என் மலர்
நீங்கள் தேடியது "Collector"
- நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நுழையும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படும்.
- வனநிலங்களில் உள்ள சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் மனித - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் முன்னிலையில் பொதுமக்கள் மனித- விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நுழையும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படும். மேலும் யானைகளை விரட்ட கூடுதல் தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவார்கள். வனநிலங்களில் உள்ள சாலையோர புதர் களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக மனித விலங்கு மோதல்கள் ஏற்படும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். தனியார் எஸ்டேட்களின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களுக்கு அருகில் உள்ள சாலையோரம் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
மேலும் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் தெரு விளக்குகள் உடனடியாக அமைக்க உள்ளாட்சிததுறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் கல்விக்கடன் பெற வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
- கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனை வோர், மாணவர்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். முகாமில் 26 பயனாளி களுக்கு ரூ.5 கோடியை 11 லட்சத்து 28ஆயிரத்து 600 ரூபாய்க்கான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மாணவ-மாணவிகள் கட்டாயம் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் இப்பகுதியில் 12ம் வகுப்பு வரை நன்றாக படிக்கிறார்கள். அதன் பின் பொருளாதார நிலையை மனதில் வைத்து உயர் கல்விக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.பொதுவாக கல்வி ஒன்று தான் நிலையான சொத்து அதை எந்த நிலையிலும் மாணவப் பருவத்தில் தவற விடக்கூடாது.
வங்கிகள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்களை 100 சதவீதம் ஏற்று ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அவர்கள் கல்விக்கடன் பெற்று பயனடைய உரிய உதவிகள் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளை பொருத்தவரை கடன் வாங்கினால் திரும்பி செலுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மனப்பான்மையை கொண்ட வர்கள். அவர்களின் மனநிலையை மேன்மையடைய செய்யும் வகையில் அவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஷர்மிளா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மையப் பொறி யாளர் பிரதீப், தாட்கோ மேலாளர் தியாகராஜன், தமிழ்நாடு தொழில் முத லீட்டாளர் கழக மேலாளர் ராஜா மற்றும் அனைத்து வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட மலர் கலந்து கொண்டனர்.
- வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து கூட்டம்பகுதிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
- , 9384056231 என்ற எண்ணு க்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில்நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், பலவீனமான மரங்கள்,மரக்களைகள் அகற்றுதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ளஅடைப்புகளை அகற்றுதல், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களைஅடையாளம் கண்டு பயன்படுத்துவதை தடை செய்தல், பலவீனமான மின்கம்பங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றை கண்டறிந்து அவைகளை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீட்பு உபகரணங்களை திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணிக்க வேண்டும். உணவுப் பொருள்கள் இப்பருவமழை காலங்களில் 2 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார். மேலும், பொதுமக்கள் பேரிடர் காலத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 9384056231 என்ற எண்ணு க்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றார். தொடர்ந்து, ஆட்சியர் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்சி அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
- மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிட மிருந்து 577 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்குட் பட்ட 4 பயனாளிகளுக்கு ரூ.10,084 மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய வேளாண் இடுபொ ருட்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதகுபட்டி பைரவர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கடனுதவி வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்தநாளையொட்டி உடுமலை நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் பூளவாடி கிராமத்தில் கிருஷ்ணசாமி செட்டியார் -முத்தம்மாள் தம்பதியினருக்கு 25.9.1899ம் ஆண்டு மகனாக உடுமலை நாராயணகவி பிறந்தார். பொது உடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் ஆவார்.75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழ் திரைப்பட பாடல் உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த உடுமலைநாராயணகவி பகுத்தறிவு கவிஞர் ஆவார். இவரது பாடல்களின் சிறப்பை பாராட்டி22.4.1967 ம் ஆண்டு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாகித்யா ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.
மேலும் இவர் பாரதிதாசன், பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கவிஞர் கண்ணதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை முதலான கவிஞர் பெருமக்களுடன் நெருங்கிய நட்புண்டு சிறப்பான பணியை வெளிப்படுத்தினார்.26.6.1944 ல் திருச்சியில் நடைபெற்ற அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தில் இவரது பாடல் இடம் பெற்றது.
