என் மலர்

  நீங்கள் தேடியது "Jayant Sinha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை உருவாக்கி இருப்பதாக பாராளுமன்ற மக்களவையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி ஜெயந்த் சின்கா கூறியுள்ளார். #JayantSinha #AirIndia
  புதுடெல்லி:

  பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.55 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை உருவாக்கி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

  இதுதொடர்பாக, பாராளுமன்ற மக்களவையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி ஜெயந்த் சின்கா கூறுகையில், “இந்த புத்துயிரூட்டும் திட்டம், ஏர் இந்தியாவை லாபகரமான குழுமமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதில், நிதி தொகுப்பும் அடங்கும். பயன்படுத்தப்படாமலும், மிகுதியாகவும் உள்ள சொத்துகளை விற்பதும் இதில் உண்டு.

  ஜெயந்த் சின்கா

  மேலும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும். முந்தைய ஆட்சியில், விமான வழித்தடங்களை சிறப்பாக பயன்படுத்தாததும், அவற்றை வேறு நிறுவனங்களுக்கு அளித்ததுமே ஏர் இந்தியாவின் மோசமான நிலைக்கு காரணம்” என்றார்.#JayantSinha #AirIndia
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #JayantSinha #Drones #Organs
  புதுடெல்லி:

  மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.  எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.

  இவ்வாறு அவர் கூறினார். #JayantSinha #Drones #Organs

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீண்ட தூர பயணத்தில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு என விமான போக்குவரத்து மந்திரி ஜெயந்த் சின்கா கூறியுள்ளார். #JayantSinha
  கோரக்பூர்:

  உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜெயந்த் சின்கா பேசும்போது விமானக் கட்டணத்தையும் ஆட்டோக் கட்டணத்தையும் ஒப்பிட்டு பேசினார்.

  அவர் கூறியதாவது:-

  இன்றைய காலத்தில் நமது நாட்டில் விமான கட்டணம் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக, நீண்ட தூர பயணத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கான கட்டணத்தை ஒப்பிட்டால் ஆட்டோ சவாரியை விட விமானக் கட்டணம் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும்.

  இது எப்படி என்று கேட்பீர்கள். 2 பேர் ஒரு ஆட்டோவில் சவாரி செய்தால் அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10-ஐ கட்டணமாக கொடுக்கிறார்கள். அப்படியென்றால் இருவரும் ஒரு கிலோ மீட்டருக்கு தலா ரூ.5 செலவிடுகின்றனர். ஆனால் நீண்ட தூரம், குறிப்பாக கோரக்பூரில் இருந்து மும்பைக்கோ அல்லது பெங்களூருவுக்கோ விமானத்தில் பயணம் செய்தீர்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூ.4 மட்டும்தான்.

  அதற்காக குறுகிய தூரத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. விமான கட்டணம் குறைவு என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன்.

  நம்மைப் போன்றதொரு பெரிய நாட்டில் தற்போது தொலைதூர விமானப் பயணம் பெரிதும் விரும்பப்படுகிறது. ஏனென்றால் இதில் கட்டணம் குறைவு. அதேநேரம் விமான பயணம் விரைவாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.  #JayantSinha
  ×