் மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இது குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் அயராது பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவர் தான் என்பதை இந்தியா முழுவதும் நிரூபித்து வருகிறார். அதே வழியில் அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குறைகேட்பு மனு பெற்றுக்கொள்வதாக தகவல் கிடைத்தது.

    அவரிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேற்றி தருவார்கள் என்று பலரும் கூறியதன்பேரில் மனு அளித்தேன். என்னை இங்கே அமரவைத்து 1 மணிநேரத்தில் சைக்கிள் வழங்கியதை என் வாழ் நாளில் மறக்க மாட்டேன். முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவ ரங்களையும் கண்டறிந்து பேசியபோது பெண்சிங்கம் என்று கீதாஜீவனுக்கு பட்டம் சூட்டினார். அதன்பின்னர் தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து கலைஞர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை திறப்பின் போது அதே வார்த்தையை 2-வது முறையாக கூறினார்.

    சென்னையில் சமூக நலத்துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் 3-வது முறையாக பெண்சிங்கம் என்ற வார்த்தையை முதல்-அமைச்சர் கூறினார். அதற்கேற்றாற் போல் இந்த வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பணிகள் இது போல் பல நடைபெற்றுள்ளன. என்னை போன்ற ஏழை- எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்டார்.
    • உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பொன்னரகம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் சில பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்டார்.

    பின்னர் அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர் மனோ மரியதாசன், துணை செயலாளர்கள் பீரிடா லெட்சுமி, லிங்கராஜ், துரை, பொருளாளர் பரமசிவம், வட்டப்பிரதிநிதிகள் நல்லதம்பி, ஆதிநாராயணன், தமிழரசன், ஜோசப், கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா சரவணன், கவுன்சிலர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மற்றும் மணி, அல்பட், முன்னாள் அறங்காவலர் அறிவழகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா, தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பி னருமான மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது தான் தி.மு.க. வட இந்தியாவில் நிறைய பகுதிகள் இன்னும் முன்னேறாமல் உள்ளன. அங்கு இன்னும் பெண்களுக்கு, ஆதிதிராவி டர்களுக்கு கல்வி கிடையாது என்ற நிலை உள்ளது.

    மதத்துக்கு எதிரான கட்சி தி.மு.க. என குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. தற்போது சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். சமையல் எரிவாயு விலை ரூ.450-ல் இருந்து ரூ.1200 என உயர்த்தி விட்டனர். இந்த விலையை குறைக்க வேண்டுமென மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். இதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதி களில் 85 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். தி.மு.க.வில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அனைவரும் இணைந்து செயல்படும் போது நிச்சயம் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் வேலுச்சாமி ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஏ.சி.ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, காசிவிஸ்வ நாதன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துகரும்புலி, வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி செண்பக ராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதி கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி முன்பு அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்பை தொடங்கினார்.
    • வடக்கு ரதவீதி வரதராஜபுரம் சந்திப்பில் அமைந்துள்ள கால்வாய் மிகவும் தரைமட்டத்திற்கு சென்று விட்டதால் அதில் புதிதாக உயரமான கால்வாய் வழித்தடம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி முன்பு குறைகேட்பை தொடங்கினார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    பின்னர் தெப்பக்குளம், மாரியம்மன் கோவில் தெப்பம், செல்வீஜர் தெரு, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, இரண்டாம் கேட் பகுதியில் நடைபெறும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

    கழிவுநீர்

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வடக்கு ரதவீதி, கீழரத வீதி பகுதிகளில் கால்வாய்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கியுள்ளன. அதனால் கழிவுநீர் வீட்டிற்குள் வரும் நிலையுள்ளது. அதை சீர்செய்து தரவேண்டும்.

    வடக்கு ரதவீதி வரதராஜபுரம் சந்திப்பில் அமைந்துள்ள கால்வாய் மிகவும் தரைமட்டத்திற்கு சென்று விட்டதால் அதில் புதிதாக உயரமான கால்வாய் வழித்தடம் அமைத்து தரவேண்டும்.

