கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் குளத்தில் பாய்ந்து தொழிலாளி சாவு

எட்ராஜ் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். படுகாயம் அடைந்த எட்ராஜ் குளத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கயத்தாறு அருகே  மோட்டார் சைக்கிள் குளத்தில் பாய்ந்து தொழிலாளி சாவு
Published on

கயத்தாறு:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகுசுந்தர். இவரது மகன் எட்ராஜ்(வயது 22).

பூக்கட்டும் தொழிலாளி

இவர் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு கயத்தாறுக்கு பூக்கட்டுவதற்காக சென்றிருந்தார். பின்னர் இன்று அதிகாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

பசுவந்தனை ரோட்டில் கடம்பூர் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையை யொட்டி அமைந்துள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதன் அருகே உள்ள இரட்டை குளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.

குளத்தில் பாய்ந்து பலி

இதில் படுகாயம் அடைந்த எட்ராஜ் குளத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கயத்தாறு போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பத்மா சீனிவாசன் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்து சென்று எட்ராஜ் உடலையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோ தனைக்காக எட்ராஜ் உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com