என் மலர்tooltip icon

    இந்தியா

    2024-ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.77 லட்சம் பேர் உயிரிழப்பு
    X

    2024-ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.77 லட்சம் பேர் உயிரிழப்பு

    • விபத்து எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகம்
    • விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடம்

    2024-ல் இந்தியாவில் சாலைவிபத்தில் 1.77 லட்சம் பேர் இறந்ததாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மக்களவையில் தெரிவித்தார். அதாவது ஒரு நாளைகு 485 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகமாகும்.

    2024-ல் நாட்டில் பதிவான மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 1,77,177 ஆகும். இதில் eDAR போர்ட்டலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கு வங்கம் தொடர்பான தரவுகளும் அடங்கும். 2023 ஆம் ஆண்டு மொத்தம் 4,80,583 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். 4,62,825 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இங்கு 23,652 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,118 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் 18,347 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18,449 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இறப்பு எண்ணிக்கை 15,366 லிருந்து 15,715 ஆக அதிகரித்துள்ளது. இவற்றிற்கு மாறாக கேரளா குறைந்த அளவு விபத்து சதவிகித்தை பதிவு செய்துள்ளது.

    Next Story
    ×