search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Labour died"

    • தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
    • அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). இவர் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் அவரது தலை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எட்ராஜ் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • படுகாயம் அடைந்த எட்ராஜ் குளத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கயத்தாறு:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகுசுந்தர். இவரது மகன் எட்ராஜ்(வயது 22).

    பூக்கட்டும் தொழிலாளி

    இவர் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு கயத்தாறுக்கு பூக்கட்டுவதற்காக சென்றிருந்தார். பின்னர் இன்று அதிகாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    பசுவந்தனை ரோட்டில் கடம்பூர் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையை யொட்டி அமைந்துள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதன் அருகே உள்ள இரட்டை குளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.

    குளத்தில் பாய்ந்து பலி

    இதில் படுகாயம் அடைந்த எட்ராஜ் குளத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கயத்தாறு போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பத்மா சீனிவாசன் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்து சென்று எட்ராஜ் உடலையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோ தனைக்காக எட்ராஜ் உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகில் உள்ள சிங்காரகோட்டையை சேர்ந்தவர் பூமிநாதன்(52). கூலித்தொழிலாளி. இவர் வடமதுரை அருகில் உள்ள புதூர் பகுதிக்கு தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். இன்று காலை ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் மீது மினி வேன் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே கே.குரும்பபட்டியை சேர்ந்த விமல் குமார் (வயது 32). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று மாலை அழகர் நாயக்கன்பட்டியில் தனது உறவினர் இறந்துபோன துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் திரும்பினார்.

    செங்கட்டாம்பட்டி வழியாக தோப்புபட்டி அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேன் விமல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த விமல்குமாரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி சசிகலா கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். உயிரிழந்த விமல்குமாருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் தற்போது சசிகலா 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். விபத்தில் விமல்குமார் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் தொழிலாளி மீது மோதியது.
    • படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    கூடலூரை சேர்ந்தவர் தனராஜ் (வயது 80). இவர் தனது மகன் அரவிந்த்ராஜ் (52) என்பவருடன் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முன்றார். அப்போது அவ்வழியாக வந்த பைக் அரவிந்த்ராஜ் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வடமதுரை அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே ஆண்டி மா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது17). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    தனது தந்தை ஆறுமுகத்துடன் வாகனத்தில் வட மதுரையில் இருந்து வெள்ளைபொம்மன்பட்டி சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஆறுமுகம் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூர் அம்மாபட்டியை சேர்ந்தவர் ஜான்கென்னடி (வயது 49). இவருக்கு ஆரோக்கிய மேரி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டது போல் ஜான்கென்னடி சுற்றித்திரிந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை கொடைரோடு அருகே தண்டவாளத்தில் கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×