என் மலர்
நீங்கள் தேடியது "Kayathar"
- சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ,கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர்.
வேனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜா ( வயது 25) என்பதும் இவர் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ரைஸ் மில் மற்றும் கோழி பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து , கடத்தப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் வேனை ஓட்டிவந்த ராஜாவை கைது செய்தனர்.
பின்னர் அவரை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
- கொலை தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
- செல்வக்குமார் தனது நண்பரான ரஞ்சித்குமார்(30) மற்றும் 2 வாலிபர்களின் உதவியுடன் மகேஷ்வரனை கயத்தாறு பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்தது தெரியவந்தது.
கயத்தாறு:
சிவகாசி அருகே உள்ள மானகசேரி நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 25). இவர் மீன் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே தளவாய்புரம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் சிவகாசி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மகேஷ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். செல்வக்குமார் மீன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மகேஷ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் ஒன்றாக மது குடித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மகேஷ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டிய செல்வக்குமார் தனது நண்பரான சிவகாசியை சேர்ந்த ரஞ்சித்குமார்(30) மற்றும் 2 வாலிபர்களின் உதவியுடன் மகேஷ்வரனை கயத்தாறு பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் தலை மறைவாக உள்ள மேலும் 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் கடந்த 23-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் இதுவரை அடையாளம் தெரியாததால், மாயமானவர்கள் பட்டிலை கொண்டு அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரும் உள்ளனரா? என்றும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் அடையாளங்களோடு யாரேனும் உள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கயத்தாறு சுங்கசாவடி, கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
- முகாமில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி பணியில் இருக்கும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு சுங்கச்சாவடியில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்த வங்கியும், கயத்தாறு சுங்கசாவடி, கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
கோவில்பட்டி அரசு ரத்த வங்கியின் குழு தலைவர் டாக்டர் லட்சுமிசித்ரா தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி பணியில் இருக்கும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
கயத்தாறு வட்டார மருத்துவர் ராஜ்குமார், நலக்கல்வியாளர் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பெரியசாமி, சுங்கச்சாவடி மதுரை மேலாளர் அம்படிஸ்ரீனிவாசகிரன்குமார்,
கயத்தாறு சுங்கச்சாவடி பல்வேறு துறை மேலாளர்கள் விஜய், ஆனந்தராஜ், சிவகுமார், ஜெபராஜ், வம்சி, ரமாசங்கர், பிரசாத் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கயத்தாறு அருகே டீக்கடையில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- போலீசாருக்கு புகார் சென்றுள்ளதால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் நாற்கரச் சாலையில் நடத்தி வரும் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.
அதன் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்–பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த 30 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கயத்தாறு அருகே சரள்மண் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டு அதன். டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- சிவஞானபுரம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் பிடித்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று சிவஞானபுரம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியின் ஓட்டுநரான கோவில்பட்டி கடலையூர் ரோடு லாயல் மில் காலனி பகுதியை சேர்ந்த சங்கிலி பாண்டி (வயது 34) என்பவரை கைது செய்தார்.
அவரிடமிருந்து 4 யூனிட் சரள் மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
பாளை கே.டி.சிநகரை சேர்ந்தவர் பால சரவணன் (வயது22). என்ஜினீயரான இவர் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் வசித்து வந்தார். இவரது நண்பருக்கு நேற்று சிவகாசியில் திருமணம் நடைபெற்றது. இதற்காக பால சரவணன் தனது நண்பர் சென்னையை சேர்ந்த சரத் (22) என்பவருடன் சிவகாசிக்கு வந்தார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட அவர்கள் இன்று காலை நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடிக்கு வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் பாலசரவணன், சரத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
சிறிது நேரத்தில் பால சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சரத் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுபற்றி கயத்தாறு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ஆதமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த சரத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான பாலசரவணன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews