search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The"

    • காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • இதில் 75 நிறுவனங்கள் மீது வழக்கு பதவு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் தொழிலா ளா் உதவி ஆணையா் (அம லாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வா ளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின்போது, தொழி லாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணி புரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படு வதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 31 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 25 வணிக நிறுவனங்களிலும், 47 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 40 இடங்களிலும், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 10 நிறுவனங்களிலும் என மொத்தம் 90 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 75 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று வி டுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது.

    இதனை யடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமை யாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு பதியப்பட்டது.

    • வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவ சாயம் செய்து வருகிறார். இவரது வீடு தென்ன ங்கீற்று ஓலைகளால் வேயப்பட்ட குடிசை வீடா கும்.

    இந்த நிலையில் காலை இவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.

    இதனால் ஓலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடன டியாக வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தப்பினார்.

    இதையடுத்து அக்கம் பக்கம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    • பவானி அருகிலுள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் கார் அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளாராக இருப்பவர் சுரேஷ் (50) . இவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்றார். காரை டிரைவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் பவானி அருகிலுள்ள சித்தோடு, நசியனூர் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கார் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.‌ காரில் பயணம் செய்த சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் (50) காயத்துடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த பச்சியப்பன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை ரோட்டில் பாய்ந்து சென்ற சிறுத்தையால் அதிர்ச்சி அடைந்த விவசாயி.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். அதே போல் இரவு நேரங்களில் புலி மற்றும் சிறுத்தைகளும் அடிக்கடி ரோட்டை கடந்து உலாவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அடுத்த புது குய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (41). இவருக்கு அந்த பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இதில் மாட்டு தீவனங்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறார். மேலும் 2 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால் கறந்து சத்தியமங்கலம், பண்ணாரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பால் விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் புது குய்யனூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பால் விற்பனை செய்ய சென்று கொண்டு இருந்தார். அவர் சத்தியமங்கலம்-பண்ணாரி ரோடு குய்யனூர் பிரிவு அருகே சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்பு ஏதோ ஒரு உருவம் பாய்ந்து சென்றது. இதை கண்டு நிலை தடுமாறினார்.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விளக்கை எறிய விட்டு பார்த்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு சிறுத்தை சென்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது முன்பு சென்றது சிறுத்தை என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் குறித்து பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதிகளில் இருந்து சிறுத்தை, யானை மற்றும் வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகள் வழியாக செல்லும்போது கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 14 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 957 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 15 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 953 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    • பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×