வாசுதேவநல்லூரில் யூனியன் கூட்டம்

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
வாசுதேவநல்லூரில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
வாசுதேவநல்லூரில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

சிவகிரி:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லிபுஷ்பம், உதவி பொறியாளர் மார்கோனி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி மற்றும் அலுவலர்கள் முத்துகுமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com