உத்தமபாளையத்தில் பைக் மோதி தொழிலாளி பலி

சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் தொழிலாளி மீது மோதியது. படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம்:

கூடலூரை சேர்ந்தவர் தனராஜ் (வயது 80). இவர் தனது மகன் அரவிந்த்ராஜ் (52) என்பவருடன் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முன்றார். அப்போது அவ்வழியாக வந்த பைக் அரவிந்த்ராஜ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com