search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop closed"

    • போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.
    • ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுதிகளில் 6-வது சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் விவசாயிகள், கட்சியினர் பல்வேறு ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நடந்த 61-வது நாளாக போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.

    இந்த நிலையில் உத்தனப்பள்ளி பகுதியில் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    • கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    கடம்பூர் ரெயில் நிலையம்

    தொடர்ந்து வியா பாரிகள், பொதுமக்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, கொரோனா காலத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

    ஆனால் தற்போது கோவில்பட்டியில் நிறுத்தப்படும் ரெயில்கள் அதன் பின்னர் கடம்பூரில் நிற்காமல் நெல்லையில் நின்று செல்கிறது. இதனால் தங்கள் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு வதாக தெரிவித்தனர்.

    2-வது நாளாக போராட்டம்

    இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்ேபாது, வழக்கம் போல கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எங்களது ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்போம் என்றனர்.

    • அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் திருப்பூர், பல்லடம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சி.எம்.துரைசாமி, தலைமையில் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் கே.சி.எம்.துரைசாமி கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

    நடுத்தர குடும்பம் மட்டுமில்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த முறை ஜி.எஸ்.டி. வரி விதித்தபோது தமிழக அரசிடம் எடுத்துக்கூறியதால் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகள் இணைந்து நாளை (சனிக்கிழமை) அனைத்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த வணிகர்கள், அரிசி சில்லறை வணிகர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் 125 அரிசி ஆலைகள், தாராபுரத்தில் 40 அரிசி ஆலைகள், திருப்பூரில் 20, அவினாசி, ஊத்துக்குளியில் தலா 10 உள்பட மொத்தம் 205 அரிசி ஆலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள் நாளை (சனிக்கிழமை) நடக்கும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். நாளொன்றுக்கு அரிசி ஆலையில் 25 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. கடைகளில் 30 ஆயிரம் டன் அரிசி விற்பனையாகும். அவை வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் ஏராளமானோர் தினசரி மது பாட்டில்கள் வாங்குவதற்காக மஞ்சூருக்கு வந்து செல்கின்றனர்.

    இவர்கள் மூலம் மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ள பகுதியின் அருகே வசிக்கும் சிலர் மதுக்கடையால் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், அப்பகுதியில் இருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடையை அப்பகுதியில் இருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பரவியது.

    இந்நிலையில் மதுக்கடையை மஞ்சூரில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றினால் தங்களது வியாபாரம் பாதிக்ககூடும் என்பதால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்வதை தவிர்த்து மஞ்சூர் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 2 மணி நேரம் கடையடைப்பு நடத்தவும் தீர்மானத்தனர். இதன்படி மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    இதை தொடர்ந்து மஞ்சூரிலேயே மதுக்கடையை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை கோரி வரும் 20ம் தேதி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக கடைக்காரர்கள் சங்க தலைவர் சிவராஜ் தெரிவித்தார்.

    அரசு டாஸ்மாக் மதுக்கடையை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் அவசர தேவைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

    மதுராந்தகத்தில் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை தீர்க்க கோரி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வெளியூரிலிருந்து வரும் பொருட்களை இறக்குவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் பொருட்களை தாங்களே இறக்கி கொள்கிறோம் என்று கூலித் தொழிலாளர்களிடம் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

    நேற்று காலை ஒரு மளிகை கடையில் எண்ணெய் பாக்கெட்டுகளை இறக்க முயன்றபோது ஒரு வியாபாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது தொழிலாளர்கள் பொருட்களை பறித்து தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை தீர்க்க கோரி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை தொடர்ந்து வாகனங்கள் ஏதும் ஓடாததால் முழுஅடைப்பு போல் தமிழகம் வெறிச்சோடி காணப்படுகிறது #RIPKarunanidhi
    சென்னை:

    காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடின. அவரது மரணச்செய்தி நேற்று மாலை 6.10 மணிக்கு பிறகு வெளியாகப்போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே பரவியது. இதன் காரணமாக தங்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே கடைகளுக்கு சென்று வாங்கினர்.

    நேற்று இரவு 7 மணிக்கே சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நள்ளிரவு போல காட்சி அளித்தது. சிறிய பெட்டிக்கடைகளில் தொடங்கி பெரிய ஓட்டல்கள் வரை அத்தனையும் அடைக்கப்பட்டுவிட்டது.

    இன்று காலையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக மட்டும் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்திருந்தனர். முன்னதாக கருணாநிதி மரணம் அடைந்துவிட்ட தகவல் பரவியதும் நேற்று மாலையில் ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் நின்றும் பொது மக்கள் பால் வாங்கியதை காண முடிந்தது.

    சென்னையை பொறுத்த வரையில் தினமும் பரபரப்பாகவே விடியும். அதிகாலையிலேயே சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கிவிடும். மாநகர பேருந்துகளும் முழு அளவில் இயங்கும். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் இன்று காலையில் அதுபோன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருந்தது. காலையில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இது முழுஅடைப்பு நடந்தால் எப்படி இருக்குமோ? அது போன்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிலையே காணப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.



    கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலைய வளாகத்திலேயே பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாநகர பேருந்துகள் எதுவும் ஓடாததால் அங்கு பஸ்கள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது. மின்சார ரெயில்களும், மெட்ரோ ரெயில்களும் வழக்கம் போல இயங்கின.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. வெளியூர்களில் இருந்து கோயம்பேடு மார்க் கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகள் வந்துள்ளன. சரக்குகள் இறக்காமல் உள்ளன.

    இதனால் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் களை இழந்து காணப்பட்டது. ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களும் ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.



    இதனால் வெளியில் ஆட்கள் நடமாட்டம் இன்றியே காணப்பட்டது. தி.மு.க.வினர் மட்டும் தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றனர். நேற்று மாலையிலேயே பஸ், போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டது. மின்சார ரெயில்களும் முழு அளவில் இயக்கப்படவில்லை. குறைந்த அளவில் ஓடிய பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. படியில் தொங்கியபடியே பெண்களும் பயணம் செய்தனர்.

    இதனால் நேற்று மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். குறிப்பாக பெண்கள் அவதிக்குள்ளானார்கள்.
    ×