நிலக்கோட்டை அருகே மினி வேன் மோதி கொத்தனார் பலி

பைக் மீது மினி வேன் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே கே.குரும்பபட்டியை சேர்ந்த விமல் குமார் (வயது 32). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று மாலை அழகர் நாயக்கன்பட்டியில் தனது உறவினர் இறந்துபோன துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் திரும்பினார்.

செங்கட்டாம்பட்டி வழியாக தோப்புபட்டி அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேன் விமல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த விமல்குமாரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி சசிகலா கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். உயிரிழந்த விமல்குமாருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் தற்போது சசிகலா 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். விபத்தில் விமல்குமார் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com