என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜி.எஸ்.டி."
- கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
- கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா நிறுவன தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூல் லிப் மட்டுமல்ல, அது போல பலவகையான போதைப் பொருட்கள் உள்ளன. கூல் லிப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வாதிட்டார்.
இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி மற்ற போதைப்பொருட்கள் எல்லாம் பள்ளி, கல்லூரிக்கு வெளியே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது. இது 'இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம்' என புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. கூல் லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளத்தை ஏன் அச்சிடுவதில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, இது குறித்து விளக்கம் அளிக்க குட்கா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
கூல் லிப் பயன்பாட்டை குறைக்க என்ன மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர்.
- போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- அகமதாபாத் நகரில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக சந்திரகாந்த் வல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
- இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இனிமேல் அந்த மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக சந்திரகாந்த் வல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டடி பள்ளத்தாக்கில் 620 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இனிமேல் அந்த மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பல சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுப்பட்டு வருவதாகவும், அதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஜடானி கிராமத்தில் உள்ள மக்களிடம் இங்குள்ள வீடுகளை அரசு விரைவில் கையகப்படுத்தும் என்று அந்த கிராமத்தை வாங்கியுள்ள ஜி.எஸ்.டி. தலைமை ஆணையர் கூறியதாக சமூக ஆர்வலர் சுஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
- உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் நடை பெற்றது.
- தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் கந்தசாமி நன்றி கூறினாா்.
உடுமலை:
உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் நடை பெற்றது. துணைத் தலைவா் வெங்கடேஷ் வரவேற்றாா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினா் ஆடிட்டா் சங்கரநாராயணன் பேசும்போது, ஜிஎஸ்டி தணிக்கையின்போது வணிகா்கள், தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சரக்குகளை கையாளும்போது எடுத்துச் செல்ல வேண்டிய படிவங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாா்.
மேலும், ஜிஎஸ்டி சட்டத்தில் தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பதில் உரைகளும், மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள இடங்களில் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.தொழில் நிறுவனங்களைச் சாா்ந்தோா், வரிசட்ட ஆலோசா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தாா். தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் கந்தசாமி நன்றி கூறினாா்.
- ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
- மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது. பின்னலாடை ரகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய பின் ஏற்றுமதியாளர்கள் உரிய ஆவணங்களுடன் மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரீபண்ட் தொகை விடுவிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு (2022 - 23) நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகம் மூலம் 360 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.
16 சரகங்களை உள்ளடக்கிய திருப்பூரின் இரண்டு வணிக வரி மண்டலங்கள் மூலம் 520 கோடி ரூபாய் என மத்திய, மாநில வரித்துறைகள் மூலம் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை மொத்தம் 880 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு பரிசீலித்து உடனடியாக ஜி.எஸ்.டி., ரீபண்ட் தொகை விடுவிக்கிறோம். இக்கட்டான சூழல்களில் உரிய காலத்தில் ரீபண்ட் கிடைப்பது, பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதன தேவைக்கு பக்கபலமாக உள்ளது என்றனர்.
- 49-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்ட பரிந்துரைகளை விளக்கும் நிகழ்ச்சியை ஓசூரில் நேற்று நடத்தின.
- பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்தனர்.
ஓசூர்,
சேலம் மத்திய சேவைத்துறை மற்றும் ஜி.எஸ்.டி ஆணையரகமும், ஓசூர் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கமும் (ஹோஸ்டியா) இணைந்து, 2023- 24 ஆம்ஆண்டிற்கான, மத்திய வரவு செலவு அறிக்கையில் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்த விழிப்புணர்ச்சி மற்றும் 49-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்ட பரிந்துரைகளை விளக்கும் நிகழ்ச்சியை ஓசூரில் நேற்று நடத்தின.
ஓசூர் ஹோஸ்டியா அலுவலத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேலம் ஜி.எஸ்.டி.துறை ஆணையர் சுதா கோக்கா, உதவி ஆணையர் ஜெய சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு 2023- 24 நிதியாண்டு அறிக்கையில் ஏற்பட இருக்கும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் சரக்கு மற்றும் ஜி.எஸ்.டி. சம்பந்தமான மாற்றங்கள் மற்றும் 49 -வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் குறித்து விளக்கி பேசினர். மேலும்,வர்த்தக மற்றும் தொழிற்துறை
பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்தனர். நிகழ்ச்சியில், சேலம் ஜி.எஸ்.டி. துறை இணை ஆணையர் ராஜேஷ் வி.ஷெல்கே, ஹோஸ்டியா சங்க தலைவர் கே.வேல்முருகன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில், துறை அலுவலர்கள், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைக்கான கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது.
- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் என்பதால் வர்த்தகத் துறையின் கவனம் இதில் திரும்பியுள்ளது.
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது.
- நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சிவகாசியில் நடந்த பட்டாசு வணிகர் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு நடந்தது. மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி, ராஜன் முன்னிலை வகித்தனர்.
