என் மலர்
இந்தியா

இனி இந்திய இசையில் மட்டுமே ஹாரன் சத்தம் - வரப்போகும் புதிய சட்டம் - நிதின் கட்கரி அறிவிப்பு
- புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம்.
- பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் தெரிவித்தார்.
இந்திய சாலைகளில் வாகனங்களின் ஹாரன்களால் ஏற்படும் ஒலி மாசைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறையை கையாள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,
தற்போதுள்ள ஹாரன்களுக்கு பதிலாக இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளை ஏற்படுத்தும் ஹாரன்களை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து வாகனங்களின் ஹாரன்களிலும் இந்திய இசைக்கருவிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை கேட்க இனிமையாக இருக்கும்.
புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் தெரிவித்தார்.
Next Story






