என் மலர்
நீங்கள் தேடியது "Maternity Hospital"
- நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர்
- கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-ஃபாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டனர்.
சூடானில் மகப்பேறு மருத்துவமனையில் 460 பேரை அந்நாட்டு துணை ராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேறு மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர் என்று உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுமார் 35,000 பேர் எல்-ஃபாஷர் நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-பாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியிருந்த நிலையில் தற்போதைய படுகொலைகள் நடந்துள்ளன.
- மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
- மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்ட துணை இயக்குநர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய மருத்துவமனை கட்டடமாக தகவமைப்பு செய்து தர கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில், வரப்பெற்ற 204 கோரிக்கைகளில், 48 கோரிக்கைகள் வட்டார அளவிலும், 143 கோரிக்கைகள் மாவட்ட அளவிலுள்ள நிதியின் மூலமாக தீர்வு காணும் வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இக்கோரிக்கைகளில் 13 கோரிக்கைகள் மட்டும் மாநில நிதி மூலம் மட்டுமே தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. 13 கோரிக்கைகளுக்கு உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:
திருவாரூர் பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் செயல்பாடின்றி உள்ளது. அதனை அகற்றிவிட்டு 100 படுக்கைகள் கொண்ட புதிய மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும். விஜயபுரம் மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீரை என்பது சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். இதன்மூலம் திருவாரூர் பொதுமக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
- வீடியோக்கள் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்கோட்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் ஏராளமான பெண் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பெண் நோயாளிகளுக்கு நர்சிங் ஊழியர்கள் ஊசி போடுவது மற்றும் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ காட்சிகள் யூடியூப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோக்கள் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார் என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை இயக்குனரிடம் போலீசார் விசாரித்தபோது மருத்துவமனையின் சி.சி.டி.வி. சர்வர் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






