search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Baby Shower"

  • சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
  • அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

  படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

  படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

  அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

  கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

   

  கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.

  இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர்.
  • விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.

  சிதம்பரம்:

  கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் அம்புஜவல்லி தம்பதியினரின் மகள் பவித்ரா ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகின்றார். இதற்கு லூசி என்று பெயரிட்டு தங்களின் குடும்பத்தில் ஒருவர் போல கவனித்து வருகின்றனர்.

  தற்போது லூசி கருவுற்ற நிலையில் அதற்கு வளைகாப்பு செய்ய பழனிவேல் குடும்பத்தார் முடிவு செய்தனர். லூசியை அலங்கரித்து பூ அணிவித்து, சேரில் அமரவைத்தனர். அதற்கு தங்க நெக்லசினை அணிவித்து மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்தனர்.

  மேலும், லூசிக்கு பிடித்த உணவுகளை அதற்கு முன்பாக வைத்து, கருவுற்ற லூசி நல்ல முறையில் குட்டிகளை ஈன்ற வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர். சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர். இவ்விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.

  வளர்ப்பு பிராணிகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் உள்ள நெருக்கத்தை விளக்கும் மற்றொரு சம்பவமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. எத்தனை அறிவியல் நம்மை ஆளச் செய்தாலும் இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

  லூசியின் வளைகாப்பு நிகழ்ச்சியும் அதுபோல அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியதுடன், செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • சமுதாய வளைகாப்பு விழாவை மணிமாறன் தொடங்கி வைத்தார்.
  • திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமை தாங்கினார். மதுரை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.

  ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப்பெண் களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவு வளையல் பழ வகைகள் நெய் உடை மற்றும் சில்வர் தட்டு ஆகியவற்றை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்

  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டார அளவில் உள்ள தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக 2000 மூன்றாம் மாதம் முடிவில் 2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பகால சேவைக்காக 2000 வழங்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக இன்று திருமங்கலத்தில் செக்கானூரணி, சாத்தங்குடி, புதுப்பட்டி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப் பட்டது.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராம லிங்கம், நகராட்சி துணை சேர்மன் லதா அதியமான், ஆதவன் அதியமான், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன் தங்கப்பாண்டி, கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்
  • குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

  விழுப்புரம்: 

  விழுப்புரம் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்மலையனூர் வட்டா ரத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வளத்தி யில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிழ்ச்சிக்கு மேல்மலை யனூர் ஒன்றிய குழு தலை வர் கண்மணி நெடுஞ்செழி யன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயனா வரவேற்றார்.

  இவ்விழாவில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர்வரிசை பொருட்க ளை வழங்கி சிறப்புரையாற்றி னார்.தொடர்ந்து வளத்தி ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சார்பில் ஊட்டச் சத்துடன் கூடிய தொகுப்பி னை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். முன்னதாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கான கண்காட்சியினைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.

  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராம சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கள், சரவண குமார், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

  • பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
  • 5 வகையான உணவுகள் வாழை இலை போட்டு பறிமாறப்பட்டது.

  நாகப்பட்டினம்:

  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.

  இதில் வேளாங்கண்ணி திருப்பூண்டி பூவைத்தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.

  சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.

  வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவி டயானா சர்மிளா , கீழையூர் வட்டார திட்ட அலுவலர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.

  மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

  கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.

  • சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  கலவை:

  திமிரி ஒன்றியம் கே.பி.ஜே மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

  இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு ஆற்காடு சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்.

  இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் எஸ்.அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி.தன்ராஜ், பேரூராட்சித் தலைவர் மாலா இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பாரதி, அம்சப்பிரியா, கிரிஜா தேவி மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
  • தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  அருவங்காடு,

  தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் குன்னூரில் 61 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

  இதில் அவர்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மகப்பேறு உதவி திட்டங்கள், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  மேலும் குன்னூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரூபாய மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

  குன்னூர் லயன்ஸ் கிளப் தலைவர் அஸ்வினி தன்வானி, பொருளாளர் நளினி லட்சுமணன், செயலாளர் ஸ்ரதா, உறுப்பினர்கள கோபால், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக பொருளுதவி செய்த தி.மு.க நகரமன்ற துணை தலைவர் வாஸிம் ராஜாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர பூங்கொடி, மேற்பார்வையாளர் கண்ணம்மா, கணகாணிப்பாளர் தேவரம்மா, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

  • ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  புதுப்பாளையம்:

  செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.

  இந்த நிகழ்வில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தரபாண்டியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
  • திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செய்களத்தூர் சமத்துவபுரத்தில் சமுதாயக்கூடத்தில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

  இதில் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மானாமதுரை தமிழரசி

  எம்.எல்.ஏ. மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் அணிவித்தார். அதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த 5 வகையான உணவு வகைகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

  விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் தலைவர் லதாஅண்ணா துரை, துணை தலைவர் முத்துச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர் லாடனேந்தல் சுப்பையா, செய்களத்தூர் மகேந்திரன் மற்றும் ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • செய்யாறில் அரசு சார்பில் நடந்தது
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

  செய்யாறு:

  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

  ஒன்றிய குழு தலைவர்கள் திலகவதி ராஜ்குமார், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி வரவேற்றார்.

  ஒ.ஜோதி எம்.எல்.ஏ., எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். விழாவில் நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா பங்கேற்று கர்ப்பிணி களுக்கான ஊட்டச்சத்து, விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் தடுப்பூசி முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

  இதில் நகராட்சி கவுன்சி லர்கள் கே.விஸ்வநாதன், ரமேஷ், கார்த்திகேயன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் என்.சங்கர், எம்.தினகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர், தில்லை.வீ.சந்துரு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.