search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child marriage"

    • குழந்தைகள் உரிமை காக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் தொடங்கியது.
    • விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.

    தூத்துக்குடி:

    குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் உரிமை காக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் தொடங்கியது.

    அமைச்சர் கீதாஜீவன்

    பேரணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி மாநகாட்சி வளாகத்தில் நிறைவடைந்தது.பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டுதேறும் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்புத்துறை மூலம் குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளின் உரிமைகளை காத்திடும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும், குழந்தைகளின் உரிமையை காக்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    குழந்தை திருமணம்

    மேலும், சமூக பாதுகாப்பு துறை, காவல் துறை ஆகியவை இணைந்து போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்கவும், இழப்பீடு தொகை விரைந்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை திருமணம் செய்வோர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவர். மேலும், குழந்தை திருமணத்தை தடுக்க தொடர் நடவடிக்கைமே ற்கொள்ளப்பட்டு வருகிறது. அது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு சத்துணவில் தரமான முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் உமா, சிறப்பு சிறார் காவல் அலகு உறுப்பினர் வக்கீல் சொர்ணலதா, தி.மு.க. பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், கல்லூரி மாணவ, மாணவிகள், சைல்டு லைன் பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்
    • காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    காங்கயம்:

    குழந்தை திருமண ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்.இதில் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகும் முன்பே திருமணம் செய்யக்கூடாது.குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு, அவா்களின் பள்ளிக் கல்வி தொடா்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.இதைத்தொ டா்ந்து, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், ஆசிரியா்கள், காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    • செய்யது ஹமீதா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • குழந்தை திருமணங்களுக்கு வறுமை, கல்வியறிவின்மையே காரணமாகும் என வட்டார மருத்துவ அலுவலர் பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சிறுவயது திருமணங்களால் ஏற்படும் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடத் தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருப்புல் லாணி வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் வேளா னுர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், குழந்தை திருமணம் பழங்கா லத்திலிருந்தே நடைமுறை யில் இன்றும் சில மாநிலங்க ளில் இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவர் களின் உடல் மற்றும் மன முதிர்ச்சிக்கு முன்பே திரும ணம் செய்து வைக்கப்படுகி றார்கள்.

    குழந்தைத் திருமணங்க ளுக்கான காரணங்கள் வறுமை, வரதட்சணை, கலாச்சார மரபுகள், மத மற்றும் சமூக அழுத்தங்கள், கல்வியறிவின்மை ஆகிய வையாகும். குழந்தைத் திரும ணத்தை முடிவுக்குக் கொண்டு வர, இந்தப் பிரச்சினையை பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரிடையே ஏற்படுத்த வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட சிறு வயது திருமணத்தால் சிறுமி யர்களுக்கு கல்வியும், பொருத்தமான வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. சிறு வயதிலேயே முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தினால் தாயும், சேயும் மகப்பேறின் போது இறக்கும் சதவிகிதம் மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கல்லூ ரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுலை மான் சதாம் உசேன் மற்றும் முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிறுமியை அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்து கொண்டார்
    • அக்கம்பக்க த்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சிறுமியின் தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க காளியாபுரத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த காளியாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி(வயது21) என்பவர் சிறுமிக்கு அறி முகம் ஆனார்.

    பின்னர் அவர் சிறுமியை அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்து கொண்டார். இந்த நட்பு காதலாக மாறியது. 2 பேரும் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவரவே அவர், சிறுமியை கண்டி த்தார். இது தொடர்பாக சிறுமி, வாலிபரிடம் தெரி வித்துள்ளார்.

    இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கருப்புசாமியுடன் சென்று விட்டார். பின்னர் அவர் சிறுமியை அந்த பகுதியில், உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொ ண்டார். மேலும் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்க த்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்ப த்திரிக்கு அழைத்து சென்றனர் 

    • மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் காரிமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த 3-ம் தேதி இராயக்கோட்டை அருகில் உள்ள நாகனுர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.

    இதுகுறித்து மாணவி இன்று காரிமங்கலம் போலீசில் நாகனுரை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 26) மற்றும் அவரது உறவினர்களான வள்ளி (45), சின்னராஜ்( 55), லட்சுமி ( 40), ஜமுனா ( 45), நவீன் ( 28) ஆகிய 6 பேர் மீது காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது.
    • வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் இளம் வயது பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதும் அதனால் இளம் வயதி லேயே குழந்தை பெறுவதும் தொடர் கதையாகி வருகிறது.

    பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் திருமணம் நடத்த வேண்டும் என்பது சட்டம். பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என்று மசோதா மத்திய அரசின் சட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

    உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளில் பெரும்பாலும், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநி லங்களை சேர்ந்தவர்கள்.

    குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பி ரதேசத்தில் இருப்பதாக யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதி களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் திருமணமான டீன் ஏஜ் பெண்கள் பிரசவத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதே போல் மாவட்ட த்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் 18 வயதுக்குட் பட்ட பெண்களுக்கும் திரு மணம் நடத்துவது அதிக ரித்துள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் குழந்ைத திருமணங்கள் அதிக ரித்துள்ளன.

    சமீபத்திய ஆய்வில் ஊரக மற்றும் நகர்ப்பு றங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3338 டீன் ஏஜ் பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும் அரசு தாலுகா மருத்துவ மனை, அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை களில் நடக்கும் டீன் ஏஜ் பிரசவங்களை கணக் கிட்டால் அதன் புள்ளி விவரங்கள் இன்னும் அதிகரிக்கும்.

    குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • போலீசார் கடும் எச்சரிக்கை
    • ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர்களுக்கு குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதோடு அதனை குறைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி திருமணம் நடத்த மண்டபதிற்கு வரும் பெற்றோர்களிடம் மணப்பெண்ணிற்கு 18-வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும்.

    மேலும் மண்டப உரிமையாளர்களாகிய நீங்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.

    அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நீங்களும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    தொண்டி

    தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணத்தில் குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. இதற்கான பிரசார வாகனத்தை திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசாரமானது மாவட்ட எல்லையான எஸ்.பி.பட்டிணத்தில் தொடங்கி காரங்காடு வரையிலான 14 பஞ்சாயத்திலுள்ள 64 கிராமங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் டி.சி.பி.யூ சமூகப்பணியாளர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது.
    • பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சரஸ்வதி கூட்டத்தை தொடங்கிவைத்து தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். வட்டார வளமைய ஆசிரியர் பயி ற்றுநர் கவிதா வரவேற்றார்.

    கூட்டத்தில மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி பேசுகையில், கொரோனா பெருந்தொற்றினால் மாண வர்களுக்குஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெ ய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது. பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் நீங்கள் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும். மாணவர்களின் வாசித்தலை மேம்படுத்த குழந்தைகளுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார ஒருங்கி ணைப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

    ஜோலார்பேட்டை அருகே 17 வயது சிறுமியை குழந்தைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் அவரது சகோதரி மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் ராஜீவ் என்பவர் கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இதனால் திருப்பூர் பகுதியில் உள்ள ராஜீவ் சகோதரி ராஜேஸ்வரி அவரது வீட்டில் கடந்த 26-ந்தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும் குழந்தை திருமணம் செய்து வைத்த அவரது சகோதரி ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அக்காள், தம்பியை தேடி வருகின்றனர்.
    அனைவருக்கும் குழந்தை திருமண தடுப்பு, பாதுகாப்பு பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம்:

    நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார்.

    இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் எஸ்.சுசீலா, உதவி விரிவாக்க அலுவலர்கள் சி.ஜோதியம்மாள், செ.அம்மாசை தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம், பெண் குழந்தைகளுக்கு திருமண வயது முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட வேண்டியதன் அவசியம், கட்டாய திருமணத்தை தடுக்கும் வழிமுறைகளை மாணவிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.

    முடிவில் அனைவருக்கும் குழந்தை திருமண தடுப்பு, பாதுகாப்பு பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படடது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள்.

    பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி, குடும்ப வன்முறை, தவறாக நடத்தப்படுதல் மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல் போன்ற குழந்தைகளின் அனைத்து உரிமைகளும், குழந்தைத் திருமணத்தின் மூலம் அப்பட்டமாக மீறப்படுகின்றது;

    கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும்; அடிக்கடி கருவுற வாய்ப்பு அதிகம்; இது உடல் நலத்தைப் பாதிக்கும்; உடல் பலவீனமடைவதால் மருத்துவச் செலவு அதிகமாகி வறுமைக்கு வழிவகுக்கும்; ரத்த சோகை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும்.

    பிரசவத்தின் போது சிக்கலான பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, சிசு மரணம் மற்றும் தாய் மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் அதிகம்; எடை குறைவான குழந்தைகள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல்; மனவளர்ச்சி மற்றும் பாலியல் முதிர்ச்சி முழுமையடையும் முன் திருமணம் செய்வதால், கணவர் மற்றும் குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வதில் பிரச்சினைகள் அதிகமாகும்;

    இது குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி இரண்டாவது திருமணத்திற்கு வழிவகுக்கும். இதனால் அவர்களின் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள்; குடும்பப் பிரச்சினையில் தற்கொலை, கொலை நிகழ்வதால் பெண்கள் இளம் வயதில் விதவையாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்களாகவும், குழந்தைகள் ஆதரவற்ற அனாதைகளாகவும் ஆகிறார்கள். இது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு வழிவகிக்கிறது; கல்வி மறுக்கப்படுவதுடன், அவர்களின் தன்னம்பிக்கை குறையும். குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் செய்ய முடியாது போன்ற எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    ×