வடமதுரை அருகே வேன் மோதி கொத்தனார் பலி

வடமதுரை அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே ஆண்டி மா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது17). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

தனது தந்தை ஆறுமுகத்துடன் வாகனத்தில் வட மதுரையில் இருந்து வெள்ளைபொம்மன்பட்டி சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆறுமுகம் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com