search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transport"

    சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு.

    பாராளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

    இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

    பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    மேலும், சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    • முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.
    • வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு.

    இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில், குலு- மணாலி மற்றும் கீலாங் இடையே இமாச்சலப் பிரதேசம் சாலைவழி போக்குவரத்து கழகம் (HRTC) கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்துகள் சேவையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குலு மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் பனிப்பொழிவைத் தொடர்ந்து இமாச்சல் சாலைவழி போக்குவரத்துக் கழகம் சேவைளை நிறுத்தியது.

    இந்நிலையில், இன்று முதல் சேவை மீண்டும் தொடங்கியது. முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.

    முன்னதாக, பனிப்பொழிவுக்கு பிறகு மே மாதத்தில் தான் சேவை மீண்டும் தொடங்கும். கடந்த, 2019-ல் ரோஹ்தாங்கில் அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பனிப்பொழிவு பகுதிக்கான பேருந்து சேவைகள் மீட்டமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று எச்ஆர்டிசி நிர்வாக இயக்குனர் ரோஹன் சந்த் தாக்கூர் தெரிவித்தார்.

    வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக இந்தியர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.
    • 11 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தனிநபர் வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-23ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவு இந்திய குடும்பங்களின் செலவு முறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கிறது.

    சுமார் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

    சராசரி வீட்டுச் செலவினங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றன.

    பெரும்பாலான இந்தியர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெட்ரோலுக்கான செலவு பயணக் கட்டணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தது.

    நகர்ப்புற குடும்பங்களின் மொத்த மாதாந்திர செலவில் 11.2 சதவீதம் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கிராமப்புற இந்தியாவில் 9.5 சதவீதம் ஆக உள்ளது என தெரிய வந்துள்ளது.

    • பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.
    • அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், வரும் 6ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
    • தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக ஆசனூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மாவள்ளம் பிரிவு அருகே சாலை ஓரத்தில் இருந்த தைய மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்திற்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது.
    • பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. அறிக்கை.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதை தொடர்ந்து இன்று (ஜனவரி 8) நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்து இருந்தார். அதன் படி நாளை பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

     


    அதில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்."

    "ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும் அரசு ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்."

    "அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு. இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    • பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    ஆனால், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சிஐடியு சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்" என்று கூறினார்.

    • வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
    • தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

    இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,

    இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.

    இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.
    • விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி விமான நிலையம் உள்ளது. மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

    இதில் 97 ஏக்கர் பரப்பளவில், ரூ.65 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது.

    அதற்காக 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இந்த நிலையில் விமான நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

    விமான நிலைய நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    மேலும் மத்தியப்படைகளுடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி. கே.சிங் கூறியதாவது:-

    உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலைய பணிகள் நிறை வடைந்துள்ளன. விமான நிலையத்திற்கு உரிமை வழங்கும் பணி நடந்து வருகிறது.

    அது தயாரான பிறகு 9 இருக்கைகள் கொண்ட விமானங்கள் வேலூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்பட உள்ளது.

    இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என கூறினார்.

    வேலூர் பகுதியில் வசிப்பவர்கள் விரைவில் சென்னை மற்றும் பெங்களூருக்கு இதன் மூலம் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

    வேலூருக்கு மருத்துவம், பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இது ஒரு பெரிய பயன்பாடாக இருக்கும். விரைவில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
    • மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும், மகா்நோன்புசாவடி பழைய ராமேஸ்வரம் சாலையில் தலா ஒரு மாடு, கன்றையும், யாகப்பா நகரில் 2 மாடுகளையும், சிவகங்கை பூங்கா, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும்,

    மருத்துவக் கல்லூரி சாலையில் 4 மாடுகளையும், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் தலா ஒரு மாடு, கன்றையும் என மொத்தம் 18 மாடுகளையும், 2 கன்றுகளையும் மாநகா் நல அலுவலா் சுபாஷ்காந்தி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் பிடித்து, காப்பகத்துக்கு கொண்டு சென்று, அவற்றின் உரிமையா ளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

    மாநகரில் இதுவரை 71 மாடுகளையும், 44 கன்றுகளையும் பிடித்து அபராதம் விதித்துள்ள தாகவும், சாலைகளில் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணி தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.

    • வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை அடுத்த 2 மாத காலத்திற்கு தமிழகத்தில் இயக்கிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • 2 மாத காலத்திற்குள் வெளி மாநில பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்றிட உத்தரவு.

    பர்மிட் பிரச்சினை, விதிமுறைகள் மீறல், கூடுதல் கடட்ண வசூல் உள்ளிட்ட புகாரில் 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.

    வரி கட்டிய பேருந்துகள் மட்டும் நாளை விடுவிக்கப்படும் என போக்குவரத்துத் தறை ஆணையர் நேற்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக போக்குவரத்து துறையால் சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் முதற்கட்டமாக 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை அடுத்த 2 மாத காலத்திற்கு தமிழகத்தில் இயக்கிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் 28ம் தேதி வரை வெளி மாநில பேருந்துகள் தமிழகத்தில் இயங்கிட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்குள் வெளி மாநில பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற போக்குவரத்துத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    50 பேருந்துகள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பேருந்துகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இன்று மாலைக்குள் விடுவிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    • மகாளாய அமாவாசையையொட்டி ராமேசுவரம், சமயபுரம் செல்ல 2 நாட்களுக்கு 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மகாளாய அமாவாசை யையொட்டி ராமேஸ்வரம், திருவையாறு, பூம்புகார், கோடியக்கரை, சமயபுரம், ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு 270 சிறப்பு பஸ்கள் நாளை முதல் 2 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

    இது தொடர்பாக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) மே லாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம்( கும்ப கோணம்) சார்பில் மகாளாய அமாவா சையையொட்டி நாளை (13-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14-ந் தேதி) ஆகிய 2 நாட்களில் பொது மக்களின் வசதிக்காக ராமேசுவரத்திற்கு இரவு பகலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, புதுக்கோட் டை, திருத்துறைப் பூண்டி, வேதாரணியம், மயிலாடு துறை, திருவாரூர், நாகதப் பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய பகுதி களில் இருந்து இயக்கப்படு கிறது.

    மேலும் தஞ்சாவூர், கும்ப கோணம், திருக்காட்டுப் பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர் ஆகிய இடங் களில் இருந்து திருவை யாருக்கும் அதே போல திருவையாற்றில் இருந்து மேற்படி அனைத்து ஊர்க ளுக்கும் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, பொறையார் ஆகிய இடங்களில் இருந்து பூம்புகாருக்கும் அதே போல பூம்புகாரில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, வேதார ணியம் ஆகிய இடங்களி லிருந்து கோடியகரைக்கு 25 சிறப்பு பஸ்களும், திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்தி ரம் பஸ் நிலையங்களில் இருந்தும், பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களில் இருந்தும் சமயபுரத்திற்கும், ஸ்ரீரங்கத் துக்கும் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அனைத்து வழித்தடங்களிலும் மொத்தமாக 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    ராமேசுவரம் செல்லும் பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பஸ்களில் பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமின்றி பயணம் செய்வதுடன் போக்கு வரத்து கழகங்களும் அதற்கு ஏற்ப பஸ் வசதிகளை செய்ய ஏதுவாகும்.

    எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் மேலும் முக்கிய பேருந்து நிலையங் களில் சிறப்பு அலுவலர்கள் பரிசோத கர்கள் பணியாளர்கள் பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×