என் மலர்
நீங்கள் தேடியது "WHO"
- ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை குடிபோதையில் வாலிபர் திருடி சென்றார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் முத்து தெருவை சேர்ந்தவர் பூசார்அலி (47). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் பூசார்அலி தனது நண்பர் அணீஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிள் தேடி பவானி ரோடு வழியாக, பி.பி.அக்ரகாரம் அடுத்த பேரஜ் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பூசார் அலியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கி ளுடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொ ண்டதில் அவர்பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த சுலைமான் (20) என்பதும், குடிபோதையில் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
- உலக அளவில் 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
ஜெனீவா:
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என தெரிவித்தார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது.
சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். இந்த நோயால் சிறிய பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.
தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகள் உள்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
- இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பணி வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கடந்த 9-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 8 நபர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் தையல் பயிற்சிக்கும், 14 நபர்கள் முதல்நிலை நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை நேர்முக தேர்வுக்கும், 20 நபர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கும், ஒரு நபர் சிறுதொழில் அமைக்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பணி ஆணையை வழங்கினார்.
இதுகுறித்து வேலை வாய்ப்பு பெற்ற கருங்கல் பாளையம் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கூறியதாவது:
எனக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவர் திடீரென கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதனால் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பெரும் துயரத்தில் இருந்த எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் புதிய வழியை காட்டியுள்ளது.
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். விரைவில் பணியில் இணைகிறேன். இதன் மூலம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் என்னால் உழைத்து எனது மகளை காப்பாற்ற முடியும்.
இந்த நம்பிக்கை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
- இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, ஜூன். 22-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.
அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.
அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.
இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.
- பெருந்துறை அருகே 50 அடி ஆழம் கொண்ட தோட்டத்து கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
- பெருந்துறை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 88). கணவர் இறந்து விட்ட நிலையில் அம்மணியம்மாள் தனது மகன் துரைசாமி என்பவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
துரைசாமி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட 10 அடி தண்ணீர் உள்ள தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று இரவு அம்மணியம்மாள் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
உடனடியாக துரைசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி அம்மணியம்மாள் உடலை கயிறு கட்டி பிணமாக மீட்டனர்.
பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் அம்மணியம்மாளின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது.
- இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை.
ஜெனீவா:
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 சதவீதம் குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்து ஏறக்குறைய 7,600 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் கூறியதாவது:
கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை.
பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு கொரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.
உலகம் முழுவதும் காற்று, நீர் போன்றவற்றின் மாசுபாடு தற்போதைய மனித வாழ்வை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஒன்றாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டின் அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், வரும் தீபாவளியில் ஏற்படும் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த, பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உடல்நலம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 2016-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறினால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த கருத்தரங்கில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #WHO #AirPollutionKills
புற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்தபடி உள்ளது. மற்ற நோய்களை போல் புற்று நோய்க்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன் காரணமாக புற்று நோய் பரவலாக எல்லா நாடுகளிலும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக ஐ.நா. அமைப்பின் சர்வதேச புற்று நோய் ஆய்வு மையம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், 2018-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்படும் என்று கணித்துள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 96 லட்சம் பேர் புற்று நோய்க்கு உயிர் இழப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு 1 கோடியே 41 லட்சம் பேர் புதிதாக புற்று நோய்க்கு ஆளானார்கள். ஆண்டுக்கு 82 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.
ஆனால், இப்போது அதைவிட அதிகமாக நோய் பாதிப்பும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
இது சம்பந்தமாக அந்த மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் வில்டு கூறும் போது, உலகம் முழுவதும் புற்று நோய் அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதை தடுப்பது உலகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்று கூறினார்.

ஆண்களில் 5-ல் ஒருவருக்கும், பெண்களில் 6-ல் ஒருவருக்கும் வாழ்நாளில் எந்த நேரத்திலும் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21-ம் நூற்றாண்டில் புற்று நோய் காரணமாகத்தான் உலகத்தில் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் என்று கணித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
12-க்கும் மேற்பட்ட புற்று நோய் வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு நாட்டில் நிலவும் சமூக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட வகை புற்று நோய்கள் அந்த நாட்டு மக்களை தாக்குகின்றன.
ஆசிய நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறவர்களும், உயிர் இழப்பவர்களும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகில் நுரையீரல் புற்று நோயால் அதிக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. மொத்த புற்றுநோய் உயிர் இழப்பில் கால் சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயால் உயிர் இழக்கின்றனர்.
பெண்களை பொறுத்த வரை 15 சதவீதம் பேர் மார்பக புற்று நோயாலும், 13.8 சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயாலும், 9.5 சதவீதம் பேர் பெருங்குடல் புற்று நோயாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
டென்மார்க், நெதர்லாந்து, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட 28 நாடுகளில் புற்று நோய்க்கு பெண்கள் உயிர் இழப்பது அதிகமாக உள்ளது. #Cancer #UN
உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த ஆய்வு கடந்த 2001-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #WHO #Exercise