என் மலர்
நீங்கள் தேடியது "nitin gadkari"
- சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன.
- நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
புதுடெல்லி:
புதிய அமைப்பின் மூலம் நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
மேலும் கிருஷ்ணகிரி நகரில் 7 கிமீ தொலைவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாதும், மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
'சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பல பிரச்சனைகள் உருவாகின்றன. அவற்றை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்' என்றும் நிதின் கட்காரி தெரிவித்தார்.
- மத்திய மந்திரி நிதின் கட்கரி, இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
- மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிகளை ஆய்வுசெய்து வருகிறோம்.
டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. ஆகையால், இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மெட்ரோ ரெயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம்.
இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இத்திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் பறக்கும் பேருந்துகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
- 50 முறை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த மூன்றில் இரண்டு பங்கு கட்டணம் வசூல்.
- சுங்கச் சாவடிகளின் அருகில் வசிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு சலுகை.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன்படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகமில்லாத வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
அதன்படி மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து 1 மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இக்கட்டணம் 315 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வர்த்தகமில்லாத வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு மட்டும் இச்சலுகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி என்ற வேளாண்மை பல்கலைகழகம் சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மாரட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, மத்திய மந்திரிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்து விடும். இதனால் நாட்டில் எரிபொருட்களுக்கு தடைவிதிக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதனை கொண்டு வாகனங்களுக்கு பயன்படுத்தலாம்.
பச்சை ஹைட்ரஜனை ஆழ்துளை கிணற்றில் இருந்து தயாரிக்கலாம். இதனை ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கலாம். விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமில்லாமல் எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாற வேண்டும். விவசாயிகள் கோதுமை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை மட்டும் பயிரிடுவதால் தனது எதிர்காலத்தை மாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் ஒரு லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும்.
- மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக எத்தனால் இருக்கும்.
மும்பையில் நடைபெற்ற புதிய இந்தியா-புதிய தீர்வு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது:
டெல்லி-மும்பை விரைவுச்சாலை உள்பட பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். மும்பையை, டெல்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருகிறது.
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி - மும்பை விரைவுச் சாலையின் 70% பணிகள் முடிவடைந்துள்ளன. இது தேசிய தலைநகர் மற்றும் வர்த்தக தலைநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும். பெட்ரோலுக்கு இணையான கலோரி ஃபிக் மதிப்புடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
பெட்ரோலில் இருந்து பெறும் சராசரி அளவை எத்தனாலில் இருந்து பெற முடியும் என்று பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சான்றளித்துள்ளது. ஃப்ளெக்ஸ் வகை எஞ்சின் வாகனங்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என்பதால், எதிர்காலத்தில் எத்தனாலை விருப்பமான எரிபொருளாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும், மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக அது இருக்கும். எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதில் மகாராஷ்டிரா முன்னோடி மாநிலமாக முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்த தேசிய நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும்.
- போக்குவரத்து நேரம் குறைவதுடன், விபத்துக்கள் தடுக்கப்படும்.
நான்கு மாநிலங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலைத் திட்டம் பணிகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்கிறது. இணைப்பின் வாயிலாக செழிப்பு என்ற யுகத்தை நோக்கி புதிய இந்தியாவை மோடி அரசு வழி நடத்திச் செல்கிறது.
இத்திட்டத்தின் கீழ் கோவா, கர்நாடகா எல்லைப்பகுதியிலிருந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலை எண்17-லில் உள்ள குந்தப்பூர் வரை 173 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதாவது 92.42 சதவீதம் அளவிற்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் டிசம்பர் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
மொத்தமுள்ள 187 கிலோமீட்டர் தொலைவிலான சாலை பகுதியில் ஒரு புறம் அரபிக்கடல் கடற்கரையோரமும், மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் அமைந்துள்ளது.
அற்புதமான காட்சியுடன் அமைந்துள்ள இந்த கடற்கரையோர நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும். இதன் மூலம் போக்குவரத்து நேரம் குறையும், விபத்துக்கள் தடுக்கப்படும், எரி்பொருள் சேமிக்கப்படும்.
தமிழகத்தின் கன்னியாகுமரியுடன் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, மங்களூர், உடுப்பி, பனாஜி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைத்து பயணிகளுக்கு உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்பு அனுபவத்தை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
புதிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பன்மடங்கு வாய்ப்புகளுடன், திட்டம் அமையவுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை வழங்க இந்த நெடுஞ்சாலை மேம்பாட்டு முயற்சி உதவுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கியிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வாகனங்கள் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க வகை செய்கிறது.
- இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை இது ஊக்குவிக்கும்.
பாரத்-என்சிஏபி எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, ஒப்புதல் அளித்துள்ளார்.
பாரத்-என்சிஏபி திட்டம், இந்தியாவில் வாகனங்களுக்கு விபத்து சோதனைகளில் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க வகை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரை மையமாகக் கொண்ட இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான கார்களைத் தேர்வுசெய்யலாம். அதே நேரத்தில் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் இது ஊக்குவிக்கும்.
இந்தியாவை உலகின் முதல்நிலை வாகன தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கத்திற்கு பாரத் என்சிஏபி திட்டம் முக்கிய கருவியாக இருக்கும் என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய வாகனத்துறையை தற்சார்பு கொண்டதாக மாற்றவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- இந்தியாவில் அமலாக இருக்கும் புது சட்டம் பற்றிய தகவலை மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
- இது மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதோடு, சாலை ஒழுங்கை பின்பற்ற வைக்கும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி சாலைகள் மற்றும் வீதிகளில் தவறாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
புது சட்டத்தின் கீழ் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் வாகனத்தின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தவறை இழைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, அதில் ரூ. 500-ஐ புகைப்படம் எடுத்து அனுப்பிய நபருக்கு வழங்கப்படும்.

தவறான பார்க்கிங் செய்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து புகைப்படம் மூலம் தகவல் கொடுத்தவருக்கு ரூ. 500 சன்மானமாக வழங்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
புது சட்டம் பற்றிய தகவல்களை மத்திய மந்திரி நிதின் கட்கரியோ அல்லது அமைச்சக அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அந்த வகையில், இந்த சட்டம் இயற்றப்படுவது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாகவே எடுத்துக் கொள்ள வேணஅடும். ஒருவேளை இந்த தட்டம் அமலுக்கு வந்தால், சாலைகளில் பார்க்கிங் தொடர்பாக நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.
- தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது.
- தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது.
புதுடெல்லி :
வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக்கொள்ளாமல், சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்து அவற்றை தவறாக நிறுத்துகிறபோது அது போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க சட்டம் வரப்போகிறது. இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசுகையில்,
"நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்போகிறேன். தவறாக நிறுத்திய வாகனங்களை படம் எடுத்து அனுப்புகிறபோது, அந்த குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கிறபோது, படம் எடுத்து அனுப்பியவருக்கு ரூ.500 பரிசாக வழங்கப்படும்.
அப்போது வாகனங்களை தவறாக நிறுத்தும் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்" என குறிப்பிட்டார்.
வாகனங்களை நிறுத்துவதற்கு மக்கள் இடம் ஏற்படுத்திக்கொள்ளாமல், தங்களது வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமிக்க வைத்து விடுகின்றனர் என அவர் வருத்தம் தெரிவித்தார்.
- 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- அனில் பிரோஜியா உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.
அப்போது, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினர் அனில் பிரோஜியாவிடம், உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நிதின் கட்கரி நகைச்சுவையாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனில் பிரோஜியா தனது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அவருக்கு நான் ஒரு நிபந்தனை விதித்துள்ளேன். 135 கிலோவாக இருந்த எனது உடல் எடையை இப்போது 93 கிலோவாக குறைத்து உள்ளேன்.
இது தொடர்பான எனது புகைப்படத்தை அவரிடம் காண்பித்து நீங்களும் உங்கள் எடையைக் குறைத்துக் கொண்டால் நிதி வழங்கப்படும் என அவரிடம் கூறினேன். ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தினமும் உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு 6 கிலோ எடையை குறைத்தார். இதற்காக 2 மணி நேரம் செலவிடுகிறார். அத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "மத்திய மந்திரி நிதின்கட்கரியின் அறிவுரைப்படி உடல் எடையை குறைத்து வருகிறேன். இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளேன். மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது அவரை சந்தித்து, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நினைவுப்படுத்த உள்ளேன்" என்றார்.
