search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smriti Irani"

    • ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும்.
    • சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை.

    2014 தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி- ஸ்மிரிதி இரானி போட்டியிட்டனர். ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். அப்போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.

    தற்போது ஸ்மிரிதி இரானி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார்.

    வயநாட்டில் வருகிற 26-ந்தேதி வாக்குப்பதி நடைபெற இருக்கிறது. அமேதியில் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி குடும்பத்தை மாற்றிவிட்டார் என ஸ்மிரிதி இரானி என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

    ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும். சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் 26-ந்தேதிக்குப் பிறகு அவர் இங்கு வரும்போது, நம்மை மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்வார்.

    அவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்பது தெரிந்த பிறகும், ராமபக்தர்கள் அவரை ராம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைத்தனர். அமேதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் (எம்.பி.) ஆணவத்தால் அழைப்பை மறுத்தது வருத்தமளிக்கிறது" என்றார்.

    ராகுல் காந்தியை விமர்சனம் செய்திருந்த நிலையில், அமேதி தொகுதிக்காக ஸ்மிரிதி இரானி செய்த ஐந்து பணிகளை தெரிவிக்கட்டும் என காங்கிரஸ் தலைவர் சவால் விட்டுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
    • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவாக, மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று பிரசாரம் செய்தார்.

    வடசென்னை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதி நம்மாழ்வார்பேட்டை சந்தை பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

    பேரணியின்போது, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாங்கள் ஓட்டு கேட்டு வருகிறோம். ஆனால், தலைமை இல்லா 'இந்தியா' கூட்டணி, யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியுமா?

    கேரளாவில் இந்தியா கூட்டணியினர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். ஆனால், டெல்லியில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கின்றனர். நாட்டிலேயே கலாசாரம் மிக்க பூமியாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், தி.மு.க. சனாதன தர்மத்தை எதிர்க்கிறது. இதற்கு நாடே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களை சொல்ல முடியுமா? பா.ஜனதா தொண்டர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க கடுமையாக பணியாற்ற வேண்டும். பா.ஜனதாவுக்கு மக்கள் ஓட்டு போடுவதற்காக நாம் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பிரசாரத்தின்போது வட சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு 5 கிலோ எடை கொண்ட மீன் வழங்கி வரவேற்றார்.

    இதேபோல் திருவள்ளூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு ஆதரவு திரட்டி திருநின்றவூரில் ஸ்மிரிதி இரானி பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்
    • பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார்.

    நாக்பூர்:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடியை குடும்பம் இல்லாதவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சமூக வலை தள பக்கத்தில் தங்களது சுயவிவர குறிப்பில் மோடி குடும்பம் என சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கடுமையாக தாக்கி பேசி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாரதிய ஜனதா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-


    பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்த தீவன திருடர் (லாலு பிரசாத் யாதவ்) பிரதமர் மோடிக்கு குடும்பம் எதுவும் இல்லை என கூறி உள்ளார். நான் அவரிடம் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எல்லாம் மோடியின் குடும்பம். 140 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடி குடும்பம்.

    யாராலும் அவரது தலைமுடியை கூட தொட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார்.
    • வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்’ என்று கூறினார்.

    அமேதி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.

    அங்கு மீண்டும் போட்டியிட தைரியம் உண்டா? என ராகுல் காந்திக்கு ஸ்மிரிதி இரானி சவால் விட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார். ராம் லல்லாவின் அழைப்பை அவரும் அவரது குடும்பமும் நிராகரித்தது. இதனால் அமேதி மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்' என்று கூறினார்.

    அமேதியில் ராகுல் காந்தியின் யாத்திரையை வெறிச்சோடிய தெருக்கள்தான் வரவேற்றதாக கூறிய ஸ்மிரிதி இரானி, இதனால் சுல்தான்பூர் மற்றும் பிரதாப்கரில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை வரவழைத்து வந்திருப்பதாகவும் கிண்டல் செய்தார்.

    • ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல்.
    • ஸ்மிரிதி இரானியிடம் புகார் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுபாடு.

    பா.ஜனதா கட்சியின் உத்தர பிரதேச மாநில அமேதி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சொந்த தொகுதிக்கு சென்றுள்ளார்.

    நேற்று அவர்கள் தொகுதிகளை சேர்ந்தவர்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர் புகார் அளிக்க வந்திருந்தனர். அவர்கள் நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில்தான் உள்ளது. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    ஸ்மிரிதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி ஆய்வாளரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். அதுவும் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.

    மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்ய நாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை உடனடியாக பெற வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு பீகார்.
    • கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு.

    இந்தியாவில் பீகார் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புகள் அறிவிக்கப்பட்டது. பீகார் அரசின் இந்த அறிவிப்பு அன்றைய காலத்தில் பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டது. மேலும் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பீகார் பெற்றது.

    அதேபோல் ஜன 19, 2023 கேரள அரசு, உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றது.

     


    இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்புகளை வழங்குவதற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது,

    'இன்றைய நிலையில் பெண்கள் அதிகளவிலான பொருளாதார வாய்ப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் எனது தனிப்பட்ட கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன். மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு அல்ல, அது ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் இயல்பான பகுதியாகும்.'

    'மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தேவையற்றது'என்று அவர் கூறினார்.

    மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைக்கு ஒரு பெண் மத்திய அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • பாரத தாய் கொலை செய்யப்பட்டதாக கூறிய ராகுலின் பேச்சை நாடு மன்னிக்காது.
    • காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் ஒருங்கிணைந்து இயங்க தொடங்கி உள்ளன. பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக "இந்தியா" கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முதல் நாள் விவாதம் நடைபெற்றது. மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள்.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 2-வது நாள் விவாதம் நடந்தது. 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் வழக்கம் போல கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது கடும் கூச்சல் நிலவியதால் சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

    நேற்றே பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ராகுல் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை பூர்த்தி செய்யும் வகையில் ராகுல்காந்தி எதிர்க்கட்சிகள் சார்பில் எழுந்து பேசினார். தொடக்கத்திலேயே அவரது பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    என்றாலும் கடும் கூச்சல்-குழப்பங்களுக்கு மத்தியில் ராகுல் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    என்னை மீண்டும் எம்.பி.யாக அமர்த்தியதற்கு முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடைசியாக நான் பேசிய போது அதானி பற்றி குறிப்பிட்டேன். இது உங்களை காயப்படுத்தி இருக்கலாம் உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டு இருக்கலாம். அந்த வலி உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

    அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் உண்மையைத்தான் பேசினேன். தற்போது நான் அதானி பற்றி பேசமாட்டேன். இதனால் பா.ஜனதா உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம். மணிப்பூரை பற்றி தான் நான் பேசுவேன்.

    (அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜனதா எம்.பி.க்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.)

    நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருங்கள். நான் எனது மனதில் இருந்துதான் பேசுகிறேன். நான் பேசத் தொடங்கியவுடன் சிலர் வெறுப்புடன் கோஷமிட்டனர்.

    நான் 130 நாட்கள் ஒற்றுமை இந்தியா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டேன். ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு மக்களுடன் யாத்திரை செய்தேன். இந்த யாத்திரையில் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். யாத்திரையின் போதும், அதன் பிறகும் நிறைய பேர் என்னிடம் ஏன் யாத்திரை செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாட்டை புரிந்து கொள்வதற்காகவே யாத்திரையை தொடங்கினேன்.

    யாத்திரையின்போது விவசாயி ஒருவரிடம் பேசியபோது, அவரது இதயத்தில் இருந்த வலி என் இதயத்துக்கு இடம் மாறியது. அன்பை செலுத்தவே நடைபயணம் மேற்கொண்டிருப்பதை பிறகு புரிந்து கொண்டேன். என் யாத்திரை இன்னும் முடியவில்லை.

    நான் நம்பும் விஷயத்துக்காக உயிரை விடவும், பிரதமர் விரும்பினால் நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். இதயத்தில் இருந்து பேசும் பேச்சு இதயங்களை சென்றடையும் என்பதால் இதயத்தில் இருந்து பேச போகிறேன்.

    மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் ஏன் செல்லவில்லை? ஆனால் நான் சென்றிருந்தேன். அங்கு முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் மணிப்பூர் நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் பிரதமர் அங்கு செல்லவில்லை. நிவாரண முகாமில் இருந்த பெண்ணிடம் பேசியபோது, தன் கண் முன்னே ஒரே மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

    மற்றொரு முகாமில் பெண்ணிடம் உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது அவர் பேச முடியாமல் மூர்ச்சை அடைந்தார். நினைத்து பார்க்கவே முடியாத பயங்கரமான சம்பவங்கள் பெண்களுக்கு நடந்துள்ளது.

    மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ஆனால் அதை செய்யவில்லை.

    இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றிருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணமாகி உள்ளது.

    பாரத தாய் மணிப்பூரில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்றிருக்கிறீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. நீங்கள் தேச துரோகிகள்.

    ராவணனின் அகங்காரத்தால் இலங்கை எரிந்தது. அரசின் அகங்காரத்தால் மணிப்பூர், அரியானா போன்ற மாநிலங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் பேச்சை ராவணன் கேட்டுக்கொண்டு இருந்தார். தற்போது அமித்ஷா மற்றும் அதானி பேச்சை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு இருக்கிறார். ராவணன்கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராகுல்காந்தி பேசிக் கொண்டிருந்தபோது பா.ஜனதா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பிய படியே இருந்தனர். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பா.ஜனதா உறுப்பினர்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினார்கள். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராகுல், ராகுல் என்று கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தினார்.

    அதை தொடர்ந்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதாவது:-

    ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மிக மோசமான பேச்சை நாம் இங்கு கேட்டோம். அதை கண்டிக்கிறேன்.

    நீங்கள் இந்தியா கிடையாது. ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான். எதிர்க்கட்சியினர் ஊழலை பிரதிபலிக்கின்றனர் என்பதால் அவர்கள் இந்தியா அல்ல. ஊழலை பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை பாருங்கள்.

    பாரத தாய் கொலை செய்யப்பட்டதாக கூறிய ராகுலின் பேச்சை நாடு மன்னிக்காது. பாரத தாயை அவர் இழிவுப்படுத்தி விட்டார். மணிப்பூர் துண்டாடப்படவில்லை. அது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

    பாரத தாயை கொன்றதாக ராகுல் காந்தி பேசும் போது எதிர்க்கட்சியினர் மேஜையை தட்டி ஆமோதித்தனர். இதை ஏற்க முடியாது. மிகவும் கண்டனத்துக்குரியது.

    காஷ்மீர் பண்டிட்டுகளை காங்கிரஸ் புறக்கணித்தது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக காங்கிரஸ் என்ன செய்தது. காஷ்மீரின் உண்மையான நிலையை அறிந்து கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை.

    காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பெரும் கொடுமைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. ராஜஸ்தானில் அநீதி இழைக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தான் செல்ல இருக்கிறார். அங்கு பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். பெண்களை பாதுகாக்க காங்கிரஸ் தவறி விட்டது.

    மேற்கு வங்காளத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். இந்த சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

    தி.மு.க. எம்.பி.க்கள் வட இந்தியாவை மட்டுமே இந்தியா என்று கூறுகின்றனர். அவர்களின் இந்த கருத்துக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. பா.ஜ.க. எம்.பி.க்களும், காங்கிரஸ் எம்.பி.க்களும் ஒருவர் மீது ஒருவர் பயங்கர குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால் பாராளுமன்றத்தில் அனல் பறந்தது.

    குறிப்பாக ராகுல் பேசும் போது ஆளும் கட்சி தரப்பில் கடும் அமளி ஏற்பட்டது. அதுபோல மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.

    • பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும்.
    • மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை. இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது என பேசினார்.

    ராகுல் காந்தி பேச்சுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    * காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த பெண்கள் மீதான படுகொலைகளுக்கு பதில் அளிப்பீர்களா?.

    * பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும்.

    * பாரத மாதா கொலை என ராகுல் பேசிய போது அதை கைதட்டி வரவேற்கிறார்கள். பாரத் என்றால் வட இந்தியா என தமிழ்நாட்டு தலைவர் ஒருவர் கூறுகிறார்.

    * மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்று வருகிறது.

    • ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் இந்தியா வந்திருந்தார்
    • இந்திய மந்திரிகள் நிர்மலாக சீதாராமன் மற்றும் ஸ்மிரிதி ரானி ஆகியோரை சந்தித்தார்

    ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகரான மோரி மசாகோ இந்தியா வந்திருந்தார். இந்தியா வந்த அவர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி ராணி ஆகியோரை சந்தித்துள்ளார்.

    இந்த தகவலை இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

    • 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சுகள் குறித்தும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார்.

    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக வருகிற 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா குறைகூறியுள்ளது.

    இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்க முடியாது என்பதால், தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு (பீகார்) செல்கின்றனர். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பமும், அந்த பாலத்தைப்போலவே 2024-ல் இடிந்து விழும்' என்று தெரிவித்தார்.

    பீகாரில் கங்கை நதியின் குறுக்கே சுமார் ரூ.1,750 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாலம் சமீபத்தில் 2-வது முறையாக இடிந்து விழுந்தது. இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதைப்போல அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சுகள் குறித்தும் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார். அன்புக்கடை நடத்தி வருவதாக ராகுல் காந்தி கூறி வரும் நிலையில், இந்து தர்மத்தை அவமதித்தல், சீக்கிய படுகொலை, இந்திய எதிரிகளுடன் கைகோர்த்தல், இந்திய ஜனநாயகத்தை சிறுமைப்படுத்த வெளிநாட்டினரை இழுத்தல் போன்றவைதான் ராகுல் காந்தியின் அன்புக்கான அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஸ்மிருதி இரானி பட்டியலிட்டார்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    • மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    டெல்லியில் மத்திய பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காண வில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகியிடம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்க, அவர் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய பெண்கள், குழந்தைகள் நலன் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக ஸ்மிருதி இரானி, தாம் அமேதி தொகுதியில்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும் தராமல், முன்னாள் எம்பியை அமெரிக்காவில் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.

    ×