என் மலர்
நீங்கள் தேடியது "bjp mp"
- நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
- தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.
நல்ல சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் என்று தெலுங்கானா பாஜக எம்பி விஸ்வேஷ்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைக்கும். நல்ல சாலைகளால் அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது.
முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் அதிக சாலை விபத்துகள்.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்ததற்கு நல்ல சாலை கட்டமைப்பும் ஒரு காரணம்.
மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதால் விபத்துகள் குறைகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
- பழைய ரயில் நிலையம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும்
டெல்லியின் பெயரை மாற்றக் கோரி சாந்தினி சவுக் பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரி வருகிறது.
இந்நிலையில் பிரவீன் கண்டேல்வால் தனது கடிதத்தில் டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என மாற்ற வேண்டும் என வலியுத்தியுள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள பழைய ரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்றும் டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்றுவதன் மூலம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தர்மத்தை எதிர்கால சந்ததியினருக்கு கடத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.
- கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜக எம்.பி.யான கணேஷ் சிங் கிரேனில் மேலே சென்றார்.
நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், கணேஷ் சிங் மேலே சென்ற சில வினாடிகளிலேயே கிரேன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சிறிது நேரம் செயலிழந்து நின்றது.
இதனால் கோபமடைந்த கணேஷ் சிங் கிரேன் கேபினுக்குள் இருந்தபடியே உதவ வந்த ஆப்ரேட்டரைத் தாக்கினார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
- வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
- உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார்
- இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு பாஜக எம்.பி. மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் , "இந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட கடுமையான மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் மிகவும் மோசமானம காயங்களை ஏற்படுத்தியுள்ளன, அவை குணமடைய நீண்ட காலம் எடுக்கும். நேற்று மாலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பயங்கரமான காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
இந்த பேரிடர் நேரத்தில், சவாலான சூழ்நிலைகளிலும் கூட சாலைகளில் இருந்து குப்பைகளை அகற்றும் அனைத்து அதிகாரிகள், NDRF-SDRF பணியாளர்களின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள்.
- நம் வீட்டிற்குள் புகுந்து யாராவது தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை.
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற இந்து வேதிகா அமைப்பின் தென் மண்டல மாநாட்டில் பாஜக எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தங்களை தாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்துக்களுக்கு உள்ளது. அவர்கள் எதுவும் கிடைக்காவிட்டால் லவ் ஜிஹாத் செய்வார்கள். காதலித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாங்கள் கடவுளை நேசிக்கிறோம். கடவுளை நேசிக்கும் ஒரு சன்யாசி கூறுகிறார், கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த உலகில், தவறு செய்பவர்கள், பாவிகள் அனைவரையும் அழித்து விடுங்கள்,லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள். உங்கள் பெண்களைப் பாதுகாக்க சரியான முறையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் காய்கறிகளை வெட்டப் பயன்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போது என்ன நிலை வரும் என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. நம் வீட்டிற்குள் யாராவது புகுந்து தாக்கினால், அவர்களுக்கு பதில் சொல்வது நமது உரிமை. கத்திகள் காய்கறிகளை வெட்டுவது போல், வாயையும் தலையையும் வெட்டுகிறது.
மிஷனரிகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதை நிறுத்துங்கள். அப்படி அனுப்புவதன் மூலம், முதியோர் இல்லங்களின் கதவுகளை உங்களுக்காக நீங்கள் திறக்கிறீர்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள். அவர்கள் வளர்ந்து சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
- அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பது "பாரத்தின் ஜனாதிபதி" என இருக்கிறது
- அடுத்த 1000 வருடங்கள் நாடு பயணிக்கும் திசையை "அம்ருத் கால்" முடிவு செய்யும்
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.
"அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31-ம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இக்கூட்டத்தொடரில் நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டி காட்டியுள்ளார். இவரது கருத்து இக்தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், அதில் 'பாரத்' என்றும் 'இந்தியா' என்றும் 2 பேரையும் வைத்திருந்தது தவறு. 'பாரத்' என்பது நமது நாட்டின் தொன்மையான கலாசாரத்தை குறிப்பதாக உள்ளது. ஆனால் 'இந்தியா' என்பது நம்மை அவமானப்படுத்த பிரிட்டிஷ்காரர்களால் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. அதை மீண்டும் 'பாரத்' என மாற்ற வேண்டும்" என பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவும் கூறியுள்ளார்.
"மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் 'இந்தியா' என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக 'பாரத்' என அழைக்க தொடங்க வேண்டும்," என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதே விவகாரத்தை பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்ஸால், மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"வெள்ளையர்களின் ஆதிக்க ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட அடிமை மனப்பான்மை, சுதந்திரம் பெற்றும் நமக்கு நீங்கவில்லை. அதனை நீக்கும் முயற்சியாக பல முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த 'அம்ருத் கால்' காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான பயணிக்கும் திசையை நாட்டுக்கு காட்டுவதாக இருக்கும்" என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே நாட்டின் பெயரை மாற்றும் திட்டம் கொண்டு வரப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
- பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
- கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்
இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).
ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.
"பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.
இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களவையில் இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
- பாராளுமன்ற வளாகத்திலும் இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசினர்.
பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் குதித்த இருவர் வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மக்களவைக்குள் இருவர் செல்ல கர்நாடக மாநிலம் மைசூரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா எனத் தெரியவந்தது.
இவர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது பாஸ் வழங்கிய குற்றவாளி உள்ளே. கேள்வி கேட்ட நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு போர் புகை குண்டு வீசியவர்கள். ஒருவர் மூளையாக செயல்பட்ட லலித் ஜா. மற்ற இவர்கள் லலித் ஜாவுக்கு உதவியவர்கள்.
டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வாக்குமூலம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
- 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்
மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, தேர்தல் பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்
- ஜெயந்த் சின்ஹா பாஜக அரசில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
பாஜக எம்.பி ஜெயந்த் சின்ஹாவின் மகன் ஆஷிர் சின்ஹா இன்று ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பருவ நிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதா கூறி, ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
ஜெயந்த் சின்ஹா பாஜக அரசில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஜெயந்த் சின்ஹா எம்.பி ஆக உள்ள ஹசாரிபாக் தொகுதியில் அவருக்கு பதிலாக ஹசாரிபாக் சதார் தொகுதி எம்.எல்.ஏ மனிஷ் ஜெய்ஸ்வாலை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.
1998 ஆம் ஆண்டிலிருந்து ஜெயந்த் சின்ஹா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வந்த நிலையில், இந்த தேர்தலில் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






