கலெக்டர் தலைமையில் திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது

அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 29-ந்ேததி மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் : 20 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடை பெறவுள்ளது. கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (மிமீஸ் போர்ட்டல்)பதிவு செய்து கொள்ளவும். வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com