என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "temple festival"
- கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராடல் நடந்தது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
கம்பம்:
கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் காமுகுல ஒக்கலிகர்(காப்பு) சமுதாய த்தின் சார்பில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 15 நாட்க ளுக்கு முன்பு சாற்றுதலுடன் விழா தொடங்கியது.
இன்று மஞ்சள்நீராட்டு விழா நடைபெற்றது. விழாக்குழுவினர் மாலை மரியாதையுடன் ஊர்வல மாக அழைத்து வரப்பட்ட னர். நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடந்தது.
கம்பம் பார்க் திடலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மஞ்சள் நீரை ஊற்றினார்.இன்று மாலை பகவதியம்மன் அழைப்பு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாளை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் வண்டி வேசம் ஆகியவை நடைபெறுகிறது.
- அக்னிசட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
- வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டியில் பாண்டி முனீஸ்வரர் சக்தி பீடத்தின் திருவிழா கடந்த அக்ேடாபர் 24-ந்தேதி தொடங்கியது. முதல்நாள் முளைப்பாரி முத்துபரப்பல் நிகழ்ச்சியும், அதனைதொடர்ந்து 28-ந்தேதி பவுர்ணமி தினத்தில் சூலம் வேண்டும் நிகழ்வு, நவம்பர் 1-ந்தேதி அக்னிசட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
நேற்று கிடாவெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டி முனி உபாசகர் மாதேவி கவிதாம்மாள் கருப்பசாமிக்கு கிடாஆடுகளை பலியிட்டு ஆடுகளின் ரத்தத்தை குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.
இதனைதொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பெண் சாமியார் ஆட்டு ரத்தத்தை குடித்து அருள்வாக்கு கூறுவார். இதன்மூலம் பலர் பலன் பெற்றுள்ளனர். எனவே அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர் என்றனர்.
- ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார்.
- சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுத பூஜை, நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.
கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.
அப்போது ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.
அதனைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.
- காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த ராம ரெட்டிபாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5-ம் வார திருவிழாவை நேற்று (சனிக்கிழமை) விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு சாமி ஊர்வலம் நடந்தது.
அப்போது அங்குள்ள குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.
சாமி ஊர்வலம் வந்ததும் அங்கிருந்த பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர். அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில்பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அருகில் கூடியிருந்தவர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சூரி, சுரேஷ், பிரபா, பொன்மணி, உள்ளிட்ட 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பத்ரகாளி அம்மன் கோவில் கொடைவிழா-முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
சாயல்குடி
சாயல்குடி வி.வி.ஆர்.நகரில் உள்ள சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு தனித்து பிரதான பாத்தியப் பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் அம்மன் கொடை விழா, முளைப்பாரி ஊர்வ லம் நடைபெற்றது.
கிராம தலைவர் விஷ்ணுகாந்த், செயலாளர் சிவஞான குருநாதன், பொருளாளர் ஆறுமுகப் பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கிருஷ்ணன், காசிராஜா, முருகன், குரு முருகன், ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலை வகித்தனர்.
வருடாபிஷேகத்தை முன்னிட்டு முதல், 2-ம் கால யாகபூஜை நடந்தது. 5 ஏக்கர் தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சள் பானை நீர் தொட்டு ஆடுதல் நிகழ்ச்சி, பொதுப் படைக்கஞ்சி காய்த்து அம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது.
மேலும் அக்னி சட்டி, அம்மன் தேர் பவனி, பொங்கல் வைத்தல், கும்மியடித்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
- 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் பழமையான அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்தாண்டு இந்த கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான பன்றி குத்துதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுள்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் பன்றிகள் கோவிலுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தொழில் வளம் பெறுக விவசாயம் செழிக்க கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்ச்சியை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
- ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
- 2 பேர் கைது
செய்யாறு:
செய்யாறு அடுத்த பெரிய வேலி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 35). ஊர் நாட்டாண்மைதாரர்.
இந்த பகுதியில் ஓசூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடத்துவது குறித்து கடந்த 28-ந் தேதி கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதே பகுதியை சேர்ந்த இளைய குமார் (23) என்பவருடன் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஜெயகாந்தனுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென ஜெயகாந்தனை இளைய குமார் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்.
இதில் ஜெயகாந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை ஜெயகாந்தனின் அண்ணன் ஜெயக்குமார், தந்தை பெருமாள், தாயார் தங்கமணி ஆகியோர் தட்டி கேட்டனர்.
இளைய குமாருக்கு ஆதரவாக அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஜெய காந்தனின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இளைய குமாரின் உறவி னர்கள் கட்டை மற்றும் இரும்பு ராடால் ஜெய காந்தனின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த ஜெயகாந்தனின் குடும்பத்தி னரை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைய குமார், மற்றும் தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே சின்னாளப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள சக்தி காளியம்மன், முனியப்பன், ஊர்க்காவல் சாமி கோவிலில் ஆண்டுதோறும் சாமி கும்பிடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
30, 31 ஆகிய தேதிகளில் கரகம், மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று இரவு 12 மணிக்கு அழகர் தோப்புக்கு சென்று கரகம் ஜோடித்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
ேகாவில் முன்னால் ஆடு பலியிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். அன்னதானமும் நடைபெற்றது.
- முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம் பழமை வாய்ந்தது. இந்த தேவாலயத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நவநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனை ெதாடர்ந்து விசேஷ திருப்பலி கோவிலில் நடைபெற்று, அடைக்கலமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது .கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
அதனை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. விழா நிகழ்ச்சிகளுக்கு தேனி மாவட்ட அருள் தந்தை முத்து தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேவா மிஷனரி அருள் சகோதரிகள், தேனி காணிக்கை அருட் சகோதரிகள், கமலவை அருட் சகோதரிகள் மற்றும் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்ன ஊணை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றது.
அதே பகுதியை சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் (வயது 23). இவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் லேப்டெக்னிசியனாக வேலைபார்த்து வந்தார்.
திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இவரது நண்பர் தீபன் (28). இவர்கள் எதிர் வீட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன்கள் பாலகணேசன் (27), பாபு என்கிற யோகானந்தம் (42), ஸ்ரீநாத் (44) சுமன் (30) மற்றும் உறவினர் முனுசாமி (50). இந்த நிலையில் கரக ஊர்வலத்தில் மேளம் அடித்து சென்றதாக தெரிகிறது.
அப்போது இரு தரப்பினரிடையே நடனம் ஆடுவது குறித்து வாய் தகராறு ஏற்பட்டது. கை கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் மற்றும் உறவினர்கள் புருஷோத்தமனையும், தீபனையும் சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.
இதில் புருஷோத்தமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார்.
அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறினர்.
படுகாயம் அடைந்த தீபன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது சம்பந்தமாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முனுசாமி, சுமனை தேடி வருகின்றனர்.
கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்திக்குத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.