search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "potholes"

    • பாதாள சாக்கடை-கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டி மூடப்படாத குழிகளால் தொடரும் விபத்துகள் அதிகரித்துள்ளது.
    • சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வளர்ச்சியில் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறைந்து கொண்டே செல்கிறது. நக ரின் நுழைவு வாயிலான பஞ்சு மார்க்கெட் முதல் யூனியன் அலுவலகம் வரை மிக மோசமான நிலையில் உள்ள சாலையால் நாள் தோறும் நடக்கும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

    அதிலும் ஒரு மணி நேரம் மழை பெய்துவிட்டால் சாலை எது, சாக்கடை எது என்று தெரியாத அளவுக்கு மூழ்கிவிடுகிறது. பாதசாரி கள் முதல் வாகனங்களில் பயணம் செய்வோர் திக்கு தெரியாமல் தடுமாறும் நிலை இன்றளவும் தொடரத் தான் செய்கிறது.

    இதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தை வலியுறுத்தி ராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று (21-ந்தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட் டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு அனுமதி வழங்கப் படாத நிலையில் உண்ணா விரதம் இருக்க முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில அடைத்து வைத்தனர். கைதானவர்கள் அங்கும் தங்களது போராட் டத்தை தொடர்ந்தனர்.

    ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரப ரணி கூட்டு குடிநீர் திட்டப்ப ணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நடைபெற்ற தென்காசி சாலை கடந்த இரண்டு ஆண்டு காலமாக போக்கு வரத்துக்கு லாயக்கற்று மிக மோசமான நிலையில் உள் ளது. இச்சாலையில் பய ணித்த பலரும் விபத்துக்குள் ளாகி உள்ளனர். கடந்த ஆண்டு ஒரு மாணவன் உயி ரிழந்ததுடன், பலருக்கு கை, கால் முறிவு, முதுகுத் தண்டு வட பாதிப்பும் ஏற்பட்டுள் ளது.

    எனவே இந்த சாலையை சரிசெய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். அதன் அடிப்படையில் இச்சா லையை ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் இந்தச் சாலை போக்குவரத் துக்கு பயன்பாடு உள்ள வகையில் நன்றாக உள்ளது என சான்று அளித்தது கூட்டமைப்பு நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது.

    இந்நிலையில் தான் 12 மணி நேரம் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு கடந்த 11 ஆம் தேதி அனுமதி கேட்ட நிலையில் நேற்று 20.11.23 இரவு 11 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. இரண்டு வருட காலமாக மக்கள் துன்பத்திற்கு முடிவு கிடைக்காத நிலையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டால் அதை தடுக்கக்கூடிய வகையில் காவல்துறைக்கு நிர்பந்தம் இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களுடைய உணர்வு களை வெளிப்படுத்தும் வித மாக தடையை மீறி ராஜபா ளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் ஜவகர் மைதானத்தில் உண்ணா விரதத்தை தொடங்கினர். இதையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட ஒருங்கிணைப் பாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணி–கண்டன் தலைமையில் பங்கேற்றோர் கைதானார் கள்.

    இந்த போராட்டம் நடை பெற்ற ஒரு மணி நேரத்திற் குள் சாலைகளை (பேட்ச் ஒர்க்) சரி செய்யும் பணி களை தமிழக நெடுஞ்சா லைத்துறை துவக்கியுள்ளது. நிரந்தரமாக பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென் றால் பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை புதிதாக சாலை அமைக்கப்பட வேண்டும். எனவே அதற்கான முயற்சி களை தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணையம் செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை விரை வில் அறிவிப்போம் என சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பினர் தெரிவித்தனர்.

    நேற்று மதியம் டயருக்கு பஞ்சர் ஒட்டியது போல தென்காசி செல்லும் மெயின் ரோடான தேசிய நெ(கொடு)ஞ்சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்து முடிக் கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு மேல் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் ஒட்டுப்போட்ட சாலை பணி கள் ஒட்டுமொத்தமாக கரைந்து காணாமல் போனது. எனவே இனிமே லும் இதுபோன்ற மக்களை ஆறுதல் படுத்தும் பணிகளை கைவிட்டு சாலை சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 1.46 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இத்திட்டதில் கொண்டு வரப்படுகிறது
    • பொறியியல் மாணவர்களையும் இதில் ஈடுபடுத்த அரசு முடிவெடுத்திருக்கிறது

    இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) அனைத்தையும் குழிகள் மற்றும் பள்ளங்கள் அறவே இல்லாத சாலைகளாக மாற்றுவதற்கான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென காலக்கெடுவையும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சாலைவழிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான யணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன்படி, தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பொறுப்பில் உள்ள ஒவ்வொரு திட்ட இயக்குனரும் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைகளின் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட வேண்டும், மேலும், அங்கு எழும் எந்தவொரு பராமரிப்பு சிக்கல்களையும் உடனடியாக தீர்க்க வேண்டும். இப்பணியை சரிவர செய்யாத பொறியாளர்கள் மீது நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.

    நாடு முழுவதும் உள்ள மொத்தம் 1.46 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை இந்த நடைமுறைக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

    குழிகளைக் கண்டறிவது, பராமரிப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது, வடிகால்கள் அமைப்பது உள்ளிட்ட இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்த பொறியியல் மாணவர்களை ஈடுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களினால் மட்டுமே 3625 சாலை விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் சிக்கி இதுவரை 1481 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2021-ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இப்பின்னணியில் அரசின் இந்த நடவடிக்கை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • குடிநீர் திட்டப்பணிக்காக பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாக மாலை மலர் செய்தி வெளியானது.

    இதனைதொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் ராமேசுவரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்ட குடி கார்னர் பகுதியில் சேதமடைந்த காவேரி குழாய் சீரமைப்பு பணிக் காக குழி தோண்டப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. சிமெண்ட் மூலம் சீரமைக் கப்பட்டதால் குறைந்த பட்சம் 12 மணிநேரம் ஆகும்.

    குழி தோண்டப்பட்ட இடம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, ராமநாதபுரம், கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிக்கு பிரிந்து செல்லும் பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா கினர். மேலும் அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    • சிறப்பூர் அடுத்த பகுதியில் இருந்து சாமிதோப்பு இடையே உள்ள சாலையோரம் மணல் குவியல்,பள்ளங்கள் காணப்படுகிறது.
    • கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இரு சக்கரம், கார்களில் வருபவர்கள் வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்ல விஜயராமபுரம், சிறப்பூர், சாமிதோப்பு, நடுவக்குறிச்சி வழிச்சாலை பிரதான சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் இரவு- பகலாக ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்த சாலையில் சிறப்பூர் அடுத்த பகுதியில் இருந்து சாமிதோப்பு இடையே உள்ள சாலையோரம் மணல் குவியல்,பள்ளங்கள் காணப்படுகிறது.

    இதனால் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இரு சக்கரம், கார்களில் வருபவர்கள் வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் சாமிதோப்பு அடுத்து சுடலைமாட சுவாமி கோவில் முன்பு சாலையோரத்தில் கரையே காணப்படுகிறது. இரவு நேரத்தில் இது தெரியாமல் வருபவர்கள் சாலை மேட்டில் இருந்து கீழே விழுந்து வாகனங்கள் கவிழும் அபாய நிலையும் காணப்படுகிறது.

    இந்த வழியே அடிக்கடி பயணிப்பவர்கள் இதனை சுதாரித்து சென்று வருகின்றனர். இந்த வழியை புதியதாக பயன்படுத்தி வருபவர்கள் இந்த தருணம் தெரியாமல் பெரிய விபத்து நிகழ வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    ஆதலால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு நடத்தி சாலையோரத்தில் குவிந்துள்ள மணல் குவியலை அப்புறப் படுத்துவதுடன், சாலையோரத்தில் கரையே இல்லாத பகுதியில் மணலை கொண்டு கரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.
    • ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. வேதக்கோவில் பகுதியில் இருந்து முதலூர் செல்லும் சாலை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.

    ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

    சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியபோது அதில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் மீது சகதி நீர் பாய்வதால் மிகுந்த சிரமத்தில் சென்று வர வேண்டிய உள்ளது. இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நெடுச்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் இதுவரை எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

    மேலும் இருசக்கர வாகனங்கள், இதர வாகனங்கள் இந்த பள்ளங்களால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படாமல் இருக்க இந்த சாலையோர பள்ளங்களை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இந்த பணிக்காக சாலை தோண்டப்பட்டு குண்டு குழியுமாக 1 மாதமாக உள்ளது.
    • எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குழிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு செல்லும் முக்கியமான சாலையில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டபணிகள் நடந்தது. இந்த பணிக்காக சாலை தோண்டப்பட்டு குண்டு குழியுமாக 1 மாதமாக உள்ளது.

    இந்த சாலையில் தான் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் மதுரை, ஈரோடு, திருச்சி செல்லும் பஸ்கள் செல்கிறது. தற்போது அந்தப் பள்ளங்கள் மரண குழிகளாக காணப்படுகிறது.இதில் இந்தக் குழியில் மோட்டார் சைக்கிள் வருபவர்கள் தெரியாமல் விழுந்து விடுகின்றனர்.

    மேலும் சாலையில் பஸ்கள் புழுதியை கிளப்பி கொண்டு செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குழிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • அபாய பள்ளங்களை உடனடியாக சரி செய்து வாகன விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியில் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வரும் நிலையில் பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் சாலைகளில் இடையிடையே அபாய பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் எதிரெதிரே கார், வேன் உள்ளிட்டவை வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    எனவே பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் சாலையில் காணப்படும் அபாய பள்ளங்களை உடனடியாக சரி செய்து வாகன விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கி வரும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கனமழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.#Potholes

    பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முக்கிய முன்னெச்சரிக்கை பணி சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்வதாகும். ஏனென்றால், மழை பெய்த பின்னர் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியிருக்கும் போது பள்ளம், மேடுகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

    இப்படி நாடுமுழுவதும் கடந்தாண்டு சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3600 ஆகும். உத்தரப்பிரதேசம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 987 பேர் உயிரிழந்துள்ளனர். 

    அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 726 பேரும், ஹரியாவாவில் 522 பேரும் சாலை பள்ளங்களுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு பலியானவர்களை விட 2017-ம் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.



    சாலைகளை செப்பனிடும் பணிகளுக்காக பலநூறு கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கிய பின்னரும் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது வேதனை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. 

    கடந்த ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள், வீரர்கள் என மொத்தம் 803 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களை விட சாலை பள்ளத்தினால் பலியானவர்கள் 4 மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால், பயங்கரவாத இயக்கங்களே நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். பொதுமக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டங்களை கொண்டுள்ளது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், சாலை பள்ளங்களில் சிக்கி பலியானவர்கள் அனைவரும் சாமானியர்களே, எந்த விஐபி வீட்டுக்கு செல்லும் சாலைகள் பள்ளம், மேடாக உள்ளது எனவும் பலர் குமுறிவருகின்றனர்.
    ×