சமுதாய வளைகாப்பு விழா

திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சமுதாய வளைகாப்பு விழா
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

இதில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய குழு தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜ் மற்றும் வட்டார குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், வார்டு கவுன்சிலர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com