என் மலர்

  நீங்கள் தேடியது "Notification"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வருகின்ற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
  • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

  அரியலூர்,

  அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்றோர், உதவித் தொகை பெற்ற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் மேல்நிலை தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து புதுப்பித்த இருக்க வேண்டும்.எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2022 அன்று 45 வயதிற்குள்ளும், இதர அனைத்து வகுப்பினரும் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது.தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை. பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் வரும் 28-ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதிய விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் அல்லது இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டவாளத்தில் பொறியியல் பணி காரணமாக திருச்சியில் 3 நாட்களுக்கு 7 ரெயில்கள் ரத்து செய்யபட உள்ளன
  • இதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது.

  திருச்சி:

  சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் தண்டவாள பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 14, 21, 28 ஆகிய தேதிகளில் கீழ்காணும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கரூர்- திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. சேலம்- விருதாச்சலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மேற்கண்ட 3 நாட்களுக்கு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலை புறப்பட்டு திருச்சி வரை வரும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் மேற்கண்ட நாட்களில் கரூர்-திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே போல மறு மார்க்கத்தில் மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் திருச்சி- கரூர் வரை மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கண்ட நாட்களில் திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்ய ப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
  • மானிய விலையில் விவசாய நிலம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அரியலூர்,

  அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனம் மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.இத்திட்டத்தில் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
  • பயிற்சிக்கு பின் நிச்சய வேலை

  அரியலூர்:

  அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனைத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பி.டி.சி ஏவிஷேசன் அகடாமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது.18 முதல் 25 வயது நிரம்பிய, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பயிற்சி மூன்று மாதம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000த்தை தாட்கோ வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் புகழ் வாய்ந்த தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.எனவே இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை 106வது பிறந்தநாள்: திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கபடும் என முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார் நாளை 106வது பிறந்தநாள்: திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கபடும் என முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்
  • நாளை காலை 10.30 மணி அளவில் திருச்சி கோர்ட்டு அருகிலுள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

  திருச்சி:

  திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதா–வது:-அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.–ஆரின் 106-வது பிறந்த நாளான நாளை 17-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணி அளவில் திருச்சி கோர்ட்டு அருகிலுள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.அதுசமயம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி–னர்கள், முன்னாள் சட்ட–மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செய–லாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட செயலாளர்கள், நிர்வா–கிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாண–வர் அணி, அண்ணா தொழிற் சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு இலக்கிய அணி மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் கோட்டத் தலைவர்கள், முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சா–ளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலைப்பிரிவினை சேர்ந்தவர்கள், செயல்வீ–ரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜெயங்கொண்டம் நகராட்சியில் புகையில்லாமல் போகி கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
  • நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

  ஜெயங்கொண்டம்:

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். அதில் ஏற்படும் குப்பைகளை புது இடங்களில் கொட்டாமல் தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து அவர்களிடம் தர வேண்டும். போகிப் பண்டிகை அன்று குப்பைகளை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். மேலும் நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்
  • நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023ம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் மூலமாக வருகிற 9ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 90 ஆயிரத்து 338 குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கும், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையிலும், தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறை மூலமாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை வருகிற 8ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும். எனவே, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல நியாய விலைக்கடைக்கு வர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கும் பணியை குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சீராக விநியோக செய்வதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், வட்ட அளவிலும் கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மின்னனு குடும்ப அட்டைதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான தகவல்கள் ஏதுமிருப்பின் தொடர்பு கொண்டு ெதரிவிக்கலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்துள்ளது.
  • மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

  சீர்காழி:

  சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு செய்தார்.மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

  கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

  இதனையடுத்து மீண்டும் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் எண் இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

  இதனிடையே சீர்காழி வாணிவிலாஸ் துவக்கப்பள்ளியில் மின்சாரவாரியம் சார்பில் மின் நுகர்வோர்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது.

  இந்த பணியை மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசித்ரா, உதவி கணக்கு அலுவலர் (பொ) செந்தாமரை, உதவி பொறியாளர் முத்துக்குமார், மின்வாரிய பணியாளர் ஆனத்தக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
  • விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே மாதம் 1ம்தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
  • தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும்

  சென்னை:

  மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான (கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.

  மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

  அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31-ந்தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  பொது, ஓ.பி.சி., இ.டபுள்யு.எஸ். பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தவேண்டும்.

  கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நகர-வட்டார தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

  ராஜபாளையம்

  விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் 3 நகர தலைவர்கள், 10 வட்டார தலைவர்கள் பதிவிகள் உள்ளது. இந்த தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த புதிய தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையினால் அங்கீகரி க்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நகர, வட்டார காங்கிரஸ் தலைவர்களை மாவட்ட தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

  இதில் ராஜபாளையம் நகரத் தலைவராக சங்கர் கணேஷ், சாத்தூர் நகர தலைவராக அய்யப்பன், ஸ்ரீவில்லி புத்தூர் நகர தலைவராக வன்னியராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  அதேபோல் ராஜ பாளையம் மேற்கு வட்டார தலைவராக கணேசன், ராஜபாளையம் கிழக்கு வட்டார தலைவராக கோபால கிருஷ்ணன், வெம்பக்கோட்டை கிழக்கு வட்டார தலைவராக கணேசன் வெம்பக்கோட்டை வடக்கு தலைவராக செல்வக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவராக பவுல்ராஜ், சாத்தூர் மேற்கு வட்டார தலைவராக கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு வட்டார தலைவராக பாலகுருநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு வட்டார தலைவராக முருகராஜ், வத்ராயிருப்பு மேற்கு வட்டார தலைவராக லட்சுமணன், வத்ராயிருப்பு கிழக்கு வட்டார தலைவராக சுப்பிரமணியன் ஆகியோர் அறிவிக்கபட்டுள்ளனர்.

  இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram