என் மலர்
சினிமா செய்திகள்

மங்கிய அரசியல் எதிர்காலம்... சின்னத்திரைக்கு தாவிய ஸ்மிருதி இரானி... ஒரு Episode-கே இவ்வளவு சம்பளமா?
- ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசனில் அவர் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் கலக்கிய ஸ்மிருதி இரானி, 2003-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 முதல் 2024-ம் ஆண்டு வரை மத்திய மந்திரியாக பதவி வகித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
மந்திரி பதவி போன பிறகு, ஸ்மிருதி இரானி மீண்டும் தாய்வீட்டுக்கே (சின்னத்திரை) திரும்பினார். அந்தவகையில் தனக்கு பெரும் பெயரை வாங்கி கொடுத்த ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசனில் அவர் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த தொடர் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஸ்மிருதி இரானியின் சம்பளம் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, ஒரு எபிசோடுக்கு ரூ.14 லட்சத்தை ஸ்மிருதி இரானி சம்பளமாக பெறுகிறாராம்.
இதன்மூலம் இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார், ஸ்மிருதி இரானி. செல்லும் இடமெல்லாம் யோகம் அடிப்பதால், மச்சக்காரர் என்று அவரை புகழ்கிறார்கள்.






