search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLA. participation"

    • மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் சண்முகராஜா கலையரங்கம் முன்பு நகரசெயலாளர் ராஜா தலைமையில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அவைத்தலைவர் பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டிபன், பழனிசாமி, கோபி, சிவாஜி, செல்வமணி, மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் சங்கர்ராமநாதன், குழந்தை, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இளைஞரணி துணைச் செயலாளர், மணலூர் மணிமாறன், திருப்புவனம் வக்கீல் மதிவாணன், மருது பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

    • டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    நேற்று நடந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவிற்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அந்த கும்பல் 20 பவுன் நகைகளை அபேஸ் செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய குழு தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜ் மற்றும் வட்டார குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், வார்டு கவுன்சிலர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார்

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி,போகலூர், நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    பொது மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு அரசின் மூலம் நலத்திட்ட பணிகள் குறித்த கணக்கு வழக்குகள் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டது.இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பெத்துக்காளை நன்றி கூறினார்.

    புட்டிதட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளீஸ்வரர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முருகேசன் நன்றி கூறினார்.

    மஞ்சூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைச்செல்வி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வடிவேல் நன்றி கூறினார்.

    போகலூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பழனி நன்றி கூறினார்.

    அரிய குடிபுத்தூர் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி ஒன்றியம் கலையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுபேகா தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ×