search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "community"

    • மீனவர் விடுதலை அமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
    • மீனவ சமுதாயத்தை அங்கீகரித்துவிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை மீனவ சமுதாயத்தினர் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கி வஞ்சித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் மீனவர்களுக்கு இ.பி.டி. இடஒதுக்கீடு பலன்கள், பாதிப்புகள், தீர்வு குறித்து ஆய்வரங்கள் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.

    புதுவை மாநில அமைப்பாளர் மலையா ளத்தான், முதன்மை செயலாளர் சக்திவேல் வரவேற்றனர். தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவன தலைவர் மங்கையர்செல்வன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நடராஜன், நாகராஜ், இளங்கோவன் ஒருங்கிணைத்தனர். திருமுகம், செல்வம், வெங்கடேசன், ரமேஷ், அருணாச்சலம், ஞானமணி, மாறன், கார்த்திகேயன், முருகன், செந்தில்நாதன், பன்னீர்செல்வம், கனகராஜ் உட்பட பலர் கருத்துரை வழங்கி பேசினர். நகர செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    புதுவை மக்கள் தொகையில் 3-வது பெரும்பான்மை சமூகமாகவும், ஆண்டுக்கு ரூ.300 கோடி வருமானம் ஈட்டித்தரும் மீனவ சமூகத்திற்கு புதுவை அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் 2 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்குகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது. அதீத பிற்படுத்தப்பட்டோர் என மீனவ சமுதாயத்தை அங்கீகரித்துவிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை மீனவ சமுதாயத்தினர் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கி வஞ்சித்து வருகிறது.

    எனவே கல்வி, வேலைவாய்ப்பில் மீனவ சமுதாயத்துக்கு 7.5 சதவீத இடஒதுககீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21-ந் தேதி உலக மீனவர் நாளில் இடஒதுக்கீடு மாநாடு நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள், விசைப்படகு உரிமையாளர்கள், பைபடர் படகு உரிமையாளர்கள், மீன் அங்காடி மகளிர் நிர்வாகிகள் உட்பட மீனவ சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செய்களத்தூர் சமத்துவபுரத்தில் சமுதாயக்கூடத்தில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மானாமதுரை தமிழரசி

    எம்.எல்.ஏ. மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் அணிவித்தார். அதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த 5 வகையான உணவு வகைகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் தலைவர் லதாஅண்ணா துரை, துணை தலைவர் முத்துச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர் லாடனேந்தல் சுப்பையா, செய்களத்தூர் மகேந்திரன் மற்றும் ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை வட்டார ஆட்மா தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

    கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, பாண்ட மங்கலம், பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணை தலை வர் பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் சித்ரா மருத்துவ அறிவுரைகள் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சீர்த்தட்டு, புடவை, வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.

    முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மனோஜ் நன்றி கூறினார். விழா விற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் ஜானகி, மேற்பார்வையாளர்கள் அன்னபூரணம், ராமாயி, மணிமேகலை இளநிலை உதவியாளர் சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் முகமதுதாவூத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழர்களின் வரலாறு, திருக்குறளின் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.
    • முடிவில் பொருளாளர் சத் தியநாதன் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    மொரிசீயஸ் நாட்டில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முகப்பில், 2,470 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் சிலையை புதுவை தமிழ்ச்சங்கத் தலை வர் வி.முத்து நிறுவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலந்துரை யாடல் நடந்தது.

    பல்கலைக் கழக துணைவேந்தர் ராம்பிரதாப், தமிழ்த்துறை தலைவர் ஜீவேந்திர சீமான், இந்திய மொழிகளின் இயக்குநர் அப்பாடு, இயக்குனர் குன்சால் மேனாள், தமிழ்த்துறை தலைவர் கதிர்வேல் சொர் ணம், 200 தமிழ் கோவில்களின் கூட்டமைப்பு தலைவர் குமரன் செங்கான் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தமிழ் மொழி, மொரிசீயத் தில் தமிழர் வரலாறு

    தொடர்பான பல கருத்துக்களை வழங்கி உரையாற்றினார்கள். முடிவில் வி.முத்து பண்டைத் தமிழர்களின் வரலாறு, திருக்குறளின்

    நெறிமுறைகள் என்னும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.

    மொரிசீயஸ் நாட்டின் மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் பாலன் வையாபுரி பிள்ளை தமிழ்க்கழகம் மற்றும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் குருநாத வைத்திலிங்கம், செயலாளர் லேசினி முனிசாமி, துணைத்தலைவர்கள் பொண்ணுசாமி, கமலநாதன் , வைத்திலிங்கம், பொண்ணையன், ஸ்ரீவீரராகு, ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். முடிவில் பொருளாளர் சத் தியநாதன் நன்றி கூறினார்.

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் கலந்துகொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் சமுதாய கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், பாரிவள்ளல், ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினர்.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 7 வகையான உணவுகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரிமாறினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா, வட்டார மருத்துவர் கோபி கிருஷ்ணராஜா. குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (கூடுதல் பொறுப்பு) சூர்யா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    கர்ப்பிணி பெண்களை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அட்சதை தூவி வாழ்த்தினார்.

    சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    விழாவில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள். மற்றும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசுகையில், வளைகாப்பு என்பது பண்டைய தமிழர் சடங்கு மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் சடங்கு ஆகும்.

    ஜெயலலிதா காட்டிய வழியில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. ஏழை, எளிய பெண்களுக்கு வளைகாப்பு நடத்த வசதி இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப் படுகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பை அரசின் சார்பில் நடத்த வேண்டும் என 2013-ம் ஆண்டு ஆணையிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் சமுதாய வளைகாப்பு விழா இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் மகிழ்ச்சியும், மன அமைதி யும் அடைகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறப்பதற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி மற்றும் கேட்கும் திறன் வயிற்றில் இருக்கும் போதே உருவாகி விடுவதால் அறிவு வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஏற்படுவதற்கு இந்த சமுதாய வளைகாப்பு விழா சிறந்ததாக உள்ளது. என்றார். இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வ மணி, கோபி, செந்தில்குமார், சேதுபதி, விளார்.பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், இனிப்புவகைகள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விழாவிற்கு மாவட்டகலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரகவளர்ச்சித்துறை திட்டஅலுவலர்சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமகள் வரவேற்றார்.

    அமைச்சர் பி.மூர்த்தி விழாவை தொடங்கி வைத்து 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், இனிப்புவகைகள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    இந்தவிழாவில் வட்டாட்சியர் வீரபத்திரன், செயல்அலுவலர் சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன், துணைத் தலைவர்கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அயூப்கான், ஒன்றியசெயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், கூட்டுறவு வங்கி இயக்குனர் பங்களா சி.மூர்த்தி, எல்.எஸ். அய்யாவு, ஜி.பி.பிரபு, அரவிந்தன் உட்பட பலர்கலந்துகொண்டனர்,

    இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு 5வகையான உணவுவழங்கப்பட்டது. முடிவில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றிகூறினார்.

    • அலங்காநல்லூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • சோழவந்தான் எம்.எல்.ஏ.வெங்கடேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ.வெங்கடேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் உஷாராணி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பரந்தாமன், பொதுகுழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் பஞ்சுஅழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், விவசாய அணி நடராஜன், நகரசெயலாளர் ரகுபதி, யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, வட்டார மருத்துவர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் தவமணி, பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதீஸ்வரி, சேஷா ஜெயராமன், இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகை சாதங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    • கட்டளையூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    • ஊர் மக்கள் நிதி திரட்டி 6 சென்ட் நிலத்தை ஊராட்சிக்கு எழுதிக் கொடுத்துள்ளோம்.


    வீ.கே.புதூர்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சாங்கட்டளை ஊராட் சிக்கு உட்பட்ட கட்டளையூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் ஊராட்சி ஒன்றியம், அஞ்சாங்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டளையூர் கிராமத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் சமுதாயநலக்கூடம் கட்டுவதற்காக ஊர்மக்கள் சுமார் ரூ.4லட்சம் நிதி திரட்டி 6 சென்ட் நிலத்தை ஊராட்சிக்கு எழுதிக் கொடுத்தோம்.

    ஊராட்சி நிர்வாகம் மூலம் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு கட்டிடம் கட்டி முடித்தபின் இ-சேவை மையம் என பெயரிட்டு திறப்புவிழா நடத்தப்பட்டது.

    எனவே ஊர்மக்கள் அனைவரும் இணைந்து அப்போதைய ஊராட்சி தலைவர் முன்னிலையில் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டு சமுதாய நலக்கூடமாக பயன்படுத்த அனுமதி பெற்று இதுநாள் வரையில் பயன்படுத்தி வருகிறோம்.

    இந்த சூழலில் தற்போதைய ஊராட்சி தலைவர் அந்த கட்டிடத்தை மீண்டும் இ-சேவை மற்றும் சுய உதவிக்குழு பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    எனவே சமுதாய நலக்கூடமாக தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பா. ரஞ்சித் இதை கூறியுள்ளார். #pranjith

    சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் நலண்டவே அறக்கட்டளை சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    “சாதியினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே பெரிய மருந்து இருக்கிறது. அது தான் பெரியாரும், அம்பேத்கரும். நாம் அந்த ஆர்ஜினில் இருந்துதான் வருகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் இயக்கங்களின் வேலைகள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், இப்போது பெரிய இடைவேளை உருவாகி உள்ளது.

    மக்கள் தங்கள் சாதி உணர்வை நோக்கி நகரும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. திரும்பி இதை மாற்ற வேண்டும் என்றால், மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டு அரசியல் இங்கிருக்கும் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்திருக்கிறது. குறிப்பாக எல்லா சாதிகளிலும் தனித் தனி பிரிவுகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.

    வெறுமனே தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கி, இந்த பிரிவுக்கு நீ இரு... என்று எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்கள். பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. அப்படி ஒன்றாக்கியதை தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு ‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றும் கூறி உள்ளார்.

    ×