    காய்கறி அங்காடி

    இந்த சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பண்ணை காய்கறி அங்காடியை போல் மாநகராட்சி மண்டபம் அருகில் அமைத்து தரவேண்டும்.

    புதிய ரேஷன் கார்டு மற்றும் விதவை பெண் வேலை வாய்ப்பு, குறுகிய சந்துப்பகுதியில் வீடு மட்டத்தை விட குறைவாக பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மண்டல தலைவர் கலைச்செல்வி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், நாராயணன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், செல்வக்குமார், அவைத்தலைவர் கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மார்க்கண்யடேன் எம்.எல்.ஏ ., மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தொகுதிக்கு 50 ஆயிரம் வீதம் 3 தொகுதிக்கும் 1 லட்சம் புதிய உறுப்பினர்கள் ஜூன் 3-ந் தேதிக்குள் சேர்க்க வேண்டும்.

    இதை முகாமாக நடத்தி அதில் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் என அனைத்து அணியினரும் உள்ளடக்கி செய்ய வேண்டும்.

    ஓய்வின்றி உழைக்கும் முதல்-அமைச்சருக்கு நாம் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி எம்.பி. தேர்தலில் முழுமையான வெற்றியை அடைய வேண்டும் அதுதான் நம்முடைய இலக்கு. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் பொய் பிரசாரம் செய்வதை முறியடிக்க வேண்டும்.

    குழப்பத்தை ஏற்படுத்தி வருவதையும் தடுக்க வேண்டும்.

    தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பலர் பேசி வருகின்றனர். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முதல்-அமைச்சரின் திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைய பெற்றுள்ளது. எம்.பி.யும் நம்முடைய குரலாக இருந்து தொகுதிக்காக நல்லமுறையில் பணியாற்றி வருகின்றார். 40க்கு 40 தொகுதியும் வென்றெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெருமாள், வேல்சாமி, ஜோசப் ராஜ், மாவட்ட துணைச்செய லாளர் ராஜ் மோகன் செல்வின், அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

    கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கஸ்தூரி தங்கம், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ், உமாதேவி, மோகன்தாஸ், அபிராமி நாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், நலம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னப்பாண்டியன், நவநீத கண்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, அன்புராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், சக்திவேல், செல்வகுமார், செந்தில்குமார், இசக்கிராஜா, நாராயணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஆனந்தகபரியேல்ராஜ், அருண்குமார், பிரபு,துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜான் அலெக்ஸாண்டர், ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மற்றும் ரவி, சூர்யா, அல்பட், மணி, உலகநாதன், வன்னியராஜ், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    • லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவித்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த திட்டம் குறித்து முதலமைச்சரின் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த அரசாணை வெளியாகும் போது யார்-யாருக்கு, எத்தனை பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும்.

    ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என்று சிலர் கணக்கு எல்லாம் போட்டு பார்க்கிறார்கள். எப்போதும் ஒரு திட்டத்தை தொடங்கும்போது தோராயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே ரூ.7 ஆயிரம் கோடியை வைத்து இவ்வளவு பேருக்குதான் கிடைக்கும் என்று முடிவு செய்ய முடியாது.

    அரசாணை வெளியிட்ட பின்னர் ஒவ்வொருவரிடம் விண்ணப்பம் வாங்கி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது தெளிவாக தெரியும். தேவை உள்ள இந்த ரூ.1,000 பணத்தால் பலன் பெறும் அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் பயனடைவார்கள்.

    முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள்.

    நான் எனக்கு இந்த உரிமைத்தொகையை கேட்க முடியுமா?. அதுபோன்று பெரிய பெண் தொழில் அதிபர்கள் கேட்க மாட்டார்கள். லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவித்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. எனவே தகுதி உடைய பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது.

    சென்னை:

    செ‌ன்னை‌யி‌ல் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார். மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும். முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும். தாமதம் இருக்காது.

    காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திட்டம் தொடங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும்.

    18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை.

    தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது.

    விலைப்பட்டியலை பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும். சத்துணவு பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

    முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை.

    தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர்.

    இவ்வாறு கீதாஜீவன் தெரிவித்தார்.

    ×