search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி பகுதியில் 2,500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
    X

    ஆழ்வார்திருநகரி- நாசரேத்- சாத்தான்குளம் நெடுஞ்சாலையில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் மரக்கன்றுகளை நட்ட போது எடுத்த படம். அருகில் உதவி கோட்ட பொறியாளர் விஜய் சுரேஷ் குமார் உள்ளார்.

    ஆழ்வார்திருநகரி பகுதியில் 2,500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரி - நாசரேத் - சாத்தான்குளம் நெடுஞ்சா லையில் நாவல், புங்கை, வேம்பு, புளியமரம் உட்பட சுமார் 2,500 மர கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரகன்று களை நட்டு ஆரம்பித்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருச்செ ந்தூர் கோட்ட உதவி பொறி யாளர் விஜய சுரேஷ் குமார், உதவி பொறியாளர் சிபின், வரண்டி யவேல் பஞ்சாயத்த துணைத் தலைவர் அருண், சாலை ஆய்வாளர் பெத் ரமேஷ் மற்றும் நெடுஞ்சாலைதுறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×