என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்க்கரையை ORS என விற்ற நிறுவனங்களுக்கு ஆப்பு.. 8 ஆண்டுகள் போராடி வென்ற பெண் மருத்துவர் நெகிழ்ச்சி வீடியோ
    X

    சர்க்கரையை ORS என விற்ற நிறுவனங்களுக்கு ஆப்பு.. 8 ஆண்டுகள் போராடி வென்ற பெண் மருத்துவர் நெகிழ்ச்சி வீடியோ

    • WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது.
    • இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் மறைந்துள்ளது.

    இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.

    இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.

    இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    அதாவது, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது.

    இதை வரவேற்று நாம் ஜெயித்துவிட்டோம் என சிவரஞ்சனி நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ORS என்று சந்தைப்படுத்தப்பட்ட பல பானங்களில் WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது. இந்த அதிகப்படியான சர்க்கரை, குறிப்பாகக் குழந்தைகளிடையே, வயிற்றுப்போக்கு மற்றும் அதன் சிக்கல்களை மோசமாக்கக்கூடும்.

    இதனால் ORS என்று தவறாகக் கூறி விற்கப்பட்ட பாணங்களால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில் தற்போது FSSAI உத்தரவு இதை தடுத்துள்ளது.

    இந்த மாற்றத்தின் மூலம், பெற்றோரோ அல்லது நோயாளியோ 'ORS' என்று லேபிளிடப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது, உலகளாவிய சுகாதாரத் தரங்களால் வரையறுக்கப்பட்ட சரியான, உயிர் காக்கும் ஃபார்முலாவை பெறுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×