என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Health Organization"
- மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
- மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஜெனிவா:
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறியதாவது:-
ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை அமல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது. மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது. மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
- காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
- இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.
இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.
ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
The crisis in #Gaza is an acid test for the @UN, its Member States and for humanity.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 17, 2023
This organization was established to foster peace in our world.
We continue to call for an end to this conflict. pic.twitter.com/IDpfWInHzL
- சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
- சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும்.
சென்னை:
சர்க்கரை வியாதி என்பது உலகம் முழுக்க பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை பொறுத்தவரை சர்க்கரை நோய் வியாதி டைப்-1, டைப்-2 என்று இரண்டு வகை உள்ளன.
சர்க்கரை நோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டாலும் முக்கியமான காரணம் புகைப்பிடிப்பது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடலின் வழக்கமான செயல்பாட்டை புகைப்பிடிப்பது மாற்றி அமைத்துவிடும். அதாவது இன்சுலின் சுரப்பதை கட்டுப்படுத்தும்.
இதனால் டைப்-2 சர்க்கரை வியாதி உடலில் ஏற்கனவே இருந்தால் அது அதிகரிக்கும். இல்லை என்றால் வருவதற்கு ஆயத்தமாகும். சர்க்கரை வியாதி டைப்-2 என்பது பரவலாக இருப்பது தான். இது நாள்பட்ட வியாதி ஆகும். இதை உரிய மருந்துகள் மூலம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது.
ஏனெனில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு எப்படி அது ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகுமோ அதேபோல் புகைப்பிடிப்பவர்களுக்கும் காயம் ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகும்.
சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சர்க்கரை வியாதியால் உயிரிழப்புகளும் நேரிடுகிறது. காரணம் சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும். உயிரிழப்புகளுக்கு சர்க்கரை வியாதியும் ஒரு காரணமாகி உள்ளது.
புகை பிடிப்பதை கைவிட்டால் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்கும் படி மக்களிடம் விழிப்புணர்வை அதிக அளவு ஏற்படுத்தி வருகிறார்கள்.
புகைப்பிடிப்பதை குறைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. புகைப்பிடிப்பதை குறைப்பதன் மூலம் இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மட்டுமின்றி சர்க்கரை வியாதி வருவதையும் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 13 கோடி பேர் சர்க்கரை நோய் வரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களாகவும் கண்டறியப்பட்டு உள்ளார்கள். கேரளா, புதுவை, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் அதிலும் நகர வாழ்க்கை அதிகமாக இருக்கும் இடங்களில் சர்க்கரை வியாதி அதிக அளவில் காணப்படுகிறது.
- உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள் பலரும் (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள்.
புதுடெல்லி :
நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் (ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு) பிரான்செஸ்கோ பிரான்கா கூறியதாவது:-
சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு இல்லாத பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துவது, நீண்ட காலத்துக்கு உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவாது. மாற்று பொருளாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் இன்றியமையாத உணவுப்பொருட்கள் ஆகிவிடாது. அவற்றில் ஊட்டச்சத்தும் இல்லை. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். எனவே பழங்கள், இனிப்பு இல்லாத உணவுகள், பானங்கள் போன்ற இயற்கையாக சர்க்கரையுடன் கூடிய உணவை சாப்பிடுவது உள்ளிட்ட பிற வழிகளை பயன்படுத்தி சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
- மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
ஜெனீவா :
குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது.
இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 8 குழந்தைகள் இறந்துள்ளன.
இந்த நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.
- கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும்.
ஜெனீவா :
உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது.
- இந்த மையத்தை அமைப்பதில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது.
- இந்த மையத்தை அமைக்க இந்தியா சுமார் ரூ.2,000 கோடி நிதி வழங்குகிறது.
பாலி :
இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதனோம், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத் ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டினர்.
இந்த மையத்தை அமைக்க இந்தியா 250 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,000 கோடி) நிதி வழங்குகிறது.
இந்த மையத்தை அமைப்பதில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இதற்காக 'ஜி-20' உச்சி மாநாட்டில் பங்கேற்க பாலி வந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையொட்டி டுவிட்டரில் அவர் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பிரதமர் மோடி அவர்களே, உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை கட்டியெழுப்புவதில் உலக சுகாதார நிறுவனத்துடனான உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. நாம் ஒன்றுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
'ஜி-20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
- டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் பதவியையும் வகிக்கிறார்.
- டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார்.
வாஷிங்டன்
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்துள்ளார்.
டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கிறார். இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார். இவரது மனைவி ஆலிஸ் சென். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
டாக்டர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
- ஏழைகளில் தடுப்பூசி போடும் விகிதம் 13 சதவீதமாகத்தான் இருக்கிறது.
ஜெனீவா :
இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* மத்திய கிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு ஆசியா, அமெரிக்கா என கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அதிகபட்சமாக 47 சதவீதம் தொற்று பரவல் பெருகி இருக்கிறது.
* ஐரோப்பாவில், தென் கிழக்கு ஆசியாவில் 32 சதவீதமும், வட-தென் அமெரிக்காவில் 14 சதவீதமும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
* 110 நாடுகளில் ஒமைக்ரான் வைரசால் (குறிப்பாக பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவற்றால்) தூண்டப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று மாறி வருகிறது. ஆனால் முடிவுக்கு வந்துவிடவில்லை. கொரோனாவின் மரபணு பரிணாமத்தைக் கண்காணிக்கும் திறன் அச்சுறுத்தலில் உள்ளது. ஏனென்றால், பல நாடுகள் கொரோனா தொற்று பாதிப்பு கண்காணிப்பு மற்றும் வரிசைப்படுத்தல் முயற்சிகளை தளர்த்தின. இது நிலைமையை மேலும் மோசமாக்கும். புதிய மாறுபாடுகள் வரவும் காரணமாகும்.
உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஏழைகளில் தடுப்பூசி போடும் விகிதம் 13 சதவீதமாகத்தான் இருக்கிறது. பணக்கார நாடுகள் 6 மாத குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, அடுத்த சுற்றுகளுக்கு திட்டமிடுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்வது புரிந்து கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
இது பற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதி கூறுகையில், “இயற்கையாகவே நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. எந்த நாடும் மெத்தனமாக இருக்க முடியாது. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன. மேலும் இது குளிர்காலத்தின் தொடக்கம்தான்” என குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்கள், தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.