என் மலர்
நீங்கள் தேடியது "பலி"
- சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
- பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், அடுத்த குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது26). நேற்று மாலை இவரை சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது பஸ்மோதிய விபத்தில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்ததாக கூறி அவரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இறந்து போன சீனிவாசன் குறித்து போலீசார் முறையாக எந்த தகவலும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் இன்று காலை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டி திடீர் மறியலில் ஈடுபட்டனர். சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள சீனிவாசனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது விபத்து.
- புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சரவணம்பட்டி,
கோவை கணபதி மாம ரத்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் மாநாகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் சஞ்சித்விஷ்ணு(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சஞ்சித் விஷ்ணு நேற்று வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கணபதி சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, எதிரே வந்த சரக்குலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் பல த்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சஞ்சித் விஷ்ணுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது தந்தை நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விபத்து நடந்த அந்தப்பகுதி போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாகும். இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைமறைவான வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள ஆலத்தூர் கிராமம், அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் அர்ஜுனன் (வயது58). இவர் கீழானூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த அர்ஜுனன் மூலக்கரையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த வேன் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.
- மாரிமுத்து மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- விபத்து தொடர்பாக அப்துல் ரகுமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 48). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தென்காசியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகி ச்சை க்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (21) என்பவர் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சித்தார்த்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.
- கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள ஏ.எஸ்.குளத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் சித்தார்த் (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்ததும் சித்தார்த் அவரது நண்பர்களுடன் பள்ளியின் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.
அங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது சித்தார்த் ஆழமான பகுதிக்கு சென்றார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடம் கோவில்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தேடினர்.
சிறிது நேரத்துக்கு பின்னர் குளத்தில் இருந்து மாணவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் சித்தார்த்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார்.
- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவண செல்வன்(வயது43).இவர் மாநகர பஸ்சில் டிரைவராக இருந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி திடீரென சரவண செல்வன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவண செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் மோதி படுகாயம்
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
சூலூர்,
சூலூர் கண்ணம்பாளையம், ரத்தினத்தான் தோட்டம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சஞ்சீவ் (வயது 19). இவர்
எல்.அன்.டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக 2 பேர் நடந்து சென்றனர். எனவே அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சஞ்சீவ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த சஞ்சீவ் கீழே விழுந்தார். அப்போது பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நீலாம்பூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல்அறிந்த சூலூர் போலீசார், சஞ்சீவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எல்.என்.டி புறவழிச்சா லையில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் அங்கு பொதுமக்களின் நட மாட்டம் குறையவில்லை.
விபத்தில் பலியான சஞ்சீவ் தொட்டிபாளையம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது சகோதரியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மாலையில் பணி முடிந்ததும் வீட்டுக்கு மீண்டும் அழைத்து செல்வது வழக்கம்.
இதற்காக தான் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான விவரம் தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ரங்கைய்யா பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி லட்சுமி. அந்த பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது.
கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தனது தம்பிகள் மனைவிகளான லட்சுமி, பாலாமணி, அவரது மகன் சரண், லட்சுமி மகள் லாவண்யா ஆகியோர் வந்திருந்தனர்.
நேற்று லட்சுமி, பாலாமணி, சரண், லாவண்யா ஆகியோர் அங்குள்ள கோவில் குளத்திற்கு சென்றனர்.
லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். சிறுவன் சரண் கோவில் குளத்தின் கரையோரம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சரண் கோவில் குளத்தில் விழுந்து மூழ்கி உயிருக்கு போராடினான்.
இதனை கண்ட அவரது தாய் பாலாமணி மகனை காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட லட்சுமி மற்றும் லாவண்யா இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
அருகில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்தவர்களை குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
குளத்தில் அதிக அளவு களிமண் உள்ளதால் சிறுவன் களிமண்ணில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று காலையில் சிறுவனின் உடலை தேடும் பணி நடந்தது.
- அளவூர் நாகராஜ் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றார்.
- விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அளவூர் நாகராஜ் (வயது57). இவர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தார்.
நேற்று இரவு அளவூர் நாகராஜ் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றார்.
போகும் வழியில் சித்தாலப்பாக்கத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை அவரது வீட்டில் விட்டு விட்டு காமாஜபுரம் வழியாக தாம்பரம் நோக்கி சென்றார்.
அப்போது காரை நிறுத்தி விட்டு ரோட்டோர கடையில் சாப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஒரு தனியார் நிறுவன காரில் வந்தவர்களும் காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அந்த காரில் வந்தவர்கள் சாப்பிட்டு முடித்ததும் உதவியாளர் காரை கிளப்பி இருக்கிறார். ஹேன்ட்பிரேக்கில் நின்று கொண்டிருந்த அந்த காரை உதவியாளர் எடுக்க தெரியாமல் எடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த அளவூர் நாகராஜ் மீது மோதியது. இதில் காருக்குள் சிக்கிய அளவூர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது, உணவகத்தில் உணவு அருந்தி விட்டு சாலை அருகில் நின்று கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி. நாகராஜ் எதிர்பாராத விதமாக கார் மோதியதில் காலமான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஐந்து மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என்று கூறினேன்.
அதற்கு பிறகு அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக்கூடாத ஒருவரை இழந்து விட்டோம்.
காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்த ஒரு செயல் வீரராக அவர் திகழ்ந்தார். அளவூர் நாகராஜ் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
- ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி- மதுரை ரோடு குப்பான்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவரது மனைவி கௌசல்யா ( 23). இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே உள்ள பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது ரமேஷ் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினார்.இதில் ரமேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.