இவர் தமது முதுமை காலத்தில் தனது சொந்த ஊரான பூளவாடி கிராமத்தில் 23.5.1981ல் காலமானார்.இவரது நினைவாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உடுமலை நாராயணகவி மணிமண்டபம் 23.2.2001 அன்று திறந்து வைக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டைதிடல் அருகில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் உள்ள நாராயணகவியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை நகர்மன்றத்தலைவர் மத்தின், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகாலட்சுமி, அரசு அலுவலர்கள், உடுமலை நாராயண கவியின் வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
ராமநாதபுரம்
கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கம் கைத்தறி ரகங்க ளின் விற்பனையை அதிக ரிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுப டியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் ராமநாத புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்தி ரன் இன்று காலை குத்து விளக்கேற்றி முதல் விற்ப னையை தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.21.59 லட்சம் ஆகும். இந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விழா வில் வர்த்தக மேலாளர் கே.சங்கர், மேலாளர் ஆர்.மோகன்குமார், விற்பனையாளர் ஆர்.பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக ஆர்கானிக் புடவை ரகங்கள், காஞ்சீபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்பு வனம் பட்டு, கோவை மென்பட்டு, கண்டாங்கி சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், திண்டுக்கல், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், சுடிதார் ரகங் கள், நைட்டிகள், குர்த்தீஸ்கள் கண்ணை கவரும் வண்ணங் களில் வாடிக்கையாளர்க ளுக்கான கொண்டு வரப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உறுதியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேளாண்மைத்துறை யின் மூலம் தென்னை விவ சாயிகளுக்கான குறைதீர்க் கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி, தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், மேலும் தென்னை விவசாயிகளிடம் அதிக மகசூல் பெறுவதற்கான மேற்கொள்ளப்படும் பணி கள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,300 ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் மழை குறைவு ஏற்படும் பகுதிகளில் மகசூல் குறைந்துள்ளன. மேலும் பிரதான தொழிலாக இருந்து வரும் தென்னை விவசாயிகளாகிய எங்க ளுக்கு ராமநாதபுரத்தில் வணிக வளாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவிக் கையில், தென்னை விவசா யிகளின் முக்கிய கோரிக் கையான வணிக வளாகம் அமைத்திட உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். சோலார் திட்டத்தில் உலர் கலவை அமைத்திட வேளாண் பொறியியல் துறையின் மூலம் 40 சதவீதம் அரசு மானிய திட்டத்தில் அமைத்துக் கொடுக்கப்படு கிறது. தேவையான தென்னை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
மேலும் தேங்காய் பருப்பு களை நல்ல முறையில் பதப்படுத்தி மதிப்பூட்டப் பட்ட பொருளாக விற்பனை செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும். நமது மாவட் டத்தில் 2 இடங்களில் தென்னை நாற்றங்கால் பண்ணை வேளாண்மை துறையின் மூலம் பராமரிக் கப்பட்டு வருகிறது. பொது வாக மண்டபம், திருப்புல் லாணி போன்ற பகுதிகளில் விலையும் தேங்காய்க்கு மக்களிடையே நல்ல வர வேற்பு உள்ளது.
விவசாயிகள் வேளாண் மைத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நன் றாக பராமரித்து பயன் பெற்றிட வேண்டும். தென்னை விவசாயிகளின் தேவைகளை சரிசெய்திட மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையச்செயலா ளர் ராஜா மற்றும் தென்னை விவசாயிகள், அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர்.
- இதனையடுத்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தட்டார் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது வீட்டிற்கு மின் வசதி இல்லாமல் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக தகவல் கலெக்டர் செந்தில்ராஜ் கவனத்துக்கும் வந்தது. இதனையடுத்து. கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது தங்களுக்கு வீடு கட்ட நிதி தரவேண்டும் என மாணவி மற்றும அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் விருப்ப நிதியில் ரூ.2.10 லட்சம் நிதி அவர்களுக்கு வழங்கினார். அதன்பின் பேரூராட்சி சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலர் மதுரம் செல்வராஜ், துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் கலெக்டரிடம், சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகம் அருகில் காலியாக உள்ள பழைய கூட்டரங்கில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து அந்த கட்டடத்தை பார்வையிட்டு அதில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், தாசில்தார் ரதிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தூர்ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- கிடைத்த வேலையை பயன்படுத்தி விருப்பமான வேலைக்கு முயற்சி செய்து சேர வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
- எதிர்பார்க்கும் வேலைக்கு முயற்சி செய்து பயன்பெற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சி நடை பெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார்.முகாமில் மொத்தம் 2523 மாணவர்கள் பங்கேற்ற னர். இதில் தேர்வு செய்யப் பட்ட 309 பேருக்கு கலெக்டர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் முதல் வேலைவாய்ப்பு முகாம் நடந்துள்ளது. 2-வது முகாம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. முகாமில் முன்னணி தனி யார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய வருகை தருகிறார்கள். இதுபோன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நம்மை தேடி வரும் நிறு வனங்களுக்கு சென்று நம்முடைய கல்வித் தகுதிக் கேற்ப வேலைவாய்ப்பு தேர்வு செய்திட வேண்டும். சில நேரங்களில் நமது கல்வித் தகுதிக்கு இணையாக வேலை வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், முதலில் கிடைக்கும் வேலையை பயன்படுத்த வேண்டும். காரணம் அதில் ஏராளமான அனுபவங்கள் கிடைக்கும்.
நாம் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. கிடைக்கும் வேலையை பயன்படுத்தி கொண்டு பின்னர் எதிர்பார்க்கும் வேலைக்கு முயற்சி செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்கள் கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள் என்று கலெக்டர் கூறினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழகம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப் பெரிய கடமை இருக்கிறது.
நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி விநா யகர் சதுர்த்தி விழா வினை கொண்டா டும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்ப தற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வழிமுறைகள்
பொதுமக்கள் களி மண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டது மான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகா ப்பான முறையில் கரைக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் வகுத்துள்ள படி விதிமுறை களை கடைபிடிக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வா கத்தினால் கடையம் ராமநதி அணை, ஆழ்வார் குறிச்சி கடனா ஆறு, யானை பாலம் அருகில் சிற்றாறு, இலஞ்சி, தென்காசி, குற்றாலம், செங் கோட்டை குண்டாறு அணை, ஹரிகர ஆறு, லாலா குடியிருப்பு, புளி யரை, அச்சன்புதூர் அனுமான் ஆறு, கரிசல் குடியிருப்பு அருகில் பாவூர்சத்திரம் குளம், பாவூர்சத்திரம், கடைய நல்லூர் தாமரை குளம், மேல கடையநல்லூர், கடையநல்லூர் கருப்பாநதி அணை, நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், ராயகிரி பிள்ளையார் மந்தையாறு ஆகிய இடங்களில் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்கா தவாறு கொண்டா டும்படி பொது மக்கள் கேட்டுக ்கொள்ள ப்படு கிறார்கள். சிலைகள் வைப்பது, கரைப்பது தொடர்பான சந்தேகங்க ளுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிர ண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் ஆகி யோரை நேரில் அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.