search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palam Seeds"

    • நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் கென்னடி தலைமை தாங்கினார்.
    • தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 33 சதவிகித மரங்கள் கொண்ட காடுகளை உருவாக்க மதர் சமூக சேவை நிறுவனம் பல்வேறு முயற்சியை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தூய்மை இந்தியா 2 வார கால அனுசரிப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரம் பனை மர விதைகள் நடும்பணி உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செம்மறிகுளம் அருகே உள்ள சத்யா நகரில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு இடத்தில் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் பனைவிதை நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் நடைபெறுகிறது. இதில் வள்ளியம்மாள் புரத்தை சேர்ந்த மதர் அழகு பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சரோஜா, செயலாளர் சந்திரா, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன அலுவலர்கள், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    ×