என் மலர்
நீங்கள் தேடியது "Sudan civil war"
- ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர்.
- சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன.
ஆப்பிரிக்க நாடான சூடானில், உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கு அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வரும் துணை ராணுவத்தினரால் (RSF) இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
அவர் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ஆதர்ஷ் பெஹெரா என்று தெரியவந்துள்ளது.
அவரிடம் RSF போராளிகள் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இரண்டு RSF போராளிகளுக்கு இடையில் உள்ள ஆதர்ஷ் -இடம் ஒரு போராளி, "ஷாருக்கானை உனக்கு தெரியுமா?" என்று கேட்கிறார்.
மற்றொருவர் RSF குழுவை வழிநடத்தும் தங்கள் தலைவரான முகமது ஹம்தான் டகலோ-வை புகழ்ந்து கோஷம் எழுப்பும்படி ஆதர்ஷ்-ஐ கட்டாயப்படுத்துகிறார்.
ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர். அவர் 2022 முதல் சூடானில் உள்ள சுக்ரதி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் இருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் உள்ள அல் ஃபாஷிர் நகரத்திலிருந்து பெஹெரா கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன. அங்கிருந்து அவர் நியாலா நகரத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இந்தியாவிற்கான சூடான் தூதர் முகமது அப்துல்லா அலி எல்டோம் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அல் ஃபாஷிரில் உள்ள தகவல் தொடர்பு அமைப்பு முற்றிலுமாக சரிந்துவிட்டது.
அங்கு அவர்களுடன் யாரும் பேச முடியவில்லை. பெஹெராவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
- நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர்
- கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-ஃபாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டனர்.
சூடானில் மகப்பேறு மருத்துவமனையில் 460 பேரை அந்நாட்டு துணை ராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேறு மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர் என்று உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுமார் 35,000 பேர் எல்-ஃபாஷர் நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-பாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியிருந்த நிலையில் தற்போதைய படுகொலைகள் நடந்துள்ளன.
- ராணுவத்தினருக்கும், ராணுவ விரைவுப் படைகளுக்கும் இடையில் சண்டை
- அண்டை நாடான சாட்டில் தஞ்சைமடையும் சூடான் மக்கள்
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவ அமைப்பான ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (Rapid Support Forces) இடையில் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையை நிறுத்துவதற்கான பல்வேறு ராஜதந்திர முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. எனவே, சூடான் முழு அளவிலான உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
சூடான் ராணுவத்தின் மிக முக்கியமான நட்பு நாடாகக் கருதப்படும் எகிப்தும், ஆர்.எஸ்.எஃப் அமைப்புடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகமோ இதுவரை ஒரு முக்கிய முடிவோ, சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் எந்த முயற்சியோ இதுவரை எடுக்கவில்லை.
ராணுவம் மற்றும் ஆர்.எஸ்.எஃப் உடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட மக்கள் கட்சிகள் உட்பட சூடான் நாட்டு பிரதிநிதிகள் இன்று எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்டோம் பிராந்தியத்திற்கு தென்மேற்கில் உள்ள எல் ஓபீட் பகுதியிலும் மற்றும் தலைநகரின் தெற்கு பகுதியிலும் நேற்று ராணுவத்திற்கும், RSF-க்கும் இடையிலான மோதல்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த முயற்சிகள் நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டார்ஃபர் நகரின் மேற்குப்பகுதி உட்பட சூடானின் பிற பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது.
சூடானின் தலைநகர் கார்டோமில், ஏப்ரல் 15 அன்று வெடித்த சண்டையின் விளைவாக சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
சூடானின் அண்டை நாடான சாட்வில் ஏற்கனவே உள்ள 7 முகாம்களில் 36,423 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்
நடைபெற்று கொண்டு வரும் வன்முறை காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 2,45,000 அகதிகள் வருவதற்கு தயாராகி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா. ஆணையகம் (UN High Commissioner for Refugees) தெரிவித்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






