திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

தொழிலாளி ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகில் உள்ள சிங்காரகோட்டையை சேர்ந்தவர் பூமிநாதன்(52). கூலித்தொழிலாளி. இவர் வடமதுரை அருகில் உள்ள புதூர் பகுதிக்கு தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். இன்று காலை ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com