என் மலர்
நீங்கள் தேடியது "சாலை விபத்துகள்"
- கணவன் மற்றும் 2 மகன்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
- கணவன் மற்றும் மகன்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கணவன் மற்றும் 2 மகன்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
ஐடி ஊழியராக சிவச்சந்திரன், மனைவி திவ்யா (33), மகன்கள் தர்ஷித் (8), தர்ஷன் (2) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், திவ்யா பலியான நிலையில் படுகாயமடைந்த சிவச்சந்திரன், தர்ஷித், தர்ஷன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
- விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் பாலம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக பாலம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள தொழில் அதிபர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த ஊரை சேர்ந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
அங்கு உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோரிக்கை வருகிறது.
அதே போல பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்று கூறியதால் அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி 2012-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கின் மீதான விசாரணை 13 ஆண்டாக நிலுவையில் இருந்தது.
புதுடெல்லி:
சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரனை கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை விபத்துகளைக் குறைக்க புதிய பாதுகாப்பு விதிகளை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 ஆண்டாக நிலுவையில் இருந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது குற்ப்பிடத்தக்கது.
- விபத்தில் கார் உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் கார் லாரிக்கு அடியில் சிக்கியதால், உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழு உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்கு டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1.46 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இத்திட்டதில் கொண்டு வரப்படுகிறது
- பொறியியல் மாணவர்களையும் இதில் ஈடுபடுத்த அரசு முடிவெடுத்திருக்கிறது
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) அனைத்தையும் குழிகள் மற்றும் பள்ளங்கள் அறவே இல்லாத சாலைகளாக மாற்றுவதற்கான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென காலக்கெடுவையும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சாலைவழிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான யணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பொறுப்பில் உள்ள ஒவ்வொரு திட்ட இயக்குனரும் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைகளின் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட வேண்டும், மேலும், அங்கு எழும் எந்தவொரு பராமரிப்பு சிக்கல்களையும் உடனடியாக தீர்க்க வேண்டும். இப்பணியை சரிவர செய்யாத பொறியாளர்கள் மீது நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 1.46 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை இந்த நடைமுறைக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
குழிகளைக் கண்டறிவது, பராமரிப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது, வடிகால்கள் அமைப்பது உள்ளிட்ட இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்த பொறியியல் மாணவர்களை ஈடுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களினால் மட்டுமே 3625 சாலை விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் சிக்கி இதுவரை 1481 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2021-ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இப்பின்னணியில் அரசின் இந்த நடவடிக்கை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
- 2024 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் திட்டம் நாடு முழுவதும் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்,
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் சண்டிகரில் கடந்த ஆண்டு மாா்ச்சில் தொடங்கப்பட்டது. பின்னா், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் இந்த வசதி அமலுக்கு வரும்.
இந்த திட்டத்தின் கீழ் விபத்துக்குப் பிறகு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
2024 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30,000 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர்.சாலை விபத்தில் மரணித்தவர்களில் 66% பேர் 18-34 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அபராத தொகையை உயர்த்தினாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வரை சாலை விபத்துகளை குறைக்க முடியாது.
- ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் இதனை யாரும் இதுவரை பின்பற்றியது கிடையாது.
சென்னை:
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிர்பலிகளின் எண்ணிக்கையோ ஏராளம். சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
போக்குவரத்தினை முறையாக கடைப்பிடிக்காமல் வாகன ஓட்டிகள் செல்வது விபத்துக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்றதாகும். சாலைவிபத்தினால் உயிரிழப்பு மட்டுமில்லாமல் கை, கால்கள் போன்ற உறுப்புகளை இழந்து பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் சாலை விபத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளது. விதிகளை பலர் கடைப்பிடிக்காமல் உள்ளனர்.
இந்தநிலையில் அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ளார்.
தற்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000, செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் சென்றால் ரூ.1000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகையானது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை தமிழகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது புதிய அபராத தொகையை இ-சலான் கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா?, போக்குவரத்து விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது பற்றி மக்கள் பார்வை வருமாறு:-
வேலூரை சேர்ந்த பாண்டியன்:-
அபராத தொகையை உயர்த்தினாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வரை சாலை விபத்துகளை குறைக்க முடியாது. பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் விதிப்பதற்கு பணம் பெற்று அவர்களுக்கு அரசே ஹெல்மெட் வாங்கி கொடுக்க வேண்டும்.
இதனால் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வருவது குறையும். அதேபோல் அவசர தேவைகளுக்காக சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். மேலும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு அபராத தொகையை பெற்று அரசே இன்சூரன்ஸ் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். விபத்துகளுக்கு மிக முக்கிய காரணம் மோசமான சாலைகளே. எனவே சாலைகளை சீரமைத்து, சீரமைக்கும் காண்டிராக்டரே அதை பராமரிக்கும் பணியையும் குறிப்பிட்ட வருடங்களுக்குள் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடுகின்றனர். அதுபோல் மற்ற சாலை விதிகளையும் பின்பற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சாந்தி:-
சாலை விபத்துகளில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வருந்தத்தக்கது. போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதத்தொகையை அரசு உயர்த்தியது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினாலே பெரும்பாலான விபத்துகள் குறையும், அதற்கு அரசு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குண்டும், குழியுமான சாலைகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பத்தூரை சேர்ந்த கல்பனா:-
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் இதனை யாரும் இதுவரை பின்பற்றியது கிடையாது. இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோய் உள்ளது. தற்போது அரசு ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் என்று அறிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, ஆம்புலன்சுக்கு வழி விடாமல் செல்வது போன்றவற்றுக்கு அபராதம் விதித்து அரசு அறிவித்துள்ளது. இதை மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் விபத்துகள் குறையும். மேலும் விலை மதிப்பில்லா உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். விபத்தில்லா தமிழகமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். அரசு அறிவிப்போடு நின்று விடாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணிப்பேட்டையை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி குணசேகரன்:-
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் நடவடிக்கையாகும். அபராதம் விதிப்பது என்பது சட்டத்தை மக்களை பின்பற்ற வைக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்க கூடாது. உதாரணமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற நடவடிக்கை, வாகனத்தில் செல்லும் போது வழியில் லிப்ட் கேட்பவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி, அவர்களை பின்புறத்தில் அமரவைத்து செல்பவர்களுக்கு, தர்ம சங்கடத்தை உண்டாக்கி, லிப்ட் கொடுக்காமல் செல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இதெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு இதை மறுபரிசீலனை செய்து, இதை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
திருவண்ணாமலையை சேர்ந்த வினோத்:-
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, அவர் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அபராத தொகையை அதிகரித்து உள்ளது ஏழைகளை பாதிக்கும். இந்த அபராத நடைமுறை போக்குவரத்து விதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் அரசு பொதுமக்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி தரமற்ற ஹெல்மெட் விற்பனை செய்வதை அரசு தடுக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ள ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன்:-
போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க போலீசார் சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. எனினும் மக்களிடையே அச்சம் இல்லை. எனவே அபராதம் விதித்தும் மக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். அபராத தொகை உயர்த்தப்பட்டதால் அந்த தொகைக்கு ஹெல்மெட் வாங்கி விடலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். 28-ந்தேதி அபராத நடவடிக்கை அமலுக்கு வந்த பின்னர் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.






