search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kattalaiyoor"

    • கட்டளையூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    • ஊர் மக்கள் நிதி திரட்டி 6 சென்ட் நிலத்தை ஊராட்சிக்கு எழுதிக் கொடுத்துள்ளோம்.


    வீ.கே.புதூர்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சாங்கட்டளை ஊராட் சிக்கு உட்பட்ட கட்டளையூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் ஊராட்சி ஒன்றியம், அஞ்சாங்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டளையூர் கிராமத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் சமுதாயநலக்கூடம் கட்டுவதற்காக ஊர்மக்கள் சுமார் ரூ.4லட்சம் நிதி திரட்டி 6 சென்ட் நிலத்தை ஊராட்சிக்கு எழுதிக் கொடுத்தோம்.

    ஊராட்சி நிர்வாகம் மூலம் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு கட்டிடம் கட்டி முடித்தபின் இ-சேவை மையம் என பெயரிட்டு திறப்புவிழா நடத்தப்பட்டது.

    எனவே ஊர்மக்கள் அனைவரும் இணைந்து அப்போதைய ஊராட்சி தலைவர் முன்னிலையில் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டு சமுதாய நலக்கூடமாக பயன்படுத்த அனுமதி பெற்று இதுநாள் வரையில் பயன்படுத்தி வருகிறோம்.

    இந்த சூழலில் தற்போதைய ஊராட்சி தலைவர் அந்த கட்டிடத்தை மீண்டும் இ-சேவை மற்றும் சுய உதவிக்குழு பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    எனவே சமுதாய நலக்கூடமாக தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×