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி வரவேற்றார். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், டான்பாமா சங்கத்தலைவர் கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காலத்திற்கு ஏற்றவாறு பட்டாசு உற்பத்தியில் மாற்றங்களை கொண்டு வருவதால் பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசி தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கி வருகிறது. சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 ஆண்டுகளைக் கடந்து இந்த தொழில் சிறப்பாக செயல்படுவதற்கு சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர்களே காரணம் ஆவார்கள். பட்டாசு உற்பத்தி, பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார்.
மாநாட்டு மலரை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் வெளியிட, மாணிக்கம் தாகூர் எம்.பி. பெற்றுக்கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் பேசுகையில், நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து அதிகாரிகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க முன்வரவில்லை.
உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் முதலில் தீர்வு காண வேண்டும். பட்டாசு ஏற்றுமதி செய்ய பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது இலங்கை யில் உள்ள கொழும்பு துறைமுகம் வழியாக பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசு கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்குவது, விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் வழங்குவது, தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிப்பது, பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
- ஜி.எஸ்.டி., வரி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- நீதிமன்றங்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில், ஜி.எஸ்.டி., குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் துவக்கி வைத்தார்.இதில் வக்கீல் நடராஜன் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி., வரி என்பது, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்துள்ள மிகப்பெரிய புரட்சி. கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு மாறுதல்களுடன் ஜி.எஸ்.டி., வரி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வர்த்தகர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஜி.எஸ்.டி., சார்ந்த புரிதல் அதிகரித்துள்ளது.
வரியை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதில், நீதிமன்றங்களின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது. ஜி.எஸ்.டி., சார்ந்து ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ளன. கோர்ட்டு தீர்ப்புகள், வழிகாட்டுதல்களை, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலிக்கிறது. தேவையான திருத்தங்கள் செய்து வரி சார்ந்த சிக்கல்களுக்கு கவுன்சில் தீர்வுகாண்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.திருப்பூர் பகுதி ஆடிட்டர்கள் பங்கேற்று வரி சார்ந்த நீதிமன்ற வழக்குகள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
- வாடகை வீடுகளில் வாழும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
- நிவாரணம் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அவர்களைத் துன்புறுத்துகிறோம்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் வசூலிக்கப்படுகிறது. இதனால் இந்த பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஆளும் பா.ஜ.க எம்.பி வருண் காந்தி விமர்சித்துள்ளார். இது ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதிக்கும் என்று தமது டூவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு நடுத்தரக் குடும்பங்களுக்கு, குறிப்பாக வாடகை வீடுகளில் வாழும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள வருண்காந்தி, அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அவர்களைத் துன்புறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
- ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக சென்னையில் 22-ந் தேதி போராட்டம் நடைபெறுகிறது.
- தமிழகம் முழுவதும் வணிகப் பொருட்களின் மீது மத்திய அரசு புதிதாக 5 சதவீதம் வரி விதித்து உள்ளது.
மதுரை
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், எம்.எல்.ஏ பூமிநாதன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம் பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அதிகாரி சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், எஸ்.பி.ஆர். சிட்டி துணைத் தலைவர் சிவக்குமார், பேரமைப்பு நிர்வாகிகள் மகேந்திர வேல், விஜயன், பாண்டி, லட்சுமி காந்தன், கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்து, மாநில இணைச் செயலாளர் திருமுருகன், மாவட்டச் செயலாளர் அழகேசன் மற்றும் அனைத்து இணைப்புச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழகம் முழுவதும் வணிகப் பொருட்களின் மீது மத்திய அரசு புதிதாக 5 சதவீதம் வரி விதித்து உள்ளது. இதற்கு எதிராக சென்னையில் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு புதிய ஜி.எஸ்.டி. வரி அறிவிப்பை வாபஸ் பெறவில்லை என்றால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் தொழில் செய்ய வேண்டும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வணிகம் செய்பவர்களை அனுமதிக்க கூடாது. தமிழக அரசின் வருவாயில் 85 சதவீதம், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி வழியாக கிடைக்கிறது. மாநில அளவில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை. அனைவரும் முறையாக வரி செலுத்தினால் மாநிலம் வளர்ச்சி அடையும்.தமிழகத்தில் தொழில் செய்யும் வட மாநிலத்தவர், வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். அவர்களையும் மாநிலத்தில் இருந்து அப்புறப்படுத்த தமிழக வணிகர்கள் முன் வர வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பணம் கொடுத்தால் தான் வணிகம் செய்ய முடியும் என்ற சூழல் இருந்தது.
தி.மு.க ஆட்சியில் வணிகர்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் எந்த தடையும் இல்லை. உறுப்பினர் சேர்க்கை காரணமாக, வணிகர் நல வாரியம் அமைப்பதில் காலதாமதம் ஆகிறது. அரசுத் துறைகளில் பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் உள்பட யார் தவறு செய்தாலும், முதல்வர் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்.
அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியை வாபஸ் பெற வேண்டும். மதுரையில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். ஜி.எஸ்.டி வரி ஏற்ற தாழ்வுகளை சரி செய்வது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்