தேவதானப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி சாவு

தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). இவர் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் அவரது தலை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com