search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Chairman"

    • நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் கென்னடி தலைமை தாங்கினார்.
    • தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 33 சதவிகித மரங்கள் கொண்ட காடுகளை உருவாக்க மதர் சமூக சேவை நிறுவனம் பல்வேறு முயற்சியை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தூய்மை இந்தியா 2 வார கால அனுசரிப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரம் பனை மர விதைகள் நடும்பணி உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செம்மறிகுளம் அருகே உள்ள சத்யா நகரில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு இடத்தில் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் பனைவிதை நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் நடைபெறுகிறது. இதில் வள்ளியம்மாள் புரத்தை சேர்ந்த மதர் அழகு பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சரோஜா, செயலாளர் சந்திரா, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன அலுவலர்கள், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரி - நாசரேத் - சாத்தான்குளம் நெடுஞ்சா லையில் நாவல், புங்கை, வேம்பு, புளியமரம் உட்பட சுமார் 2,500 மர கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரகன்று களை நட்டு ஆரம்பித்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருச்செ ந்தூர் கோட்ட உதவி பொறி யாளர் விஜய சுரேஷ் குமார், உதவி பொறியாளர் சிபின், வரண்டி யவேல் பஞ்சாயத்த துணைத் தலைவர் அருண், சாலை ஆய்வாளர் பெத் ரமேஷ் மற்றும் நெடுஞ்சாலைதுறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லிபுஷ்பம், உதவி பொறியாளர் மார்கோனி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி மற்றும் அலுவலர்கள் முத்துகுமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர்-புளியம்பட்டி சாலையில் நடந்தது.
    • ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர்-புளியம்பட்டி சாலையில் நடந்தது.

    போட்டிக்கு அயிர வன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரிய மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை அயிரவன் பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வேலன்குளம் கண்ணன் வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம் கமலா வண்டி 2-வது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

    சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்து கொண்டனர். சிறிய மாட்டு வண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை வி.எம்.சத்திரம் பாலன் வண்டி முதலிடத்தையும், சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி 2-வது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

    தொடர்ந்து குதிரை வண்டி போட்டியில் 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அவலாபேரி பாண்டி தேவர் குதிரை வண்டி முதலிடத்தையும், வள்ளியூர் ஆனந்த தேவர் வண்டி 2-வது இடத்தையும், நெல்லை டவுன் கோகுலம் குதிரை வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

    போட்டியை காண தூத்துக்குடி, நெல்லை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் ராயகிரி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் 6, 7 -வது வார்டுகளில் காந்தி தெரு, பவுண்டு தொழு தென்வடல் தெரு, 8-வது வார்டில் சிவகாமி அம்மையார் தெரு, காமராஜர் வீதி, கிணற்று தெரு, 10-வது வார்டில் வடக்கு மாரியம்மன் கோவில் தெரு, மண்டபம் தெரு, நடுத்தெரு, 11-வது வார்டு மண்டபம் தெரு, 12-வது வார்டு தெற்கு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் பேவர்பிளாக் கல் பதித்தல் மற்றும் வாறுகால் அமைத்தல் போன்ற திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராயகிரி நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் விவேகானந்தன், தி.மு.க. வார்டு செயலாளர்கள் சின்ன மாடசாமி, செல்வராஜ், தங்கவேலு, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சேவகபாண்டியன், காளியப்பன், சின்னத்தாய், தங்கத்துரை, சிவன், பாண்டி, தமிழ்ச்செல்வி, பராசக்தி, கலைச்செல்வி, பேச்சியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் தென்மலை குமார், முருகன்சாமிநாதன், கிளைச் செயலாளர்கள் கருத்தப்பாண்டியன், முருகேசன், பாபுராஜ், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதிய கட்டிடம்

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.


    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத் தலைவர் காளீஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், கிளை செயலாளர்கள் ராமமூர்த்தி, குருநாதன், ஊராட்சி மன்ற செயலர் உமாமகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், மைதீன்கனி, முருகன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அங்கன்வாடி மையம்

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நாரணாபுரம் கிராம ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடமும், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராம், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத் தலைவர் திருமேனிராஜ், ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பிரதிநிதி அந்தோணி, அங்குராஜ், வார்டு உறுப்பினர்கள் மாடசாமி, மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • முகாமை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆ. மருதப்பபுரம் கிராமத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் ஆகியோரின் அறிவு ரைப்படி தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி வரவேற்றார். நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மணிமாறன் முன்னிலை வகித்தார்.

    அதனை தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான் சுபாஷ் வெறிநோய் குறித்து பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார். வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் வன விலங்குகள் வழியே ரேபிஸ் நோய் பரவும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

    முகாமில் நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், ஆலங்குளம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் ஊத்துமலை ரமேஷ், நெட்டூர் ராமசெல்வம், கீழக்கலங்கல் கவிநிலவன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மகேஷ், தினேஷ், உதவியாளர்கள் கீதா, பிச்சையா மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன் பெற்றனர்.

    ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜுலியட் நன்றி கூறினார்.

    • இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தில் 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    சிவகிரி:

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தில் 500 மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், பேரூர் செயலாளர் ரூபிபாலா, இளைஞரணி முனீஸ்வரன், டாக்டர் கிருஷ்ணா, செல்வம், மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ஜெயப்பிரகாஷ், நிர்வாக உறுப்பினர் துரைப்பாண்டி, வாசுதேவநல்லூர் தன்னார்வல இளைஞர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.
    • அங்கன்வாடியை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதி வேண்டுமென அங்கன்வாடி அமைப்பாளர் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதனையேற்று அங்கன்வாடியில் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அங்கன்வாடியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை செய்து தந்த யூனியன் சேர்மனுக்கு அங்கன்வாடி அமைப்பாளர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
    • வாசுதேவநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    சிவகிரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு ஆகியோர் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு தாம்பூல தட்டு, டிபன் பாக்ஸ் ஆகிய பொருட்களை சொந்த செலவில் வழங்கி சிறப்புரையாற்றினர்.

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் சாந்தி சரவணபாய் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் பற்றியும், எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான உணவு முறைகள் பற்றியும், தாயும் சேயும் நலமுடன் இருக்கக் கூடிய மருத்துவ முறைகளையும் எடுத்து கூறினார். வாசுதேவநல்லூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. அவர்களுக்கு வளைகாப்பு பொருட்கள், தாம்பூல தட்டுகள், சர்க்கரை பொங்கல், புளியோதரை சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம் ஆகிய 5 வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் அமுதா, அன்பரசி, குழந்தை திரேஸ், ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், விக்னேஷ் ராஜா, மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110 -இன் கீழ் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், ஆணையாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக மேலாளர் கருத்தப்பாண்டி, உதவியாளர் சிலம்பரசன், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் சாந்தி, கள அலுவலர், பொது விநியோக திட்டம் சார்பதிவாளர் செல்வகணேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் கிளைச்செயலாளர் பாண்டி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×